Tuesday, February 11, 2014

மருத்துவ பதிவுகள் - அவதானம் தேவை

வணக்கம் தோழர்களே,

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புக்கள் என்ற பெயரில் பல தகவல்கள் இன்று அனேக இணையத்தளங்களில் வெளிவந்தபடிதான் இருக்கிறது, ஆனால் அதன் நம்பகத்தன்மையை எப்படி உருதி செய்வது என்ற சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது. 

அவரச அவசரமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலக வாழ்கையில் நமக்கு ஏற்படும் உடல் உபாதைகலிள் இருந்து வெளிவருவதற்கு இலகுவான வழிகளை தேடும் மனித குலம் எந்த ஒரு காரியத்தையும் பொருமையுடன் செய்ய விரும்புவதில்லை மாறாக உடனிடி நிவாரணம் கிடைக்கிறதாம் என்று நம்பி தமது உடலை நிரந்தர பிரச்சினைக்கு கொண்டு செல்கிறார்கள். 


யாரோ எங்கோ படித்த தகவல் என்று கூறினால் போதும் உடனடியாக அது சரிதான் என்று நம்புவது ஒருபக்கம், புத்தகங்களை (தகுதியானதா என்று தெரியாமல்) நம்பி செயல்படுவது, மற்றும் தற்போது இணையபதிவுகளை நம்பி தமது உடலை கெடுத்து வாழ்கையை அழித்து விடுகிறார்கள். 

நன்றாக சிந்திக்கவேண்டும்.......

மருத்துவம் என்பது என்ன, உடல் உபாதைகள் ஏன் வருகிறது, இதற்கான மருந்து எது, இதை யாரிடம் அனுகி பேசுவது, யார் தகுதியானவர் என்பது போன்ற கேள்விகளை நாமே நம்மிடன் கேட்க வேண்டும். 

யார் வேண்டுமானாலும் மருந்து கூறலாம் என்றால் எதற்கு கல்விச்சாலைகள், குருகுலங்கள், பட்டதாரி படிப்பு, முதுநிலை படிப்பு, அரச சட்டம் போன்ற எதுவும் தேவை இல்லையே. இத்தனை பரிசோதனை முறைகள் கருவிகள் என ஏன் விஞ்ஞானம் கஷ்டப்பட வேண்டும், சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் ஏன்  அல்லல் பட வேண்டும். 

யாரும் அலோபதி மருந்துகளின் பெயர்களை கூறி இதை எடுத்தால் நோய் தீரும் என்று பதிவிடுவதில்லை காரணம் அதன் செய்முறைகள் மற்றும் கவலைகள் தெரியாது மீறி பதிவிட்டால் அலோபதி மருத்துவர்கள் சட்ட நடவடிக்கையும் எடுப்பர்.

ஆனால் சித்த ஆயுர்வேத மருந்துகள் என்றால் கேட்பதற்கும் யாரும் இல்லை, குறை கூறவும் யாரும் இல்லை, மறுப்பதற்கும் யாரும் இல்லை என்பதால் அனைவரும் பதிவிடுகிறார்கள். 

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் இருத்துங்கள், இது இறைவனால் அருளப்பட்ட மருத்துவம் சித்தர்களும் ஞானிகளும் தங்களது தவ ஞானத்தால் பெற்ற வரம், தவறாக செயல்படின் நிச்சயம் தண்டனை கிடைக்கும் அது தீர்க்க முடியாததாக இருக்கும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதில் இருந்து தப்ப முடியாது தேவையற்ற சாபங்களை உங்களது குடுமத்துக்கு ஏற்படுத்தாதீர்கள். 

சித்த மருத்துவம் புனிதமானது இதை யார் வேண்டுமானாலும் கற்கலாம் ஆனால் சரியான தெளிவில்லாவிட்டால் அது நம்மையும் சேர்த்து அழித்துவிடும். சித்தர்கள் தமது பாடல்களில் தெளிவாக கூறியிருக்கிறார்கள், எப்படி செயல்படவேண்டும் என்றும் தவறின் அதன் விளைவு என்ன என்றும், ஆகவே பதிவுகளை பகிரமுன் அதன் விளக்கத்தை சரியாக நீங்கள் தெரிந்து பின்னர் வெளியிடுங்கள். 


ஆலோசனை கூறுவது மிக இலகுதான் அதை நீ செய்கிறீரா, என்றால் அது இல்லை. இன்று எத்தனை விஞ்ஞான கண்டுபிடிப்பிக்கள் வந்தாலும் சரி உலகின் மிக அபூர்வமானதும் கடினமானதும் யாராலும் செய்ய முடியாத இயந்திரம் அது மனித உடல், அப்படி மிக மிக அபூர்வமான இயந்திரத்தை திருத்தும் பனியை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் அதன் மகிமை மாசுபடுகிறது அல்லவா, ஆகவே சிந்தியுங்கள். ஆலோசனை என்ற பெயரில் கண்டத்தையும் கேட்டதையும் புரியாமல் பதிவிட வேண்டாம். 

சித்த ஆயுர்வேத மருந்துகள் கடுமையானவை மிக ஆபத்தானவை கொடிய நச்சுத்தன்மை உடையவை ஆகவே அவற்றை சரியான வழிகாட்டல் இல்லாமல் செய்வது மிக ஆபத்தானது. இந்த சூரணம் சாப்பிடுங்கள் இந்த வேரை குடியுங்கள், என்ற ஆலோசனைகளை நம்பி ஏமாற வேண்டாம். 

மனித உடல் அதன் தன்மை மனிதனுக்கு மனிதன் வேருபடும் ஆகவே இவருக்கு இருக்கும் அதே பிரச்சினை உங்களுக்கும் இருக்கும் ஆனால் அதன் காரணம் இருவருக்கும் வேறாக இருக்கும், ஆகவே இருவருக்கும் ஒரே மருந்து தீர்வாகாது. 

இந்த சிறு விடயம் புரியாமல்தான் உடல் பருமன் தொடக்கம் நீரழிவு வரை அனைவரும் ஒரே மருந்து எடுத்து எந்த பலனும் கிடைப்பதில்லை. 

அத்துடன் சித்த மருத்துவத்தை பெருத்தவரை அது தேனாக இருந்தாலும் சரி கடுகு, மிளகு, சுக்கு என எதுவாக இருந்தாலும் சரி அவற்றுக்குறிய சரியான சுத்தி முறைகளை செய்யாது விடின் அதன் உண்மையான மருத்துவ குணத்தை அடைய முடியாது. மேலும் சூரணம் செய்வதற்கு எனவும் அவற்றை எப்படி உண்ன வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருக்கிறது, அவற்றை மீறி செய்து எந்த பலனும் கிடைக்காது மாறாக மக்களிடம் இருக்கும் நம்பிக்கைதான் இல்லாது போகும். 

இனிவரும் காலங்களில் பதிவுகளை சரியானதா என்று ஆராய்ந்து பதிவிடுங்கள். 

நன்றி

1 comment: