வணக்கம் தோழர்களே,
நெல்லிக்கணியை பற்றி பலருக்கும் தெரிந்ததே, அதன் மகத்துவம் ஒன்றும் சிறியது அல்ல. அதன் பெருமையை கூறும் ஓர் கற்ப மருந்து இது.
பாடல்
வயிரமாம் நெல்லி முள்ளி தன்னை வாங்கி
மருவ நன்றாய் இடித்துமே சூரணமாக்கி
ஆயிரமாம் அப்பிரேகச் செந்தூரமாம்தான்
அதற்கெட்டு பங்குக்கு ஒன்று சேர்த்து
துயிரமாம் தேன் தன்னில் குழைத்து உண்ணு
சுகமாக மண்டலம்தான் உண்டாயானால்
கயிரமாம் காயமது கருங்காலிக் கட்டை
கனல்போலே சோதியாய் காணும் காணே.
விளக்கம்
நெல்லி வற்றலை சிறந்ததாய் வாங்கி வந்து நன்றாக இடித்து சூரணம் செய்து அதை அப்பிரேக செந்தூரத்துடன் எட்டுக்கு ஒன்று என்ற வீதம் கலந்து தேனில் மண்டலம் உண்ணவும்.
கவனிப்பு
(எட்டு பங்கு சூரணம் - 1 பங்கு செந்தூரம்)
பலன்
அப்படி உண்டால் தேகமானது இருகி பலம் பெரும் அதாவது கருங்காலி எனும் மரத்துக்கு ஒப்பாக இருக்கும் அத்துடன் உடல் சோதி போன்று பிரகாசிக்கும்.
குறிப்பு.
”ஆயிரமாம் அப்பிரேக செந்தூரம் தான்”
அதாவது அப்பிரேக செந்தூரம் பல முறைகளில் செய்ய முடியும், ஆயிரக்கணக்கான முறைகள் இருக்கிறது அதில் ஒன்றை பயன்படுத்தலாம் என பரிபாஷை கூறுகிறது.
நன்றி
"செந்தூரம்" சிங்கள பெயர் என்ன?
ReplyDeleteஎன்ன கே சீ மோகன் எங்கு ஏதாவது மொழிபெயர்ப்பு செய்வதாக விளம்பரம் உள்ளதா? அல்லது உமக்கு ஏதாவது ........... நடந்து விட்டதா?
ReplyDelete