Wednesday, October 16, 2013

பேய் பசாசு சூனியம் - தண்ணீர் ஓதி எறிய

வணக்கம் தோழர்களே,


இன்று இன்னும் ஓர் முக்கிய பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன். 

பில்லி சூனியம் பேய் பசாசு என்று பாதிக்கபட்டவர்களுக்கோ அல்லது அவர்களின் வீடுகளுக்கோ இந்த மந்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் ஓதி எறிய அவ்விடத்தில் இருக்கும் சகல துட்ட தேவதைகளும் விலகும்.

நாகபாசம் எனும் ஓர் அஸ்திர மந்திர பிரிவில் வரும் இம் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. தடைகளை வெட்டவும் எதிரிகளை நாசம் செய்யவும் தன்னை பாதுகாக்கவும் பயன்படும் உயர் சக்தி வாய்ந்த மந்திரங்களின் வரிசையில் முதலிடம் பிடிப்பதும் இந்த நாகபாசம் எனும் நாக அஸ்திரம்.

இது சிவனின் கையில் இருக்கும் அஸ்திர (ஆயுத) வகைகளில் ஒன்று.

இதில் பல பிரிவுகள் இருக்கின்றன தற்போதைக்கு இதை படியுங்கள் நேரம் வரும் போது மற்றவை தரப்படும்.

மந்திரம்

ஓம் அரி அரி நாக பாசம் திரிபுர நாக பாசம் சிவனேறு நாக பாசம் பஞ்சாட்சரத்தின் ஆணை கட்டு அவ்வும் கிலியும் றீயும் கிலியும் றீயும் மிறீயும் கொண்டு முனிவர் ஆணை கட்டு நூற்றி ஒரு வயிரவனையும் கட்டு இருபத்தி ஒரு கரையாக்கனையும் கட்டு ஏழு கன்னிமாரையும் கட்டு மாடனை கட்டு காளியை கட்டு இருளனை கட்டு காடேரியை கட்டு கம்பளிவயிரவனை கட்டு எட்டு திக்கும் பதினாறு கோணங்களிலும் வரப்பட்ட சர்வ துட்ட தேவதைகளையும் கட்ட கட்டவே சிவாகா.

கிரிகை

உரு 108 செய்து தண்ணீர் ஓதி எறியவும்

எப்படிப்பட்ட சூனியங்களும் விலகும்.

நன்றி



5 comments:

  1. ஐயா,

    தண்ணீர் மட்டும் போதுமானதா? அதனுடன் மஞ்சள், பன்னீர் சேர்க்க வேண்டுமா?

    விளக்கவும்.........

    மந்திர உரு கொடுக்க வெத்திலையில் தண்ணீர் ஓதுதல் முறையை சிரமம் பாராமல் விரைவில் விளக்கவும்.

    உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன்..............

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தம்பி,

      தண்ணீர் ஓதும் போது அதற்கான சகல பனிவிடையும் செய்து தானே உரிய உச்சாடனத்தை செய்ய வேண்டும்.

      வெத்திலையை பயன்படுத்தி ஓதுதலிள் என்ன சந்தேகம் உங்களுக்கு என்று புரியவில்லை.

      நன்றி

      Delete
  2. ஐயா,

    மந்திர சித்தி கிரிகையில் தண்ணீர் ஓதுதல் பற்றி கேட்கிறேன்.

    தண்ணீர்ல் என்ன மந்திரம் எப்படி பயன்படுத்த வேண்டும்? (புரிதல் வேண்டி). விளக்குவிற்கள் என்ற நம்பிக்கையில்....................

    நன்றி

    ReplyDelete
  3. அனைவருக்கும் தேவயான பதிவு நன்றி அய்யா

    ReplyDelete