நமது தளத்தின் மூலம் மாந்திரீகத்தின் உண்மை பற்றி தெரிந்து கொண்ட பலர் என்னிடம் நேரில் பேச வேண்டும் என்றும் மாந்திரீகம் கற்க வேண்டும் என்றும் இன்னும் சிலர் சித்த மருத்துவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் இன்னும் சிலர் தங்களது தீர்கமுடியாத நோய்களை தீர்க உதவுமாறும் இந்தியாவில் இருந்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறீர்கள், ஆனால் அடியேன் இலங்கையில் இருப்பதாள் நேரில் சந்திக்க முடியாது என்று கவலையாக பதிலனுப்பி தபால் மூலம் கற்கலாம தீர்வு கிடைக்குமா என்றும் கேட்கிறீர்கள்.
இதன் வெளிப்பாடாக இந்தியாவில் சென்னையில் இருக்கும் எனது மாணவர் ஒருவரின் உதவியுடன் அங்கும் ஓர் குருகுல அமைப்பை ஏற்படுத்தலாம் என நினைத்திருக்கிறேன். இதுவரை எனது இந்தியப்பயனங்கள் காசி நோக்கி மட்டுமே இருந்திருக்கிறது ஆனால் இத்தளத்தை ஆரம்பித்து மக்களின் அறியாமையை என்னால் இயன்றவரை தீர்க வேண்டும் என்று எடுத்த முயற்சியில் மனத்திருப்தியும் அடைந்துள்ளேன். இதன் அடுத்த கட்டமாக இந்தியாவில் இருக்கும் மாணவர்களையும் பூரணப்படுத்த வேண்டும் என்ற இறை ஆணையை என்னால் முடிந்தவரை செயல்படுத்த முனைகிறேன்.
இம்முறை எனது பயனம் ஆரம்பகட்ட நிலை என்பதால் அதிக நாள் அங்கு இருக்க முடியாது ஆகவே குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே சென்னையில் இருப்பேன் என நினைக்கிறேன் ஆகவே நேரில் சந்தித்து பேசவேண்டும் என்று அது எது தொடர்பானதாக இருந்தாலும் சரி நினைப்பவர்கள் முன்கூட்டியே எனது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால் அனைவரையும் சந்திப்பதற்கான ஓர் குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் காலத்தையும் தெரிவிப்பேன். விதண்டாவாதம் செய்ய இருப்பவர்களும் சந்திக்கலாம்.
இதை விளம்பரம் என நினைத்தாலும் சரி அல்லது ஓர் வாய்ப்பாக நினைத்தாலும் சரி தேவையுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்.
muthaly@gmail.com
No comments:
Post a Comment