அன்பான வாசக தங்கங்களே,
இரசமணி பற்றி முன்னமே நாம் கூறியிருக்கிறேன், அது ஒன்றும் சின்ன விடயம் அல்ல. அது பற்றி ஓர் ஆய்வு கட்டுரையே செய்து என்னிடம் உள்ளது அது 8000 சொற்களை கொண்டது நேரம் வரும்போது விளக்கமாக பதிவிடுவேன்.
பல வலைத்தளங்களில் இரசமணி பற்றி விளக்கங்கள் இருக்கின்றது தானே, அதில் உங்களுக்கு திருப்தி இல்லையா?
இரசம் கட்ட வோண்டுமானால் உதவி செய்கின்றேன் ஆனால் சாரணைகள் செய்து அதன் பலனை அடைய நானே இன்னும் முயற்ச்சி செய்யவில்லை.
இரசமணி , இலிங்கம் என பல வடிவங்களை செய்து காட்டுவது மிக இலகுவானது ஆனால் அதன் சக்தியை பெறுவது மிகவும் கடினம். இரசமணி கட்டியதன் பலனாக இறந்தவர்களையும் துன்பத்தில் வாடுபவர்களும் தான் அதிகம் நான் பார்திருக்கிறேன்.
தவறாக கட்டிவிட்டால் உங்கள் கதி அதோ கதிதான். இரச வாதம் என்பது மிகப்பெரிய விஞ்ஞானம் ஆகையால் ஆபத்தும் அதிகமாகவே இருக்கும்.
சிவ சொத்து குல நாசம் என்பது அதனால் தான். என்னை கேட்டால் சர்வ நாசம் என்றே கூறுவேன்.
நனோ தொழில் நுட்பம் கூட ஆபத்தானது இல்லை ஆனால் இது மிகவும் ஆபத்தானது.
சித்தர் பாடல்களை படித்துவிட்டு செய்ய முயன்று வாழ்வை இழந்துவிட வேண்டாம்.
உண்மையான குருவும் இறைவனின் ஆசியும் இருந்தால் எல்லாம் கிட்டும். காத்திருங்கள் சில காலம் அனைத்தும் சாத்தியமே.
ஒரு வாகட பாடல்
” கொள்ளவே முன்வைத்துத் துருசுச்சுண்ணம்
கொடிபடவே விராலியிலைக் கிட்டால் நீராக
துள்ளவே சூதந்தான் பலமும் நாலு
துடியாக வயக்கரண்டி தன்னிலூற்றி
கள்ளவே துருசிட்ட சாற்றைவிட்டு
கனமாக கொதியிடவே சூதம்கட்டும்
..........................................................................
.......................................................................... ”
இப்பாடல் இரசமணி செய்ய அல்ல இரசம் கட்ட மட்டுமே என்பது ஞாபகம் இருக்கட்டும். அது மட்டும் அல்ல இவருக்கு தெரியாததால் பிதற்றுகிறார் என்று என்னியவர்களுக்காகவும் தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. அடியேனே பல சூடு பட்டிருக்கிறேன்.
மீண்டும் ஓர் சூடு பட ஆசை இல்லை.
படத்தை பார்த்தல் என்ன புரிகிறது.
”தென் நாடுடைய சிவனே போற்றி”
மிக்க நன்றி.
திரு சிவ ஸ்ரீ மா. கோ. முதலியார்
What is said in this post is true. P.Karthigayan,Chennai.
ReplyDelete