வணக்கம் தோழர்களே,
மீண்டும் ஓர் மாந்திரீக பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
நவக்கிரக தோஷத்தால் இன்று பலரும் படும் பாடு மிகவும் கொடுமையானது. இதுதான் சந்தர்ப்பம் என்று அவர்களிடம் பணம் பறிக்கும் பூசகர் ஒருபக்கம் ஐயர் ஒருபக்கம் சோதிடர் ஒருபக்கம் என பட்டியல் நீண்டு செல்கிறது. அப்படி பணத்தை இழந்தும் பலனில்லை என்று இனி புலம்பத்தேவையில்லை.
இது ஓர் அனுபவ கையாட்சி முறையாக எனது முன்னோர் நோயாளிகளுக்கு கிரக தோஷத்தால் வந்த பலதரப்பட்ட நோய்களையும் தீர்த்து அவர்களின் குடும்ப கஷ்டங்களை நீக்கி சுக வாழ்வை கொடுத்து ஆசி பெற்றிருக்கின்றனர்.
இது எனது அனுபவமும் தான்.
மந்திரம்.
ஓம் கங் கணபதி கவுரி புத்திராயா நம ஓம் சக்தி வினாஷக தரும புத்திராயா நம ஓம் இவரை பிடித்த நவக்கிரக தோஷமும் நிவாரணாயா சிவாய நம.
கிரிகை
பிள்ளையாருக்கு ஒரு மடையும் ஒன்பது கிரகங்களுக்கும் ஒவ்வோர் மடையும் வைத்து, அவல் கடலை வென் பொங்கல் படைத்து தேங்காய் உடைத்து தூப தீபம் காட்டி, உரியவரை முன் நிருத்தி தேங்காய் எடுத்து அதில் கற்பூரம் ஏற்றி அவர் தலையின் மேல் வைத்து 108 உரு செய்து தேங்காய் வெட்டவும்.
மேதாவிகளுக்கு குறிப்பு.
கற்பூரத்தை தொடர்ந்து பற்ற வைக்க வேண்டாம் தேங்காய் சூட்டில் வெடிப்பதுடன் தீ உரியவரின் தலையில் விழும். ஆரம்பத்திலும் இருதியிலும் பற்ற வைக்கவும்.
நன்றி
No comments:
Post a Comment