Tuesday, December 31, 2013

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

அண்பு வாசகர்களே,

அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாககர் கேள்விகள் எனது மின்னஞ்சலில் குவிந்து கிடக்கிறது, ஆனால் யாருக்கும் பதில் தரவில்லை என்று நினைக்க வேண்டாம், விரைவில் தளம் சீராக செயல் படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.



















நன்றி

மா.கோ. முதலியார்
சித்த வைத்தியர்.

Sunday, December 22, 2013

அன்பு தோழர்களே

வணக்கம் தோழர்களே,

அடியேனின் இட மாற்றம் காரணமாக எதிர் வரும் பொங்கல் தினம் முடியும் வரை புதிய பதிவுகளையோ அல்லது வாசகர்கள் கேட்ட கேள்விக்கோ பதில் எழுத நேரம் போதாத நிலையில் இருப்பதால் அன்பு வாசகர்கள் தவறாக் நினைக்க வேண்டாம். 

குடும்பத்தாருடன் வருட முடிவையும் வருட ஆரம்பத்தையும் அனைவரும் இனிதே கொண்டாட எனது வாழ்த்துக்கள். 

நன்றி.


Wednesday, December 18, 2013

காளிக்கு பலி கொடுக்க மந்திரம்

வணக்கம் தோழர்களே,

இன்று காளி எனும் தேவதைக்கு பலி கொடுக்கும் முறை ஒன்றினை பார்க்களாம்.

பொதுவாக பலி இடுதலில் ஈடுபாடும் விருப்பமும் இல்லாதவன் நான் அதிலும் உயிர் பலி இடுதலில் முற்றாக வெருப்பவன். ஆனால் குருமாரிடம் ஓர் கல்வியை பயிலும் போது அனைத்தையும் முளுமையாக கற்க வேண்டும் என்பதற்காக படித்து வைத்த சில விடயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பலியிடலின் சாரம் இதுதான், குறிப்பிட்ட தேவதைகளை உபாஷனை செய்யும் மாணவர்கள் அந்த தேவதைகளை தங்கள் வசம் அதிக ஈடுபட்டை காட்டவும் அதற்கு விரும்பிய உணவுகளை கொடுக்கவும் பயன்படுத்தும் முறைகளில் ஒன்றே இது.

இந்த மந்திரம் காளியை உபாஷனை செய்யும் எவரும் பயன்படுத்த முடியும், அத்துடன் காளியின் பல அவதாரங்களும் இந்த மந்திர முறையில் அடங்கும். அதுதவிர எந்த பலி பூசையும் செய்ய முடியும் ஆனால் அடியேனின் வேண்டுகோள் தயவு செய்து உயிர்களை பலியிட வேண்டாம். அதற்கு பதிலாக பழ வகை, தேன், சக்கரை பொங்கள் போன்றவற்றை பலியிட்டு பலனடையவும். அதுவே சிறந்த முறையுமாகும்.

பலியிடும் விதம் எப்படி என்பதை உங்கள் குருமாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

மந்திரம்

ஓம் காளி மாதங்கி றிங்ங வா சீக்கரம் வா ஆயி சூலி சிங்க வாகினி சீக்கரம் செண்டேறு செண்டேறு இசங்கு இசங்கு சாடு சாடு எட்டு காளி என்னடி அம்மே கூப்பிட்டால் ஓடி வா நரபலி உண்ணு மது மாங்கிச சக்தி மது பலி உண்ணு நரசிங்க ரூபி இரணிய சங்ஙாரி இரத்த பிடாரி வங்ங வங்ங வடுக பத்திரகாளி சீக்கரம் வா வா இந்தா பலி உண்ணு சுவாகா.

கிரிகை

பூசையின் நிறைவில் தேவையானவற்றை அக்கினியில் பலி இடலாம். மூன்று முறை மந்திரம் சொல்லி பின்னர் அக்கினியில் போடவும். 

நன்றி

Thursday, December 12, 2013

உக்கிர வீர சக்தி எனும் மகா மந்திரம்

வணக்கம் தோழர்களே,

எனது இடமாற்றம் காரணத்தால் கடந்த வாரம் புதிய பதிவுகளையும் வாசகர் அஞ்சலுக்கு பதில் எழுதவும் நேரம் போதாது போனது. இனி வரும் நாட்களில் புதிய பதிவுகள் எப்போதும் போல் கிடைக்கும். 


மந்திரம் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அவசியமான ஓர் பதிவாக இது இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

உக்கிர வீர சக்தி என்பது அஸ்திர வகை மந்திர வரிசையில் முருகப் பெருமானால் பயன் படுத்தப்படும் ஓர் ஆயுதம். இதையே அனைவரும் வேல் என்று கூறுவர். சூர சம்காரம் செய்ய ஆதி சக்தியாகிய பார்வதி தேவி தனது சக்தியை ஒன்று சேர்த்து முழு பலத்துடன் ஓர் ஆயுதமாக்கி அதை கந்தர் கையில் கொடுத்தார் என்று புராணம் கூறுகிறது. அதுவே அவர் கையில் இருக்கும் வேலாயுதம். அதை பிரயோகிக்கும் மந்திரமே இது.

எப்படிப்பட்ட தடைகளையும் தகர்தெரியும் சக்தி இதற்கு உண்டு என்றால் மிகையாகது. எனது அனுபவத்தில் பலதரப்பட்ட மந்திர கட்டுக்களில் இருந்து வெளிவர பயன்படுத்தும் உயர் வகை மந்திர வரிசையில் இதுவும் ஒன்று.

இது இரண்டு தனி மந்திரங்களை கொண்டது, அதில் முதல் மந்திரம் இது.


உக்கிர வீர சக்தி - மந்திரம் 

ஓம் ஸ்ரீயும் மிறீயும் ஸ்ரீயும் கிலியும் சவ்வும் நவ்வும் சரவணா சண்முகா சாடு சாடு சங்கரி சங்கரி சிரித்த வாயும் விரித்த சடையும் சென்னிர முகமும் பன்னிரு கண்ணும் அகண்ட மார்பும் இருண்ட கண்டமும் அக்கினி கண்ணால் அனல் மழை பொழிய உக்கிர சங்ஙாரம் செய்கிற போது சக்கர வாளம் போல் வலைந்து கட்டிய மாயா பாசத்தை சங்ஙரிக்க என்று என்னி உன் தாய் தந்த உக்கிர வீர சக்தியை ஓம் ஸ்ரீயும் மிறீயும் சிங்ங யங்ங நமசிவாயா நசி நசி என்று வேல் விட்டு சங்ஙரித்தால் போல் என் சத்துருவானவனை என் முகம் நோக்கி அவனை அழித்திடு புவனை கெடுத்திடு எத்தி ஈரலை இழுத்து பிடுங்கிடு சக்தி வேல் கொண்டு சூரன் நெஞ்சை பிளந்து இரணக்குடலை வாங்கினால் பொலே என் சத்துருவை வாங்கு வாங்கு சர்வ வங்ங நங்ங சர்வ நமசிவாயா சிவலிங்கத்தின் ஆணை சர்வ தடைகளும் அறு பட்டு தெரிக்கவே சிவாகா. 

ஓம் ஸ்ரீயும் மிறீயும் சண்முகா என் சத்துரு நாச நாச மாகவே சிவாகா.


அட்ஷரம்

அறுகோணம் கீறி சரவனபவ என போட்டு நடுவில் ஓங்காரம் போடவும். 

கிரிகை

நிலத்தில் அட்சரம் கீறி அதில் மடை வைத்து அதன் முன் தேங்காய் வைத்து உரு இயன்ற வரை செய்து வெட்டவும். சகல தடைகளும் நீங்கும். 

நன்றி

Monday, December 2, 2013

அடிப்படை - ஓர் விளக்கம்

வணக்கம் தோழர்க்ளே,

எனது மின்னஞ்சலில் அனேகரின் வேண்டுகோள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனைவருக்கும் பதில் போட்ட வாரு இருப்பது மிகவும் கடினம் இருப்பினும் முடிந்த வரை முயற்சி செய்கிறேன். வாசகர்கள் சற்று பொருமையாக இருந்தாள் நிச்சயம் பதில் கிடைக்கும். ஐயா உடனடியாக பதி தர வேண்டும் என்று நினைக்க வேண்டாம். காலமும் நேரமும் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும்.

நமது சமயத்தின் (சைவம்) சரியான அடிப்படை தத்துவத்தை புரிந்து அதன் பின்னரே மந்திர தந்திர பிரயோகங்களை கற்க வேண்டும். இல்லாவிடில் உண்மையை உணர பல ஜென்மம் எடுத்தாளும் முடியாது.

இதனால் தான் சரியான குரு கிடைக்காவிட்டால் அனைத்துமே பாழ் அடைந்து விடும் என்று முன்னோர்கள் கூறினர்.

மந்திர பிரயோகம் எதுவாக இருந்தாளும் அதன் சரியான தன்மையை உணராவிட்டால் அதன் பலன் பலம் முளுமையாக கிடைக்காது. முன்னோர்களின் புத்தகண்க்களையோ அல்லது ஏடுகளையோ எடுத்து படித்து விட்டு நானும் மந்திர தந்திர வித்தைக்காரன் என்று மார் தட்டுவதில் பலன் இல்லை.

முதலில் சிவம் என்றால் என்ன என்பது தெளிவாக புரிய வேண்டும். பின்னர் தான் அனைத்தும். 

படைத்த்ல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என இவ் ஐந்து செயற்பாடுகளுமே சிவம் என்பதன் விளக்கம். அதனால் தான் “ இல்லானே உள்ளானே” என்று பாடினர் நாயன்மார்.

இவ் ஐந்து செயற்பாடுகளும் அனைத்து இறை வடிவுக்கும் சரி உயிருக்கும் சரி பொதுவானதே. இதில் இத் தெய்வம் சிறந்தது அல்லது நல்லது கெட்டது என்று எதுவும் கிடையாது. அதன் அதன் பிறதான செயற்பாடை வைத்தே நாம் இது நல்லது என்றும் அது கெட்டது என்றும் கூருகிறோம்.

உதாரணமாக காளியை வழிபடுபவருக்கு அது உயர் தெய்வமாகவும் மற்றவருக்கு அது துர் தேவதையாகவும் தோன்றும். இப்படி பல தேவதைகளையும் பிரித்து கூற முடியும்.

பெயர்கள் வேறுபட்டாலும் சக்தி ஒன்றே என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சக்தியை வெல்வதற்கு அதற்கு நிகரான தன்மையுடைய சக்தியை கண்டரிவதற்கே பெயர்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்பதுவும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். ஐந்தொழில்களும் அனைத்து சக்திகளுக்கும் பொதுவாக இருப்பதால் அவற்றின் குறிபிட்ட ஓர் சக்தியை அதிகரித்து நமது தேவையை நிவர்த்தி செய்வதற்கே இந்த மந்திர தந்திர யந்திர பிரயோகங்கள் செய்கிறோம் என்பதும் ஞாபகத்தில் இருக்கட்டும்.

ஒரு சக்திக்கு அதிக பெயர்கள் கூறப்படுவதும் இதனால் தான். உதாரணமாக மகாலட்சுமி என்று கூறி விட்டு பின்னர் அஷ்ட லட்சுமியாக எட்டு வகை பெயர்களால் அழைக்கப்படுவதும் இதனால் தான். இதில் அனைவருமே ஒன்று என்பது தெளிவாக இருக்க வேண்டும். அதை விட்டு தனி தனியாக வழிபடுதல் அல்லது மந்திர பிரயோகம் செய்தல் அரியாமையே. ஆனால் உங்களது தேவை அந்த குறிப்பிட்ட சக்தியாக இருந்தால் அதற்கு தடை இல்லை.

கண்டிப்பாக இந்த மந்திர பிரயோகம் செய்து தான் ஒன்றை வெல்ல முடியும் என்று ஒன்றும் இல்லை.  அதனால் தான் மனமது ”செம்மையானால் மந்திரம் தேவையில்லை” என்று கூறப்பட்டிருக்கிறது. கல்லை கட்டி கடலில் போட்டாலும் நாதன் நாமம் நமசிவாயமே என்று அப்பர் கூறியது ஞாபகம் இருக்கட்டும், அவர் தண்ணீரை தம்பனம் செய்து மிதக்கவில்லை. மந்திரம் செய்தே மிதந்தார், அவருக்கு தெரிந்தது பஞ்சாட்சரம் மட்டுமே அப்போது.

உங்களை நீங்கள் முதலில் உணர்ந்து செயல் பட்டால் நிச்சயம் வெற்றி கிட்டும். 

பலர் எனது குடும்ப கஷ்டங்களை பார்த்து கேட்பது “ ஏன் மந்திரத்தால் இதை தீர்க்க முடியாதா” கூறிய பின்னர் அவர்களே சிரித்த கதையும் உண்டு. அவர்களின் அரியாமைக்கு நான் இறைவனை வணங்கியதும் உண்டு. அவதாரங்களே பூமியில் பட்ட கஷ்டங்களை ஒப்பிட்டு பார்த்தாள், நான் யார்? மிகவும் சாதாரனமான ஓர் மனித பிறவி மட்டுமே. அன்று அவர்களால் செய்ய முடியாது போன மந்திர தந்திர பிரயோகம் எனக்கு மட்டு எப்படி சாத்தியம். ராமருக்கே அந்த நிலை என்றால் நமக்கு இது ஒன்றும் பெரிதில்லையே.

பணம் உழைப்பது என்றால் அதற்கு பல வழிகள் இருக்கிறது, ஆனால் அது சரியானதா என்பது மிகவும் அவசியம் என்பது எனது கருத்து. 

எனது தள வாசகர்கள் பலர் என்னை குருவாக நினைத்து செயல் படுவதாக மின்னஞ்சல் செய்கிறீர்கள் ஆனால் அதற்கு நான் தகுதியானவரா என்பது எனக்கே தெரியாது. 

உங்கள் தாய் தந்தையின் ஆசி முதலில் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று ஞாபகத்தில் வையுங்கள்.

மீண்டும் ஓர் முறை ஞாபக படுத்துகிறேன், சைவ சமயத்தை தெளிவாக கற்ற பின்னரே மந்திர முயற்சியை எடுக்கவும்.

வேதங்கள் கூறுவது வேரு மத வாதிகள் கூறுவது வேரு. ஆலயங்கள் அவற்றின் வழிபாடுகள் யாவும் இன்று மாறுபட்டே கானப்படுகிறது. அனைத்தும் பணம் சம்பாதிக்கும் தொழில் தாபனங்கலாகி விட்டது.

சரியை கிரியை யோகம் ஞானம் என்றது இப்போது எங்கு போய் விட்டது.

எது எப்படியோ, குறிப்பிட்ட தேவதைகளின் மந்திரத்தை எதிர்பார்கும் தோழர்களே, அதனால் மட்டுமே அது முடியும் என்று நினைத்து அலையாதீர்கள். இருப்பதை கொண்டு செயல்பட முயற்சியுங்கள்.

” எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதரிது” 

அர கர மகா தேவா
தென்னாடுடைய சிவனே போற்றி. 

நன்றி.

அட்ஷரம் போடுதல் - ஓர் விளக்கம்

வணக்கம் தோழர்களே,

சற்று வேலை பளு அதிகமாக உள்ள காரணத்தால் பதிவுகள் தாமதமாகளாம், இருப்பினும் உங்கள் கேள்விகளுக்கு முடிந்த வரை பதிவிட முயற்சி செய்கிறேன்.

அட்ஷரம் போடுதல் தொடர்பாக சிலர் குழப்பங்களில் இருப்பதல் அது தொடர்பான சிறு விளக்கம் இங்கு தருகிறேன்.

பொதுவாக இதை பின் பற்றவும்.

பூசைகள், வாலாயம், தேவதை அழைப்பு போன்றவை

சுத்தமான விதை நெல் எடுத்து அதை மேடை போல் பரவி ( 2 அங்குல உயரம் 15அங்குல நீள அகலம் உடயதாக இருத்தல் வேண்டும்) குறிப்பிட்ட அட்ஷரத்தை வேம்பு மர குச்சியினால் கீரி பின்னர் அதன் மேன் கும்பதாபனம் அல்லது மடை வைக்கவும்.

நவதாணியம் சேர்த்தல் சிறப்பாக இருக்கும்.


காய் வெட்டல், தேங்காய் வெட்டல், பூசனி பலியிடல் போன்றவை

குறிப்பிட்ட தேவதைக்கான பூசைகளை செய்து முடித்த பின் தேங்காய் வெட்ட வேண்டிய இடத்தில் ( நிலத்தில்) குச்சியால் அட்ஷரம் கீரி அதற்கு அட்ஷர பூசை செய்து அதன் மேல் தேங்காய் வைத்து அதில் கற்பூரம் வைத்து அல்லது எண்ணெய் திரி வைத்து உரு செய்து வெட்டவும்.

காய் வெட்ட தேவையானவரை நிலத்தில் அட்ஷரம் கீரி பூசை செய்து அட்ஷரத்தில் கிழக்கு முகமாக இருத்தி அவர் தலையில் இருந்து பாதம் வரை ஒவ்வொரு மூட்டுக்களிலும் காய் வெட்டவும்.

தாயத்து, கூடு, குளிசம் போன்றவை

குடும்பத்துக்கோ அல்லது தனி நபருக்கோ அது அவரவர் வசதியை பொருத்து அமையும். 

குறைந்தது 2 அங்குலம் உடைய கூடு போடுதல் வேண்டும். அதற்கு ஏற்ப தகடு தயார் செய்து மடிப்பு வராமல் உருட்டி அதனுல் இருக்க வேண்டும். தகடு குறிப்பிட்ட மந்திர முறையில் சொல்லப்படும். இல்லாவிடில் செப்பு தகடு பொதுவான பிரயோகம். 

கோணங்கள் சரியாக அமைவது மிக மிக அவசியம். இது மீறின் அட்ஷரம் உயிர் பெராது. 

தகட்டில் எந்த பலுதும் வராமல் கீரவும். 

ஓமம் வளர்த்தல்.

மாவினால் அட்ஷரம் போடுதல் ஆலயங்களில் அல்லது ஓமம் வளர்க்கும் போது மட்டுமே. வரும் பதிவுகளில் கரும நிவர்த்தி ஓமம் பற்றி பார்கலாம்.


சுருக்கமாக எழுதினால் போதும் எமது வாசகர்கள் இலகுவில் புரிந்து நடப்பர் என்பது எனது கருத்து.

நன்றி