Tuesday, February 25, 2014

அஷ்டகர்மம் - மகா வசியம்

வணக்கம் தோழர்களே,

அஷ்டகர்ம பிரயோகத்தில் இருக்கும் இன்னும் ஓர் முறை இது, வசிய கர்மத்தில் இதற்கு இனையாக எதையும் என் அனுபவத்தில் கண்டத்தில்லை. இங்கு இந்த பாடலின் மூலம் உங்களுக்கு கூற விரும்புவது யாதெனில், அது சித்தர்களின் அறிவியல் ஞானத்தை புலப்படுத்தும் ஓர் பாடலாகவே மட்டும். 

பாடல்.

வசியமாம் ஆறுவகைக் கருமமாடும்
மானிலத்து வேன்ஹர்களும் வசியமாகும்
மகத்தான ஸ்ரீபுருடர் வசியமாகும்
வசியமாம் சத்துருக்கள் வசியமாகும்
வாரணங்கள் மிருகமெல்லாம் வசியமாகும்
வசியமா மிரவிமின்னாள் வடவேர்வாங்கி
மைந்தனே ------------------- வேரும் வாங்கே

வேரிரண்டும் பச்சைபட் டதனில்வைத்து
மேலான ஆவின்புல் லுருவியோடு
கூரிரண்டு கஸ்தூரி மஞ்சளோடு
குங்குமப்பூ மூன்றுமரை பலமேகொண்டு
மாரிரண்டு மூன்றையுந்தான் பொடியாய்பண்ணி
மைந்தனே முதற்சீலை தனிற்பரத்தி
சேரிரண்டு வேரையும்தான் நடுவேவைத்து
திரியாக்கி தாம்புரத்தி லிட்டுததானே

இட்டுமே காராவின் நெய்யைவார்த்து
இதமாய்சிர சோட்டில்மை யெரித்துவாங்கி
கிட்டுமே புனுகுடன்சவ் வாதுசேர்த்து
கிருபையுள்ள மையைமத் தித்தேமந்திரம்
நாட்டுமே ஓம் ஸ்ரீயும் றீயுமென்று
நலமான சருவசம் பன்னமோகா
வெட்டுமே ---------------------வென்று
விதமாக அஞ்ஞூறு உருத்தானோதே

ஓதிடமுன் சொன்னதெல்லாம் வசியமாகும்
உத்தமனே ஓமென்று திலதம்போடே
-------------------------------------------------------

விளக்கம் உங்களுக்கே நன்கு புரியக்கூடியன, இலகு தமிழில் பாடியிருக்கிறார் சித்தர். 

இங்கு சில இடங்களில் சொற்களை மறைத்திருக்கிறேன், காரணம் தவறானவர்கள் இதை பயன்படுத்தி மற்றவரை ஏமாற்றக்கூடாது என்பதற்காக. மேலும் இதில் இருக்கும் வசிய கர்மம் அனுபவத்தில் கையாண்ட முறை என்பதால் இதன் தன்மை அறிந்தே இதை மறைத்து கூறியிருக்கிறேன். 

வாசகர்களும் சரி மாணவர்களும் சரி இதை ஓர் அஷ்டகர்ம பிரயோக சித்தர் பாடலாகவும் மூலிகைகளின் தன்மையை உணரவும் மட்டும் இது உதவியாக இருக்கும். 

நன்றி

சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்
  

No comments:

Post a Comment