சித்தர்கள் பாரம்பரிய மந்திர வரிசை மட்டும் இல்லாமல் வேதங்களில் கூறப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் சிலவற்றையும் அவற்றின் பலன்களையுன் தெரிந்திருப்பது ஒரு மாந்திரீகம் கற்கும் மாணவனுக்கு மிக அவசியம்.
அந்த முறையில் அதர்வ வேதத்தில் இருந்து சில மந்திரங்களை உங்களுக்கு பதிவிடுகிறேன். உச்சரிப்புக்கள் சற்று கடினமானவையாக ஆரம்பத்தில் இருந்தாலும் பின்னர் பழகிவிடும்.
சித்தி கணபதி மந்திரம்
ஓம் நம: சித்தி வினாயகாய சர்வ கார்யகர்த்ரே சர்வ விக்ன ப்ரசமனாய சர்வ ராஜ்ய வச்ய காரணாய சர்வ ஜன சர்வ ஸ்த்ரீ சர்வ புருஷ ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாகா.
முறையும் பலனும்
தினமும் இந்த மந்திரத்தை காலையில் பூஜை செய்யும் போது 21 முறை மலர்களால் கணபதியை அர்சனை செய்து வந்தால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என வேதம் கூறுகிறது.
நன்றி
No comments:
Post a Comment