வணக்கம் தோழர்களே,
பேய் விரட்டல் பற்றி பல விதமான கருத்துக்கள் இருக்கிறது அதில் எனது 20 வருட அனுபவத்தையும் கருத்தினையுமே இங்கு பதிவிடுகிறேன்.
முதலில் பேய் என்பது என்ன என்ற தெளிவான விபரம் தெரிந்தால் மட்டுமே அதை பற்றி பேச வேண்டும். ஒருவருக்கு நண்பராக இருக்கும் நபர் மற்றவருக்கு எதிரியாக இருக்கலாம் அல்லவா ! அதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் அவர் தேவைக்காக வாலாயம் மற்றும் வசியம் செய்யும் தேவதைகள் மற்றவருக்கு பேயாக தெரியலாம், ஆகவே பேய் பற்றி பேசமுதல் நீங்கள் வணங்குவது மட்டுமோ அல்லது ஆலய வழிபாடு இல்லாத தேவதைகளோ பேய் என்ற முடிவுக்கு வந்துவிட கூடாது.
இதற்கு மாராக தனியாக பேய் என சில கலைகளும் இருக்கின்றன அவற்றில் வண்ணாரப்பேய்கள் ஊத்தைக்குடி பேய்கள் கொல்லி வாய் பேய், குறளிப்பேய்களும் என பல பிரிவுகள் இருக்கின்றன.
இவை தவிர தேவதைகளின் மாறுபட்ட செயட்பாடும் அவற்றின் தன்மைகளையும் வைத்து அவற்றில் பல மனிதருக்கு தரும் தொல்லைகலாலும் அவற்றையும் பேய் என கருதும் நிலையும் இருக்கிறது.
அஷ்ட கர்ம பிரயோகத்தில் 5 வித கலைகள் மனிதருக்கு தீங்கு விளைவிற்க கூடியவையாகவே இருக்கின்றன. அதனால் பேய் விரட்டல் என்பது சட்டென முடிவெடுத்து செய்வதோ அல்லது ஒரு மந்திரத்தால் முடிவதோ அல்ல. அதில் நிறைய பகுதிகளும் முறைகளும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒரே பதிவில் தருவது கடினமானது இருப்பினும் சில பொதுவான முறைகளும் இருக்கின்றன அவற்றை ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன்.
பேய் பசாசு பில்லி வஞ்சனை சூனியம் இவை யாவும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவையே ஆகையால் முதல் பதிவு ஒன்றில் இது தொடர்பான ஓர் அரிய மந்திரத்தை பதிவிட்டுள்ளேன் அதை படியுங்கள் அனைத்துவிதமான பேய்களும் அதற்கு கட்டும்.
சில குறிப்பிட்ட பூசை முறைகள் இதற்காக இருக்கிறது அதை தெரிந்து கொண்டால் அனைத்து வகை பேய்களையும் விரட்டலாம். ஆனால் அது உங்களது இஷ்ட தேவதையாக இருந்தாள் எப்படி அடித்து விரட்டுவது. அப்படி விரட்டினால் அது உங்களிடமும் வராது அல்லவா.
உதாரணமாக காளி உங்கள் வாலை தெய்வம் என்று வைத்துக்கொள்வோம், இப்போது ஒருவருக்கு காளியை வைத்து சூனியம் அல்லது செய்வினை செய்யப்பட்டுள்ளது என்றால், அவரின் மேல் பார்வையாக உள்ள காளியை விரட்டுவது உங்களின் வாலையை விரட்டுவதும் ஒன்றாகும் அல்லவா.
காளி சூனியத்துக்கு உதவுமா என்று மட்டும் கேட்காதீர்கள் அப்படி கேட்டால் நீங்கள் பேய் விரட்ட தகுதியற்றவர் என்றும் கற்கவேண்டியது அதிகமாக இருக்கிறது என்றும் அர்த்தம்.
சிந்தியுங்கள் மற்ற ஓர் பதிவில் மேலும் விளக்கமாக பேசுவோம்.
நன்றி
No comments:
Post a Comment