Monday, February 10, 2014

மூலிகை விளக்கம் பாகம் 2

வணக்கம் தோழர்களே,

மூலிகை பற்றிய விளக்கத்தின் இரண்டாவது பாகமாக இதில் படக்காட்சிகளும், குணபாடமும், அதன் தன்மையும் விளக்கியுள்ளேன்.

உதாரண எடுத்துக்காட்டாக ஒரு வலைத்தளத்தில் இருக்கும் பதிவை சுட்டிக்காட்டி இந்த விளக்கத்தை தருகிறேன், தயவு செய்து மற்றவர்களின் தளத்தை உதாசினம் பன்னுவதாக நினைக்கவேண்டாம், சித்த மருத்துவம் மற்றும் மாந்திரீகம் பற்றிய சரியான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இன்னும் கூறப்போனால் இன்று நமது மக்கள் சித்த மருத்துவத்தையும் அதன் ஆற்றலையும் மறந்து மேலத்தேய மருந்துகளில் நாட்டம் செலுத்துவது இப்படி தவறான கருத்துக்களை போதிப்பதால் தான், காரணம் இம் மூலிகை இதை செய்யும் என நம்பி ஒருவர் முற்படும் போது அது நடக்கவில்லை என்றால் அவரது மனதில் உதயமாவது ஒன்றே அது, இது அனைத்தும் சும்மா கட்டுக்கதை என்பதே. ஆகவே நவீன விஞ்ஞான காலத்தில் இருக்கும் நாம் இனியாவது சரியான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பின்னரே மருத்துவ மற்றும் மாந்திரீக தகவல்களை பதிவிட வேண்டும் என்பது எனது கருத்து.


ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் எனும் Facebook தளத்தில் இருக்கும் ஓர் தகவலையே இங்கு உதாரணப்படுத்துகிறேன்.

மிக அவதானமாக படியுங்கள்


 
  









இதில் கூறப்படுகிறது ஆனை நெருஞ்சி பற்றிய விளக்கம் ஆனால் மூலிகையின் பெயர் யானை வணங்கி (ஆனை வணங்கி) என்று கூறப்படுகிறது. 

நீர் கடுப்பு, கல்லடைப்பு போன்ற வற்றுக்கு ஓர் சிறந்த மூலிகை ஆனை நெருஞ்சி என்பதில் மாற்றம் இல்லை ஆனால் அது ஆனை வணங்கி (தேள்கொடுக்கு) அல்ல. அத்துடன் கோடைகாலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறையால் யானைகளுக்கு ஏற்படும் நீர்கடுப்பு ஏற்படும் போது யானைகளி இவற்றை உண்டு பின்னர் ஆனை வணங்கியை வணங்கி செல்லும் என்றும் கூறப்படுகிறது பதிவில். 

இதில் என்ன விளக்கம் என்றால் யானை கும்பிட்டு செல்வதாக இருந்தால் அது நெருஞ்சியை தான் வணங்க வேண்டும் ஆனால் ஆனை வணங்கி என்பது வேறு அல்லவா அத்துடன் ஆனை வணங்கி மூலிகைக்கு நீர்கடுப்பை அல்லது கல்லடைப்பை மாற்றும் சக்தி அல்ல என்பதால் நிச்சயம் யானைகள் இதை உண்னப்போவதில்லை அந்த காரணத்துக்காக. 

