வணக்கம் தோழர்களே.
கடந்த இரண்டு நாட்கள் கடுமையான வேலை காரணமாக புதிய பதிவுகளை இட முடியாது போனது.
இன்று இன்னும் ஓர் அரிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிக மகிழ்ச்சி.
” எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய் பொருள் கான்பதரிது ”
என்ற கூற்றுக்கேட்ப, எவ் வலைத்தளத்திலும் இருக்கும் தகவல்களையும் அப்படியே நம்பிவிடாது அதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து பின்னர் முடிவெடுக்க வேண்டும்.
இது எனது வலைத்தத்திள் இருக்கும் தகவல்களையும் சேர்த்தே என்பது உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.
பல வலைத்தளங்களில் மாந்திரீகம் என்ற பேரிலும் வைத்தியக்குறிப்பு என்ற பேரிலும் சம்பந்தம் அற்ற தவரான தகவல்கள் தான் இருக்கின்றன. என்பது மிக வேதனைக்குறிய விடயமாகும்.
இன்னும் சிலர் சித்தர் பாடல்களை விரிவாக்கம் செய்கின்றோம் என்ற பேரில் அதன் பரிபாசையில் சிக்கி தவரான கருத்துக்களை எழுதுகின்றனர்.
இன்னும் சிலர் வழலை குருமருந்து ரசமணி முப்பூ ரசவாதம் என்ற பேரில் பாதி செய்முறையை காட்டி மீதிக்கு தங்களை தொடர்பு கொள்ள சொல்கிறார்கள்.
இப்படி பல குழப்பங்கள் உள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது உங்கள் நன்மைக்கே.
நன்றி.
No comments:
Post a Comment