வணக்கம் தோழர்களே,
எனது பதிவுகள் அனைத்தும் என்னுடை முன்னோர்களின் (பரம்பரை) வாகடத்தொகுதியில் இருந்து மட்டுமே பதிவிடுகிறேன். அதனால் வேரு தளங்களில் இப்பதிவுகளை பிரதி செய்பவர்கள் தயவு செய்து நிருத்தவும்.
தகவல் பரிமாற்றம் செய்ய விரும்பின் இத்தலத்துக்கான முகவரியை மட்டும் பதிவிடவும்.
வசுவாசி சூரணம்
இது சிறுவர் முதல் பெரியோர் வரை பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாத்து நீண்ட நாள் நோயின்றி வாழ உதவும்.
அதாவது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உணவுப்பொருட்கள் இலகுவில் செமிபாடடையச் செய்யும்.
வயிற்றில் ஏற்படும் அநேக நோய்களை சரி செய்யும்.
வாய் துர் நாற்றம் மாரும்,
உடல் வலுப்பெரும்,
பெண்களின் சூதக தடை விலகும்,
மாத விலக்கு சீராகும்,
மேனி வாசம் வீசும்,
இப்படி பல தன்மைகளை கொண்டது.
சரக்கு வகை
ஏலம்
லவங்கம்
மரமஞ்சல்
அதிமதுரம்
நற்சீரகம்
சிறு நாகப்பூ
சுக்கு
மிளகு
கடுகு
திப்பிலி
இவை சம இடை அதாவது தேவைக்கேட்ப எடுக்கவும் ஆவம்ப நிலையில் 5 கிராம் வீதம் எடுக்கவும்.
இதன் மொத்த இடைக்கு வசுவாசி எடுக்கவும்
செய்முறை
கண்டிப்பாக சுத்தி செய்ய வேண்டிய சரக்குகள் இதில் இல்லாத போதும் பொதுப்பிரயோக முறையாக அனைத்து சரக்குகளையும் சூரணம் செய்து துணியால் வஸ்திரகாயம் (அரித்து) எடுக்கவும்.
பின்னர் துணியில் வண்டாக கட்டி பசுப்பாலிள் பிட்டவியலாக அவித்து (ஒரு மணி நேரம்) எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தவும்.
இதில் 1/2 தேக்கரண்டி சூரணத்தை தேனில் கலந்து தினமும் காலையில் உண்டு வர சர்வ ரோகங்களும் நீங்கி சுகம் தரும்.
நன்றி
திரு சிவஸ்ரீ கோவாணா முதலியார்
சித்த வைத்தியர்
No comments:
Post a Comment