அப்படியானால் ஏன் இதற்கு ஆனை வணங்கி எனவும் தேள்கொடுக்கு எனவும் பெயர் என்று கேட்பது புரிகிறது. மூலிகை வரிசையில் அஷ்டகர்ம பிரயோகத்துக்கு என பல மூலிகைகள் சித்தர்களால் கூறப்படுகிறது. அந்த வரிசையில் மிருக ஆக்ருசனத்தில் யானைகளை வைத்து வேலை செய்ய இந்த மூலிகை பயன்படுகிறது, அதன் வெளிப்பாடாக இன்றும் யானைபாகன் வைத்திருக்கும் அங்குசத்தில் இந்த வடிவிலேயே இருக்கும். இந்த ஆனை வணங்கி மூலிகையை பிரயோகித்து யானைகளை அழைத்து அவற்றை நமது தேவைக்காக பயன்படுத்தினர் ஆகவே இது ஆனை வணங்கி என பெயர் பெற்றது. மேலும் தேள்கொடுக்கு என கூறப்படுவது மருத்துவ ரீதியான பன்பு அதாவது விஷ வைத்தியத்தில் கானாக்கடி எனும் என்ன கடித்தது என்று தெரியாத விஷக்கடியில் இது பயன்படுகிறது, அத்துடன் இது ஓர் சிறந்த விஷ மாரண மூலிகையாக தேள் கடிக்கு உதவுகிறது, மேலும் இதன் பூக்கள் இருக்கும் தண்டு தேளின் கொடுக்கி போல் இருக்கும் என்பதாலும் இதற்கு தேள் கொடுக்கு என பெயர் வந்தது. 

ஆனை வணங்கி அல்லது தேள்கொடுக்கு
















சித்த வைத்திய பரிபாஷை அகராதியில் இருந்து விளக்கம்


 

 














குண பாடம் தேள்கொடுக்கு

“ தேள் கொடுக்குண் டாயிற் றினவடங்குத் தப்பாது
நாட்பட்ட புண்கரப்பான் நாசமாம் கீட்பட்ட
மாந்த கணமுமறும் மானிலத்துட் சில்விடம்போம்
போந்தமருந் தாகும் புகழ்”

விளக்கம்

நாட்பட்ட புண் கரப்பான் மாந்தம் கானாக்கடி விஷம் ஆகியவை நீங்கும். 

இப்படி தினமும் பல இணையதளத்திலும் சில தவரான கருத்துக்கள் பதியப்படுகிறது, தயவு செய்து மக்களுக்கு சரியான தகவல் கிடைக்ககூடியவாறு பதிவிடுங்கள், தவரான பாதையில் சித்தர் புகழை இட்டுச்சென்று மீண்டும் ஒரு யுகம்வரை சித்த மருத்துவத்தை புதைத்து விட வேண்டாம். 

குற்றம் கூறுவதாக யாரும் கருத வேண்டாம் அன்று நக்கீரனார் சிவனையே கேட்டதனால் தான் இன்றும் நம்மால் தமிழில் பேச முடிகிறது என்பதை சிந்தியுங்கள். அடியேன் எதாவது தவராக பதிவிட்டால் சுட்டி காட்டவேண்டியது உங்கள் கடமை. 

சித்தர் பாடல்களை விளக்கமாக எழுதுவது என்பது மிக கடினமான ஒன்று, அதில் இருக்கும் மறைப்புக்கள் நம்மால் உணர முடியாதவை, ஆகவே சரியாக புரியாவிட்டால் தகுந்த குருவிடம் ஆலோசனை செய்து பின்னர் வெளியிடுங்கள். 

சித்த ஆயுர்வேத மருத்துவ துனுக்குகள் வெளியிடுகிறோம் என்ற பெயரில் அங்கும் இங்கும் படித்தவற்றை  சரியாக தெரியாமல் வெளியிடுவதால் தான் இன்று பல வித புதிய நோய்கள் நம்மிடையே தலைவிரித்தாடுகிறது. சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகள் சரியான முறைகளில் சுத்தி செய்து பயன்படுத்தாவிட்டால் அது நிச்சயமக பாரிய தீங்கைத்தான் வெளிப்படுத்தும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். புத்தகங்களில் இருக்கும் மருத்துவ குறிப்புக்களை பயன்படுத்தும் முன்னர் அவை சரியானதா என்பதை ஒன்றுக்கு பல தடவை சரியான சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியரை நாடி ஆலோசனை பெற்று பின்னர் உபயோகிப்பது தான் நலம். 


நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த வைத்தியர்


2 comments:

  1. சித்த மருத்துவ விளக்கத்தை அனைவரும் அறியு வகையில் விளக்கியதற்கு

    நன்றி

    ReplyDelete