Thursday, October 24, 2013

விக்னேஸ்பரர் வாலாயம்

வணக்கம் தோழர்களே,

இதுவும் ஓர் அரிய பதிவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பெரும்பாலானவர்கள் வினாயகரையே தங்களின் இஷ்ட தெய்வமாகவும் குல தெய்வமாகவும் வழிபடுகிறார்கல் என்பதற்கு தெரு எங்கும் இருக்கும் வினாயகர் கோவில்களே சாட்சி.

அப்படி வினாயகரை வழிபடுவபவர்கள் இந்த மந்திரத்தை சித்தி செய்து வினாயகரின் ஆசியை பெறலாம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

வினாயகர் மந்திரம்

ஓம் ஓங் றீங் அங் உங் சிங் கணதேவாய நம சகல துரித பூத வாதைகளும் நசி மசி சுவாகா.

மூல மந்திரம்

ஓம் நமோ பகவதி ஐயும் கிலியும் சவ்வும் கணபதி வசி வசி சுவாகா.


அட்ஷரம்














 கிரிகை

தினமும் காலையில் வெத்திலையில் விபூதி பரப்பி அதில் அட்ஷரம் கீரி உரு 108 செய்து ( மூல மந்திரமும் சேர்த்து ) அதை நெற்றியிலும் பூசி சிறிது வாயில் போடவும். இப்படி மண்டலம் செய்யவும்.

அஷ்ட கர்ம பிரயோகத்துக்கு மிகவும் உதவி செய்வார்.

நன்றி.

3 comments:

  1. ஐயா, வாலாயம் என்றால் என்ன?
    வாலாயம் செய்த தெய்வத்தால் என்ன பயன்?? அந்த தெய்வம் எப்படி நமக்கு உதவும்??? அவ்வாறே தெய்வ வசியத்தைப் பற்றி சொல்லவும்.

    இதுபற்றி ஏற்கனவே நீங்கள் தந்த விளக்கம் புரியவில்லை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தம்பி,

      மாந்திரீகம் பற்றி சற்றேனும் உங்களுக்கு தெரிந்தால் தான் இவ்வாறான பதிவுகள் உங்களுக்கு புரியும். விளக்கங்கள் முழுமையாக எழுதுவது என்பது எனது வேலைப்பளுவுடன் கடினமாக இருக்கிறது. அதனால் தான் புதிய பதிவுகள் வர தாமதமாகிறது.

      இருப்பினும் ஒவ்வொரு வாசகரும் பயனடய வேண்டும் என்பது தான் எனது நோக்கம், சற்று காத்திருங்கள் முழுமையான ஓர் பதிவு எழுதுகிறேன்.

      நன்றி.

      Delete
  2. இன்றுதான் தங்கள் வலையை படிக்க நேரிட்டது.மிகவும் நல்ல சேவை தொடர்ந்து செய்யுங்கள் தனிப்பட்ட ‌முறையில் எனக்கு மிகவும் பலனுள்ளதாக உள்ளது நன்றி

    ReplyDelete