Sunday, February 2, 2014

குரு ஏன் வேண்டும்.,

வணக்கம் தோழர்களே,

வராகி உபசனை செய்வது பற்றி தோழர் ஒருவர் கேட்டார் அவரது கேள்வி இங்கே

DEAR SIR,
I WANT VARAHI VAALAYAM FULL DETAILS WITH MANTHIRAM,YANTHIRAM,KIRIKAI..ETC. AND ALSO EXPLAIN THE STEPS & CONDITIONS TO BE FOLLOWED DURING VARAHI SIDHI POOJA.SOME ARE SAYING WE GO MAD, IF WE PERFORM VARAHI SIDHI POOJA(48DAYS) WITHOUT GETTING DEEKSHA OR UPADESHAM. I AM ASKING YOUR IDEAS ABOUT THAT. AND GIVE MORE DETAILS IN YOUR WEBSITE ABOUT VARAHI UPASANAI,YANTRAS,MANTHIRA PRAYOGA MURAIGAL AND ALL.

WITH REGARDS,


இவரை போன்று பலர் பலதரப்பட்ட மந்திர முறைகளை கேட்கிறார்கள் ஆனால் இவர்கள் யார், என்ன, எப்படி என்ற எந்த தகவளும் அனுப்புவதில்லை. எமது தளத்தின் மூலம் நாம் செய்ய முற்பட்டது வியாபரம் அல்ல, தொண்டு. 

மந்திர தந்திரங்களை நம்பி பலரும் ஏமாரும் இக்காலத்தில் நாம் அனைவருக்கும் கொண்டுசெல்ல முற்பட்டது அதன் உண்மையை மட்டுமே. சித்தர்கள் சிவனிடம் பெற்ற தீட்சைகளை கொச்சைப்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஏமாற்றுக்காரரிடம் இருந்து விலகி உங்களை நீங்களே அறிவதே சிறந்தது என்ற முறையில் தான் பல பதிவுகளை எனது குரு வம்சத்தின் ஆசியுடன் உங்களுக்கு பதிவிட்டேன். 

அதற்கு சாட்சியாகவே எனது வைத்திய முறைகளுக்கான படங்களையும் பகிர்ந்திருக்கிறேன். 

அத்துடன் இவர் யார், குருவாக இருப்பதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற என்னம் கூட இருக்கலாம், அதுவும் சரியானதே அடியேன் யாரையும் என்னிடம் வாருங்கள் என்று அழைக்கவில்லை, மாறாக எனது பதிவுகளை கையாண்டு திருபதியும் அதன் உண்மையையும் உணர்ந்த பலர் கேட்டதன் காரணமாகவே இந்த குருகுல ஏற்பாடு. 

மேல் இருக்கும் தோழர் கேட்பது வராகி எனும் சப்த கன்னியின் உபாசனை, அதையும் தீட்சை இல்லாமல் கற்க விரும்புகிறார். 

வராகியை பற்றி ஒரு பாடல்

“ வாலை புவனை திரிபுரை 
மூன்றிவையும் வையகத்திற்
கலயும் மாலையும் முச்சியும்
மாக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் 
பாதத்தை அன்பினிலுன்னி
மாலயன் தேவர் முதலான
பேர்களும் வாழ்த்துவரே”

சித்தர் பெருமக்கள் கூறும் பெரும் தேவதைகள் மூன்றும் இங்கு வராகியை துதிப்பதாக கூறப்படுவது அவதானிக்க வேண்டியது. 

இப்படி இருக்கும் ஓர் சக்தியை உபாசனை செய்ய என்ன கட்டுப்பாடுகள் வேண்டும் என்று சிந்தியுங்கள். 

இப்போது விளங்கும் குருவின் அருள் ஏன் வேண்டும் என்று. அதனால் தான் குரு குலம் மூலம் சரியான பாதையை (எனக்கு புரிந்தவரை, நான் கற்றவரை) உங்களுக்கு உபதேசிக்க முயற்சிக்கிறேன். கற்றது கையலவு என்பது அனைவருக்கும் பொது அது சித்தர்களுக்கும் அப்படியே. அதனால் தான் சித்தர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டி பாடினர். 

தீட்சை என்பது இரகசியம் அது உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு போன்றது. சிவனும் சக்தியும் போன்றது. குருவும் மாணவனும் மட்டும் தெரிவது அது. இதை வைத்தே மும் மலங்களையும் அடக்கும் சக்தியை பெற முடியும், பஞ்ச பூதங்களை உணர முடியும். 

மந்திர யந்திர பூசைகளை கற்பது கல்வி அல்ல, அது யார் வேண்டுமானாலும் பாடமாக்கி ஒப்பிக்க முடியும், ஒன்றுக்கு 100 முறை சொன்னால் சித்தி கிட்டும், ஆனால் ஆத்மாவை பரம்பொருளை பிறவா வரத்தை அடைவது இயலாது. 

” புழுவாய் பிறக்கினும் புண்ணியான் நின்னடி என்மனத்தே வலுவாதிருக்க வரம் தரவேனும்”

என்று அப்பர் பாடியது அதனால் தான். 

ஆகவே குரு என்பவர் யார் என்பது ஒருபுரம் இருக்க அவர் வயது மருபுரம் இருக்க, தகுதியானவரா என்பதே முக்கியமானது. 

”குருவை கண்டவன் கோடியில் ஒருவன்” 

இந்த வாக்கு உண்மைதான் அதன் படி நான் அந்த பாக்கியம் பெற்றவன் என்பதில் இறைவனுக்கு இறக்கும் வரை நன்றி. 

அன்பு மாணவர்களே, மந்திரம் கற்பது ஏன் என்ற தெளிவு இருந்தால் மட்டும் முயற்சியுங்கள். 

நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்.

8 comments:

  1. ``நானும் கோடியில் ஒருவன்`` இந்த வாய்ப்பை அளித்த படைத்த இறைவனுக்கும் குருவுக்கும் நன்றி

    ReplyDelete
  2. please give me your cell no by rbnarasimhan

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்,

      மின்னஞ்சல் மூலம் தொடர்பு வையுங்கள், உங்கள் பிரச்சினை பற்றி கூறுங்கள்.

      muthaly@gmail.com
      நன்றி

      Delete
  3. மிகவும் அருமையான விளக்கம் ஐயா.

    ReplyDelete
  4. அருமையான விளக்கம் ஐயா. நன்றி

    ReplyDelete
  5. iya ungalathu pathippinai naan ippoluthuthan padikka thodangkirikkiren. mikavum aarvamaka ullathu iya.
    ungalai ponta kuru kidaikka vendum enru ellam valla eraivanai piraththikinren iya.
    vanakkam.

    pratheep(srilanka)

    ReplyDelete
  6. vanakam iya.
    naan ungal pathippuku puthiyavan.
    ungal pathippukalai padikka mikavum aavalaka ullathu iya. ungalai kuruvaka adaivathil mikavum makilchsiyadaikiren iya.
    nanri.
    pratheep -srilanka

    ReplyDelete