Sunday, February 2, 2014

குருகுல செயற் திட்டம்

வணக்கம் தோழர்களே,

கடந்த பொங்கல் திரு நாள் அன்று காட்டில் மூலிகை ஆய்விற்காக சென்றப்போது கடுமையான மழையிலும் பணியிலும் மாட்டியதன் விளைவாக கடந்த  வாரம் உடல் உபாதைகள் ஏற்பட்டு தற்போது தான் ஓரளவுக்கு உடல் தேரி வருகிறது. 

அத்துடன் நமது குருகுல வேலைகளும் தொடர்ந்து நடக்கிறது. பல தோழர்களும் இது சம்பந்தமாக கேட்டவண்ணம் இருக்கிறார்கள், இலங்கயிலும் சரி வெளி நாட்டவரும் சரி தகுதியானவர் என நான் கருதும் மாணவர்கள் கண்டிப்பாக அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்படுவர். 

குருகுலம் என்றதும் இங்கு மந்திர யந்திர பூசைகள் மட்டும் கற்பிக்கப்படும் என்று கிடையாது, மாறாக இது ஓர் மூலிகை ஆய்வு மையமாகவும், தோட்டமாகவும் சித்த மருத்துவத்தையும் அதன் இரகசியங்களையும் மீண்டும் இந்த உலகுக்கு வெளிப்படுத்தும் ஓர் சித்தர் பீடமாகவும் இருக்கும். 

இன்றய சித்த மருத்துவம் கற்கும் மாணவர்களிடையே கானப்படும் மூலிகைகள் தொடர்பான ஐயங்களையும் சரியான முறைகளில் மருந்துகள் செய்யும் விளக்கங்களையும் கற்பிக்கும் ஓர் பீடமாகவும் இது இருக்கும். 

மந்திர பிரயோகம் கற்க விருப்பம் உடையவர்கள் முறைப்படி சித்தி பெறவும் சிவ சக்தி தீட்சைகளை பெறவும், முத்தி அடையவும் சரியான ஓர் பாதையாக இது இருக்கும். 

மின்னஞ்சல் மூலம் குறிப்பிட்ட மந்திரங்களை தாருங்கள் என்று இனி யாரும் கேட்க தேவையில்லை, முறைப்படி கற்க விருப்பம் உடையவர்கள் தங்களின் உண்மையான சுயவிபரங்களை அனுப்பி உங்களுக்கான பதிவுகளை குருகுலம் மூலமாக பெறலாம். 

முழு நேர மாணவராக சித்தர் மருத்துவத்தையும் மாந்திரீகத்தையும் கற்க விரும்பும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அவர்கள் எமது குருகுலத்தில் தங்கி தோட்டவேலைகளில் பங்கேற்று மாத வருமானத்துடன் கல்வியையும் கற்கமுடியும். உணவும் தங்குமிடமும் இலவசமாக கிடைக்கும். 

 வெளினாட்டு மாணவர்கள் ஒரு முறையேனும் வந்து  தீட்சை பெற்றால் தான் அவர்களின் மந்திர  யந்திர பூசைகள் சித்தி பெறும் என்பதுடன் உண்மை நிலையையும் புரிய முடியும். பின்னர் அவர்க்ளின் பாடத்தொகுப்பு SKYPE மூலம் தரப்படும். மருத்துவம் கற்கும் வெளினாட்டு மாணவர்களின் செயற்திட்டம் ஒலி ஒளி மூலம் கான்பிக்கப்படும். 


வெருமனே இணையத்தில் பதிவுகள் போடுவதன் மூலம் யாரும் சரியான பலனை அடையமுடியாது என்பது எனது கருத்து. அத்துடன் தேவையற்ற கருத்துக்களும் அவற்றின் மீதான சந்தேகங்களும் தான் அதிகமாகிறது. பரிபாசையாக இருக்கும் சித்தர் பாடல்களும் சரி மந்திரங்களும் சரி இரகசியமான முறையில் தான் இதுவரை காலமும் கற்பிக்கப்பட்டுள்ளது, அதை மீறி செயற்படும் போது ஏற்படும் அனைத்து நன்மை தீமைகளை நாம் தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது, ஆகவே குறிப்பிட்ட தேவைக்காக மட்டும அல்லாமல் உலக மக்களின் சேவைக்காகவும் நமது முத்தியை அடைவதற்காகவும் விரும்பும் மாணவர்கள் தயக்கமின்றி எனது குருகுலத்தில் இனையலாம். 

இத்தளமும் விரைவில் அங்கத்தவர்கள் மட்டும் நுலையும் வசதியை பெறும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன். 

குருகுல செயற் திட்டத்திற்கான படங்கள் சில. 


குருகுல பிரதான பாதை
















குருகுலத்தில் இருந்து 2 km தூரத்தில் ஓர் குலம்






 
 

























சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது எமது மூலிகை ஆய்வு மையமும் தோட்டமும் அதன் முகப்பில் எமது குருகுலம்.

குருகுல கட்டிடம் சிரிதாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம் இது எனது தனி முயற்சி என்பதால் தற்போது இருக்கும் நிதி வசதியை கொண்டு ஏற்பாடு செய்திருக்கிறேன் எதிர்வரும் காலங்களில் மூலிகை தோட்டத்தின் மூலம் வரும் பணத்தை கொண்டும் மாணவர்களின் பங்களிப்பை பொறுத்தும் குருகுலம் அபிவிருத்தி அடையும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. 


” உரைத்த பரப்பெலாம் ஓதவும் வேண்டா
  குருத்துவ மாகிய கூத்தனருள் பெற்று
  ஒருக்கியைம் பூத மூடன்கர ணாதி 
  வருத்தி மனத்தினில் மரிக்கவல் லார்க்கே. “

என்ற திருமூலர் வாக்குக்கு அமைய வாழ்வோம். 

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி




















நன்றி

சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்

3 comments: