வணக்கம் தோழர்களே,
எனது இடமாற்றம் காரணத்தால் கடந்த வாரம் புதிய பதிவுகளையும் வாசகர் அஞ்சலுக்கு பதில் எழுதவும் நேரம் போதாது போனது. இனி வரும் நாட்களில் புதிய பதிவுகள் எப்போதும் போல் கிடைக்கும்.
மந்திரம் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அவசியமான ஓர் பதிவாக இது இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
உக்கிர வீர சக்தி என்பது அஸ்திர வகை மந்திர வரிசையில் முருகப் பெருமானால் பயன் படுத்தப்படும் ஓர் ஆயுதம். இதையே அனைவரும் வேல் என்று கூறுவர். சூர சம்காரம் செய்ய ஆதி சக்தியாகிய பார்வதி தேவி தனது சக்தியை ஒன்று சேர்த்து முழு பலத்துடன் ஓர் ஆயுதமாக்கி அதை கந்தர் கையில் கொடுத்தார் என்று புராணம் கூறுகிறது. அதுவே அவர் கையில் இருக்கும் வேலாயுதம். அதை பிரயோகிக்கும் மந்திரமே இது.
எப்படிப்பட்ட தடைகளையும் தகர்தெரியும் சக்தி இதற்கு உண்டு என்றால் மிகையாகது. எனது அனுபவத்தில் பலதரப்பட்ட மந்திர கட்டுக்களில் இருந்து வெளிவர பயன்படுத்தும் உயர் வகை மந்திர வரிசையில் இதுவும் ஒன்று.
இது இரண்டு தனி மந்திரங்களை கொண்டது, அதில் முதல் மந்திரம் இது.
உக்கிர வீர சக்தி - மந்திரம்
ஓம் ஸ்ரீயும் மிறீயும் ஸ்ரீயும் கிலியும் சவ்வும் நவ்வும் சரவணா சண்முகா சாடு சாடு சங்கரி சங்கரி சிரித்த வாயும் விரித்த சடையும் சென்னிர முகமும் பன்னிரு கண்ணும் அகண்ட மார்பும் இருண்ட கண்டமும் அக்கினி கண்ணால் அனல் மழை பொழிய உக்கிர சங்ஙாரம் செய்கிற போது சக்கர வாளம் போல் வலைந்து கட்டிய மாயா பாசத்தை சங்ஙரிக்க என்று என்னி உன் தாய் தந்த உக்கிர வீர சக்தியை ஓம் ஸ்ரீயும் மிறீயும் சிங்ங யங்ங நமசிவாயா நசி நசி என்று வேல் விட்டு சங்ஙரித்தால் போல் என் சத்துருவானவனை என் முகம் நோக்கி அவனை அழித்திடு புவனை கெடுத்திடு எத்தி ஈரலை இழுத்து பிடுங்கிடு சக்தி வேல் கொண்டு சூரன் நெஞ்சை பிளந்து இரணக்குடலை வாங்கினால் பொலே என் சத்துருவை வாங்கு வாங்கு சர்வ வங்ங நங்ங சர்வ நமசிவாயா சிவலிங்கத்தின் ஆணை சர்வ தடைகளும் அறு பட்டு தெரிக்கவே சிவாகா.
ஓம் ஸ்ரீயும் மிறீயும் சண்முகா என் சத்துரு நாச நாச மாகவே சிவாகா.
அட்ஷரம்
அறுகோணம் கீறி சரவனபவ என போட்டு நடுவில் ஓங்காரம் போடவும்.
கிரிகை
நிலத்தில் அட்சரம் கீறி அதில் மடை வைத்து அதன் முன் தேங்காய் வைத்து உரு இயன்ற வரை செய்து வெட்டவும். சகல தடைகளும் நீங்கும்.
நன்றி
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை பதிவுகளில் ச ந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteமற்றவர்களுக்காக இதை பிரயோகம் செய்யும் போது மந்திரத்தில் என் என்பதிற்க்கு பதிலாக அவர்கள் பெயரை உச்சரித்து நாம் மந்திரத்தை உச்சரிக்கலாமா ???
நன்றீ
வணக்கம் நான் யாழ்ப்பாணத்தில் வசிக்கிறேன் நான் இன்றுதான் உங்களது websait பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ReplyDeleteayya ungal phone number thevai.Tharuveerkalaa?
ReplyDeleteவணக்கம் தோழர்,
Deleteமின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டால் தருகிறேன்.
muthaly@gmail.com
நன்றி