Thursday, October 3, 2013

அஞ்சனம் (மை) இரகசியம் இனி இல்லை.

வணக்கம் தோழர்களே,

பலரும் மறைத்து வைத்திருக்கும் அஞ்சனம் தொடர்பான இரகசியங்களும் அவற்றின் மந்திரங்களும் உங்களுக்காக.

தமிழரின் பாரம்பரியத்தையும் அவர்களின் விஞ்ஞானத்தையும் உலகுக்கு மறைவின்றி கூறுவதெ எனது நோக்கம். இந்த பதிவுகளை தயவு செய்து வேறு இடங்களில் உங்களது பதிவு என்று  பதிவிடவேண்டாம்.

 அஞ்சனம் என்பது இலகுவான விடயம் அல்ல என்பதை முன்கூட்டியே எழுதியிறுக்கிறேன்.

இருப்பினும் மறைப்பு என்பது என்னிடத்தில் இல்லை என்பதற்கான சாட்சிதான் இது. 

 பின்வரும் முறையை சரியாக செய்யின் இது வெற்றிதரும் என்பதில் மாற்றம் இல்லை.

மாந்திரீகத்தை பொறுத்தவரை குரு இன்றி எதையும் செய்து முடிக்க இயலாது ஆயினும் இத்தலத்தில் இருக்கும் ஏதொறு விடயத்தையும் செய்ய விரும்புபவர்கள் உங்களது தூய்மையான மனதுடன் அகத்தியரையும் அடியேனை ஒரு கனம் நினைத்து ஒரு வெற்றிலை பாக்கு பழம் பூ இவைகளை மடையாக வைத்து வணங்கிவிட்டு இச்செயல்களிள் ஈடுபடவும்.

மை ஒன்றினை அரைத்து எடுப்பது என்பது சற்று கடினமான முறைதான் அதனுடைய கைபாகம் செய்பாகம் தெரியவேண்டும். அதற்கான ஒலி ஒளி காட்சியை விரைவிள் தருகிறேன்.

கீழ் உள்ள முறைப்படி செயற்படவும்.

முதலிள்

பிள்ளையார் மடை வைக்க மந்திரம்

ஓம் அரகர ஆனந்த நமசிவாயா நம சக்தி மகாகணபதியே நம சக்தி மகா காளியே நம அகோர அஞ்சனாதேவியே ஓடி வா வா சுவாகா. 

நெல்லிள் அட்ஷரம் கீரி மடை வைக்கவும்.

இரண்டாவது

குரு மடை வக்கவும் 

ஓம் குரு வாழ்க ஓம் குரு வம்சம் வாழ்க ஓம் என் ஆசான் வாழ்க எவரை மறவினும் குருவை மறவேன் எவ்வேலை மறவினும் குருவேலை மறவேன் எவர் ஆணை மறவினும் குரு ஆணை மறவேன் என் குரு முன் நிற்கவே சிவாகா. 

 மூன்று முறை வணங்கி மடை வைக்கவும்.

அஞ்சனாதேவிக்கு கும்பம் வைக்க மந்திரம் 

ஓம்  கங் கணபதி கௌரி திரிய கரிய சிலம்பு கலீர் கலீர் என திரிபுர சுந்தரியே மாயி ஒருகையில் திரிசூலம் கொண்டு ஏறம்மா ஏறு சுவாகா. 

பச்சரிசியில் அட்ஷரம் கீரி உரு 21 செய்து கும்பம் வைக்கவும்.
கும்பம் வைக்கும் முறை முன்பே கூறியுள்ளேன்.

மை அரைக்கும் அம்மியை வைப்பதற்கு அட்ஷரம் உண்டு.


அட்ஷரத்தை அரிசிமாவினாள் கீரி அதன் நடுவில் வென்மையான் பூ ஒன்று வைத்து அதில் ஒரு ரூபாய் குத்தி காசு வைக்கவும். 

