அன்பான வாசகர்களுக்கு,
சில வீடுகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை மற்ற சிறுவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து கவலையடைவதுண்டு. மற்றக்குழந்தைகள் குஸ்டியாகவும் அழகாகவும் இருக்கிறார்கள் எனது குழந்தை எலும்பும் தோலுமாக இருக்கிரானே, எதைக்கொடுத்தலும் சாப்பிடுறான் இல்லை என்று மற்றவரிடம் கூரி கவலைப்படுகிறார்கள். இனி அந்தக்கவலையும் வேண்டாம்.
இந்த இலேகியத்தை செய்து உங்கள் குழந்தைகலுக்கு கொடுத்துபாருங்கள் பின்னர் உங்கள் வீட்டில் மலிகை கடை செலவு அதிகமாகிவிடும். காரணம் சிறுவர்கள் உங்கள் விருப்பப்படி அதிகமாகவே திண்று தீர்ப்பார்கள்.
சரக்கு வகை
தண்ணீர் விட்டான் இலைச்சாறு 1/2 லீட்டர் - சாத்தாவாரி
வென்மறியின் பால் 1/2 லீட்டர் - வெள்ளையான செம்மறி ஆடு
வென்பசுவின் பால் 1/2 லீட்டர்
தேங்காய் பால் 1/2 லீட்டர்
சுத்தமான பசு நெய் 1/2 லீட்டர்
சீனி 1/2 கிலோ
கற்கண்டு 1/2 கிலோ
பேரீச்சம் பழம் 1/4 கிலோ
சுத்தமான குங்குமப்பூ தூள் 10 கிராம்
திப்பிலி சூரணம் 10 கிராம்
சுக்கு சூரணம் 10 கிராம் - வேர்கொம்பு
செய்முறை
இலைச்சாறும் பால் வகைகளும் சேர்த்து வாய் அகன்ற மண் சட்டியில் வைத்து அடுப்பில் 1/3 பங்காக வரும்வரை காச்சி அதன்பின்னர் சூரணங்களை தூவி நன்றாக கிலரி அதன் பின் சற்று நெய் இட்டு பிறட்டவும் பின்னர் சீனி கற்கண்டு பழம் இவைகளை சேர்த்து கிண்டவும் தேவைக்கு ஏற்ப நெய் சேர்த்து மெழுகு பதத்தில் இறக்கி துனியால் வடிகட்டி பாத்திரத்திள் அடைக்கவும்.
சீனி கற்கண்டு பேரீச்சம் பழம் இவற்றை கிறைண்டரில் சேர்த்து அரைத்து எடுத்தல் இலேகியம் பதுமையாக வரும்.
இதை தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பாட்டின் முன் சிறுவர்களுக்கு கொடுக்க உங்கள் குழந்தையும் குஸ்டியாகவும் மிக அழகாகவும் மொலு மொலு என வளர்வார்கள்.
கற்பினியாக இருக்கும் காலங்களில் இதை ஒரு மண்டலம் திண்றல் அழகான குழந்தை கிடைக்கும். முதல் ஐந்து மாதங்களுக்குள் எடுக்க வேண்டும்.
இது எனது கைகண்ட மருந்து.
நன்றி
No comments:
Post a Comment