தோழர்களுக்கு வணக்கம்.
வீட்டில் குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுத்தவாறு இருந்தாள் அவர்களின் தேகம் மிக வேகமாக நலிவதுடன், கலைத்து சோர்வடைந்து உடல் பலம் கெட்டுவிடும்.
அதற்கு இது ஓர் நிரந்தர தீர்வாக அமயும்.
வாகட தொகுப்பு
“ பூட்டுகிறேன் குழந்தைகட்கு வாந்திகண்டால் பூவென்ற கிராம்பு மதிவிடயம் திப்பிலி நாட்டுகிறேன் மயிலிறகு சுட்டசாம்பல் நன்றாக பொடியேசெய்து தேனில்சேர்த்து ஊட்டவே வாந்தியது ஒழிந்து போகும் உண்மையிது உறுதிமெத்த.....”
விளக்கம்
கிராம்பு 5 கிராம்
அதிவிடயம் 5 கிராம்
திப்பிலி 5 கிராம்
மயிலிறகு சுட்ட சாம்பல் 5 கிராம்
இவைகளை தூள் செய்து வைத்துக்கொண்டு அவற்றில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து சுத்தமான தேனில் குலைத்து குழந்தைகளின் நாவில் தடவி விடவும்.
சுத்தி
மயிலிறகு எடுக்கும் போது அதில் இருக்கும் நரம்புகளை நீக்கவும்.
கிராம்புவின் மொட்டினை அகற்றவும்.
திப்பிலியையும் அதிவிடயமும் நன்றாக நீரில் அலம்பி சற்று வறுத்து உலர்த்தவும்.
குறிப்பு
திப்பிலி சுத்திகரிக்கும் முறை வேறு அனால் இம் மருந்துக்கு இது போதும்
இது மிகச்சிறந்த வாந்தி கட்டும் மருந்து.
என்றும் அன்புடன்.
நன்றி
அன்புள்ள ஐயா
ReplyDeleteஒரு வேலை அவசியமில்லாத வலை தளத்தை ஆரம்பித்து பதிவுகளை இடுகிறோமோ என்ற சந்தேகம் வந்து விட்டது.???????????????
உங்களது பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறோம்.எங்களது அன்பு வேண்டுகோள் பதிவுகளை தொடருங்கள் முடிந்தால் ரசமணி தோஷம் போக்கவும் கட்டவும் எளிய முறை கூறவும்
இப்படிக்கு என்றும் அன்புடன்
ஜெ .செந்தில்குமார்
லண்டன்
ஐயா,
ReplyDeleteநல்ல தகவல்