வணக்கம் வாசக நெஞ்சங்களே,
உடல் பருமன் தொடர்பான பல தகவல்கள் பலதரப்பட்ட இணையத்தளங்களிள் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவரும் சரியான மருந்தை பதிவிட்டுள்ளதாக தெரியவில்லை.
உணவுக்கட்டுப்பாடு தொடர்பாகவே எழுதி இருக்கிறார்கள். அதை சாப்பிடாதே, இதை குடிக்காதே, அதிகமாக தூங்கவேண்டாம் இப்படி பல பல ஆலோசனைகள் தரப்படுகிறது. ஆனால் அதற்கான மருந்து எது என்று யாரும் கூறுவதில்லை.
உணவுக்கட்டுப்பாடு மருந்தில்லாத போது எப்படி பலன் தரும். இருக்கும் உடலை அது மேலும் வளராது கட்டுப்படுத்தும் ஆனால் மருந்து தானே உடலை சீராக்கும்.
அப்படி உங்கள் கவலை இனி தேவையில்லை. தூ துவலை எனும் இந்த கற்ப மருந்தை முறைப்படி மண்டலம் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்.
தூ துவலை செடியை பலருக்கும் தெரியும் என்ற காரணத்தால் அதன் படம் இங்கு தரவில்லை.
செய்முறை
தூ துவலை செடியை சமூலமாக பிடுங்கி (அதாவது ஆணி வேர் முதல் பூ காய் கனி வரை அனைத்தும் சேர்ந்தது) நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து வண்டு கட்டி பிட்டவியலாக அவித்து மீண்டும் சூரணித்து நன்கு உலர்ந்த மூங்கில் குடுவையில் அடைத்து இரு வாரம் கடந்த பின் அந்த சூரணத்தை மூவிரல் பிரமானம் எடுத்து வலது உள்ளங் கையில் வைத்து சுத்தமான தேன் ஒரு தேக்கரண்டி வீதம் கலந்து அதிகாலையில் மட்டும் சாப்பிடவும்.
ஒரு மண்டலம் என்பது 40 நாள் என சிலரும் 48 நாள் என சிலரும் சொல்கின்றனர். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி.
உணவுக்கட்டுப்பாடுடன் முறைப்படி செய்யின் நல்ல பலன் கிடைப்பது உறுதி.
உணவு கட்டுப்பாடு என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா.
நன்றி
No comments:
Post a Comment