இந்து தர்மத்துக்கும் உணவு பழக்கத்துக்கும் என்ன தொடர்பு என்று சரியான ஓர் புரிதல் இன்று பலரிடம் இல்லாமை கவலைக்குறியதே. அத்துடன் இன்றைய சாமியார்கள் தொடக்கம் குருக்கள் வரை அனேகர் இந்த மக்களை படுத்தும் பாடு சயிக்க முடியாது.
எதை பற்றி பேசுகிறேன் என்று புரியலயா இன்னும். இந்த சைவ அசைவ உணவுகளும் விரதங்களும் என்ற பேரில் பாடசாலை மாணவர்களை பெற்றோர் படுத்தும் பாடு தான் என்ன.
இறை வழிபாட்டுக்கும் சைவ அசைவ உணவுப்பழக்கத்துக்கும் என்ன தொடர்பு என்றே தெரியவில்லை. அதிலும் சைவம் என்ற சொல்லை வேறு அதற்கு சூட்டி அதையும் அதன் பேரில் ஓர் கண்டிப்பு நடவடிக்கையும்.
யார் இதை உருவாக்கியது என்று யாருக்கும் தெரியாது ஆனால் பலரும் இது பற்றி தெரியாமலே பின்பற்றுவது கவலைக்குறியது.
மரக்கறி உண்டால் தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பது யார் கண்டறிந்த உண்மையோ தெரியாது.
இதில் வேடிக்கை என்ன என்றால், இது மரக்கறி என்றும் இது மச்சம் என்று பிரித்தது யார். எதை வைத்து பிரிக்கப்பட்டது.
இறைச்சி வகை மச்சம் என்றால் இறைவனுக்கு அபிஷேகம் பன்ன பால் எடுப்பதும் அதை நாம் குடிப்பதும் மச்சம் அல்லவா! காரணம் இரத்தம் சுண்டி அல்லவா பாலாக தனது குட்டிக்கு தருகிறது. சரி அப்படியே பால் சைவம் என்று வைத்துக்கொள்வோம், கோரோசணை எனும் அபிஷேக பொருள் பசுவை அருத்தால் மட்டுமே கிடைக்கும் கொழுப்பு வகை அல்லவா! புனுகு, சவ்வாது, கஸ்தூரி, அம்பர் இப்படி இறைவன் விரும்பும் பொருட்கள் அனேகம் மச்சமாக அல்லவா இருக்கிறது, அது மட்டுமா ஆயிரக்கணக்கான கூண்டுப்புழுக்களை அழித்து அல்லவா தேன் கிடைக்கிறது. சரி அதிலும் விஷேடமாக சங்காபிஷேகம் என்ற பேரில் ஆயிரக்கணகான சங்குகளில் பால் எடுத்து இறைவனை அபிஷேகம் செய்கிறீர்கள், சங்கு ஓர் கடல் வாழ் உயிரின் உடல் அல்லவா, அது மச்சம் இல்லையா?
அதிலும் இன்னும் சிலர் குறிப்பிட்ட தினங்கள் சைவம் மற்ற நாட்கள் அசைவம், கேட்டால் பல காரணம், கிரக நிலை மாற சிலர், வியாபார விருத்தி சிலர், கல்வி தேர்வு பெற சிலர், திருமணமாக சிலரென பட்டியல் செல்கிறது முடிவு இல்லை.
அசைவம் உண்பதற்கும் சைவம் உண்பதற்கும் என இரண்டு வாய், குடல் என வேறாகவா இருக்கிறது, அதே நாவினால் தான் இறைவனை பாட வேண்டும், குளித்து விட்டும் கழுவிவிட்டும் பாடலாம் என்றால் அசைவம் எனும் மச்சம் உண்டு பின்னர் கழுவி விட்டு பாடலாம் தானே.
வட நாட்டில் இருக்கும் அந்தனர்கள் கங்கா புஸ்பம் என்ற பேரில் மீன் உண்பது எந்தனை பேருக்கு தெரியும்,.
ஒரு விடயத்தை கடைப்பிடிக்கும் முன் அதன் உண்மையை அறியுங்கள் தேவையற்ற விடயத்துக்கு கொடி பிடித்து ஆர்பாட்டம் செய்கிறீர்கள் ஏன் இதன் உண்மையை உணர முடியவில்லை உங்களுக்கு.
இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். சைவம் உண்பவருக்கு அதிக ஆசியும் அசைவம் உண்பவருக்கு குறைந்த ஆசியும் கொடுத்தால் அது இறைவன் அல்ல. அது பிசாசு.
வேதங்களில் இறைவனை வழிபடும் வழிகள் கூறப்படுகிறது ஆனால் இப்படி மட்டும் செய்தால் தான் இறைவன் உன்னை நாடுவான் என்று நான்கு வேதங்களும் கூறவில்லை.
மன தூய்மை உடல் தூய்மை இரண்டும் இறைவழிபாடுக்கு அவசியம் எனும் கருத்துடையவர்கள் தாராளமாக செயட்படலாம். மன தூய்மை என்பது ஆசை இல்லாதவருக்கு மட்டுமே, நேற்று சாப்பிட்ட பிரியானி இன்னும் நாக்கிலும் மனதிலும் இருக்கும் போது எப்படி குளித்தாலும் நினைவு மாறாது அல்லவா.
விரதங்கள் என்ற பேரில் குழந்தைகளை கஷ்டப்படுத்த வேண்டாம், குழந்தைகள் இறைவனின் அம்சங்கள் அவர்களது சேட்டைகள் இறைவனின் சேட்டை, அவர்களை தங்களது சுய புத்திக்கு வரும் வரை உண்மையை உணரும் வரை அப்படியே விடுங்கள், அவர்கள் நிச்சயம் இறைவனை உணர்வார்கள்.
விரதம் இருந்தால் நல்லா படிக்கலாம் பரீட்சையில் அதிக பலன் கிடைக்கும் என்றால் ஏன் மேலதிக வகுப்புகள்.
ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், எது எப்படி இருந்தாலும் இறைவனின் விதிப்பலனையும், நீங்கள் செய்யும் பாவங்களையும் விரதம் மூலமும் சைவ உணவு உண்பதன் மூலமும் நீக்க முடியாது. நடமுறையில் உங்களது செயற்பாடு சரியானதாக இருக்க வேண்டும், மக்களுக்கு நன்மையை செய்யுங்கள். அப்படி இருந்தால் இறைவன் உறைவது உங்கள் உள்ளத்தில் என்பதில் ஐயம் இல்லை. நீங்கள் எதை உண்டாலும் சரி அது அவனுக்கு தடை அல்ல. அது தடையாக இருந்தால் அதை அவன் படைத்திருக்க மாட்டான்.
இறைவனை ஏமாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டாம் அது நீங்கள் உங்களை மட்டுமே ஏமாற்றுகிறீர்கள்.
“வீட்டிருள் போகவென்ரு விளக்கேற்றி வைத்தால்
வீட்டிருள் எங்கே போச்சு விளக்கொளி எங்கே போச்சு
கூட்டினில் நடஞ்செய் ஈசன் குணமறியாமல் நீயும்
நாட்டினில் நடந்தாய் நாகநாதரை வணங்கு நெஞ்சே”
” தேடிக்கண்டுகொண்டேன் திருமாலுடன் நான்முகனை
தேடித்தேடொனா தேவனை என்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன்”
ஆலயங்கள் உருவானது ஏன் என்று தேடுங்கள் அப்போது சரியாக புரியும் உங்களுக்கு..
நன்றி
Nanre lya
ReplyDelete