நான்காவது

அனுமாருக்கு மடை வைக்க மந்திரம்

ஓம் கிறேத திறேத அனுமந்தா வா வா சிவாகா.

அரிசியில் அட்ஷரம் கீரி அழகு மடை ( நிவேதனம் திருப்தியாக இருக்கவேண்டும்) வைக்கவும்

மை அரைப்பதற்கான மந்திரம் 

ஓம் கிறீயும் அருள்மரு கிடாயா சிறீயும் ராமதூதா அஞ்சனதேவி வாயு புத்திராயா சிறிமுக அனுமந்தே இம் மையில் ஏற ஏறவே சிவாகா. 

இம் மந்திரத்தை 1008 முறை கூறியவாரு மையை அரைத்து எடுக்கவும்.

அரைத்த மையை கொம்புச்சிமில் அல்லது தங்கச்சிமிலில் பதனம் பன்னவும். அம்மியில் இருந்து மையினை கையில் படாதவாறு கவனமாக அரைக்கவும் பின்னர் அதை சிமிலிள் அடைப்பதற்கு பச்சை குச்சி ஒன்றினை பயன்ப்டுத்தளாம்.

மையை அம்மியில் இருந்து வழித்து சிமிலிள் அடைக்க மந்திரம்

ஓம் இந்திரன் அங்குசன் ஈசானன் வருணானந்த குபேரன் நிருதி ஈசான கவுசாயா நம.  

பின்னர்

வெற்றிலையில் உள்ள நரம்புகள் ஒற்றை இலக்கமாக வரும்படியான ஒன்றினை எடுக்கவும். அதில் எந்த வித சேதாரமும் இருக்க கூடாது. 

வெற்றிலையை சாப நிவர்தி செய்யவும்

வெற்றிலையில் மையை தடவி பிரணவம் செய்ய. 

ஓம் அங்ங உங்ங அனுமந்தாயா வாவா சங்கு சக்கரத்திணாணை வாவா உன்பிதா சர்வேஸ்பரணாணை என் மைக்கு நீயே முன் நிக்கவே சிவாகா.

வெற்றிலையில் ஏதாவது இரு நரம்புகளுக்கிடையிள் வட்ட வடிவான பொட்டு வைத்து அதனுல் விளக்கு சுடரில் பார்க்கவும்.

உரு 108 செய்து பார்க்கவும்


மையில் அனுமாரை அழைக்க மந்திரம்.

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் கிலியும் ஐயும் வா அஞ்சனாதேவி அனுமந்தா அண்டம் பிளந்தோடு ஆகாசம் பிளந்தோடு பூமி பிளந்தோடு பூமாதேவி பிளந்தோடு உன்னையும் என்னையும் படைத்த பரமேஸ்பரன் ஆணை ஓட ஓடவே சிவாகா.

மையில் முதலில் பிள்ளையாரை அன்போடு அழைக்க அவரின் உருவம் தெரியும் அவரை வணங்கி, பின்னர் அஞ்சனாதேவியை அழைத்து வணங்கி, பின்னர் அனுமாரை அழைத்து வணங்கி அவருக்காக வைத்திருக்கும் மடையில் உள்ள காய் கணிகளை உண்ணச்சொல்லி அவரிடம் ஆசி வாங்கி அதன் பின்னர் அவரிடம் உங்களுக்கு தேவயான விடயத்தை கேட்களாம்.


 இதுல் உபயோகிக்கும் அட்ஷரங்கள்






















































1. அம்மி வைக்க
2. அஞ்சனாதேவி கும்பம்
3. பிள்ளையார் மடை
4. அனுமார் மடை



இந்த முறை பொதுவானது அடுத்த பதிவில் மை அரைப்பதற்கான மூலிகைகளை பற்றி பார்க்களாம்.


திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்



2 comments:

  1. I need that Mai iyya pls reply me and share your number reena972008@gmail.com

    ReplyDelete