Sunday, February 9, 2014

திருவாசி மூன்றாம் மந்திரம்

வணக்கம் தோழர்களே,

திருவாசி மந்திர வரிசையில் அடுத்து வருவது பல தவவலிமை பெற்ற ஞானிகள் பயன் படுத்தியதாக கூறப்படும் ஓர் மந்திரம். முன்பே நான் கூறியது போல இதையும் மனனம் செய்யுங்கள் விரைவில் இதன் பூசை முறைகளை உபதேசிப்பேன்.

மந்திரம் 

ஓம் சுந்தரமூர்த்தி அன்று சுடலையில் ஆடிய பரமேஸ்பரனுக்கு எதிரே திருவாசியாய் நின்னறுத்தவளே என் ஆச்சி திரிபுரசுந்தரி பரமகல்யாணி சுந்தரி கக்கிஷ காரிகையே அடியாருக்கு ஏவிய ஆக்ருசனம் பேதனம் மோகனம் தம்பனம் வசியம கக்கிஷம் என்ற வித்தைகளை திருவாசியாய் நின்று அறுத்தருள் செய்குவாய் சுந்தரி கௌரி சிவாய நம.

மூல மந்திரம்

ஓம் ஆம் அவ்வும் உவ்வும் சவ்வும் பிரளைய கால திரிபுர சிதம்பர சக்தி சிவாய நம. 

அட்ஷரம்

















கிரிகை 

முதலில் சித்தி பெற மனனம் செய்யுங்கள். 

காரணம் இல்லாமல் பதிவிடவில்லை, பொருமை என்பது மிக முக்கியம், நிச்சியம் இதன் மகிமை புரியும் நாள் வரும். காத்திருங்கள். 

எனது அனுபவத்தில் இயலாது என்று பல குருமார் கூறிய விடயத்தை இம் மந்திரத்தை கொண்டு வென்றிருக்கிறேன். அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் இது ஆனால் தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவர் இதை பயன் படித்தின் அதன் தன்மை என்ன என்பது அவர்களுக்கு உடன் புரியும். எனது மாணவன் ஒருவன் கற்ற ஆர்வத்தில் தவராக பிரயோகித்து இன்றும் தனது மந்திர சக்தியை பெற முடியாது கவலைப்படுகிறார்.  காலம் வரும் போது இதில் இருந்து வெளிவரும் வித்தையை அவருக்கு கூறுவேன் என்று சொல்லியிருக்கிறேன்.


ஆகவே நேரமும் காலமும் வரும் வரை காத்திருப்பது நமது கடமை என்பதை ஞாபகத்தில் வைத்து படியுங்கள். 

நன்றி

1 comment:

  1. ஐயா ... இனிய கலை வணக்கம் எனக்கு பானங்கள் வரிசையில் ராமபாணம் மற்றும் நரசிங்கர் வாலயம் ஆகிய மந்திரங்களை தர முடிமா?
    அது போன்று அட்ட பாலகர் காய் வெட்டு மந்திரம் உண்டா?

    யனோபன்
    மட்டக்களப்பு
    இலங்கை

    ReplyDelete