வணக்கம் தோழர்களே,
சற்று வேலை பளு அதிகமாக உள்ள காரணத்தால் பதிவுகள் தாமதமாகளாம், இருப்பினும் உங்கள் கேள்விகளுக்கு முடிந்த வரை பதிவிட முயற்சி செய்கிறேன்.
அட்ஷரம் போடுதல் தொடர்பாக சிலர் குழப்பங்களில் இருப்பதல் அது தொடர்பான சிறு விளக்கம் இங்கு தருகிறேன்.
பொதுவாக இதை பின் பற்றவும்.
பூசைகள், வாலாயம், தேவதை அழைப்பு போன்றவை
சுத்தமான விதை நெல் எடுத்து அதை மேடை போல் பரவி ( 2 அங்குல உயரம் 15அங்குல நீள அகலம் உடயதாக இருத்தல் வேண்டும்) குறிப்பிட்ட அட்ஷரத்தை வேம்பு மர குச்சியினால் கீரி பின்னர் அதன் மேன் கும்பதாபனம் அல்லது மடை வைக்கவும்.
நவதாணியம் சேர்த்தல் சிறப்பாக இருக்கும்.
காய் வெட்டல், தேங்காய் வெட்டல், பூசனி பலியிடல் போன்றவை
குறிப்பிட்ட தேவதைக்கான பூசைகளை செய்து முடித்த பின் தேங்காய் வெட்ட வேண்டிய இடத்தில் ( நிலத்தில்) குச்சியால் அட்ஷரம் கீரி அதற்கு அட்ஷர பூசை செய்து அதன் மேல் தேங்காய் வைத்து அதில் கற்பூரம் வைத்து அல்லது எண்ணெய் திரி வைத்து உரு செய்து வெட்டவும்.
காய் வெட்ட தேவையானவரை நிலத்தில் அட்ஷரம் கீரி பூசை செய்து அட்ஷரத்தில் கிழக்கு முகமாக இருத்தி அவர் தலையில் இருந்து பாதம் வரை ஒவ்வொரு மூட்டுக்களிலும் காய் வெட்டவும்.
தாயத்து, கூடு, குளிசம் போன்றவை
குடும்பத்துக்கோ அல்லது தனி நபருக்கோ அது அவரவர் வசதியை பொருத்து அமையும்.
குறைந்தது 2 அங்குலம் உடைய கூடு போடுதல் வேண்டும். அதற்கு ஏற்ப தகடு தயார் செய்து மடிப்பு வராமல் உருட்டி அதனுல் இருக்க வேண்டும். தகடு குறிப்பிட்ட மந்திர முறையில் சொல்லப்படும். இல்லாவிடில் செப்பு தகடு பொதுவான பிரயோகம்.
கோணங்கள் சரியாக அமைவது மிக மிக அவசியம். இது மீறின் அட்ஷரம் உயிர் பெராது.
தகட்டில் எந்த பலுதும் வராமல் கீரவும்.
ஓமம் வளர்த்தல்.
மாவினால் அட்ஷரம் போடுதல் ஆலயங்களில் அல்லது ஓமம் வளர்க்கும் போது மட்டுமே. வரும் பதிவுகளில் கரும நிவர்த்தி ஓமம் பற்றி பார்கலாம்.
சுருக்கமாக எழுதினால் போதும் எமது வாசகர்கள் இலகுவில் புரிந்து நடப்பர் என்பது எனது கருத்து.
நன்றி
ஐயா,
ReplyDeleteவிளக்கத்திற்கு நன்றி