அஷ்டகர்மம் பற்றி அடுத்து வருவது மோகனம் எனப்படும் மயக்கநிலை ஆகும்.
பாடல்
கேளப்பா மோகனந்தா னதிகசூட்சம்
கெடியாக மைஒன்று சொல்லகேளு
நாளப்பா கிராம்புமொரு கழஞ்சிதானும்
நயமான -------------பூச்சி கழஞ்சிகூட்டி
நீளப்பா இந்திரமாங் கோபபூச்சி
நிறுத்துநீ கழஞ்சியதிற் கூட்டிமைந்தா
சூளப்பா -----------பூச்சி கழஞ்சிபூரம்
சுகமாக வென்றாக்கி தூளாய்பன்னே
பண்ணப்பா முதற்றூசி லூட்டிமைந்தா
பருவமுடன் திரியாக திரித்துகொண்டு
விண்ணப்பா விளக்கிலிட்டு காரெள்ளெண்ணெய்
விட்டதிலே கபாலத்தால் விளக்கைமூடி
நண்ணப்பா மையிரங்கும் போதுமைந்தா
நலமான வடுகனுக்கு பூசைபண்ணு
எண்ணப்பா மோகனத்தின் லட்சமோது
இதமாக மைவாங்கி சிமிழில்வையே
வையப்பா புனுகுடன் சவ்வாதுதானும்
மத்திகோரோ சணையதை கூட்டிமத்தி
மெய்யப்பா மைச்சிமிழை திறந்துகொண்டு
விரயவே -------மென்று திலர்த்தம்போடு
உய்யப்பா உலகமெல்லாம் மோகமாகும்
ஓகோகோ புரூடரெல்லாம் மோகமாகும்
செய்யப்பா தேவரெல்லாம் மோகமாகும்
சிவனுமுதற் றேவியுமே மோகமாமே
விளக்கம்
சிவன் முதல் தேவியும் மோகித்து நிற்பார்கள் என்றால் இதன் தன்மையை எப்படி அளவிடுவது. உண்மையான மாணவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டிய இரகசியங்கள் இது, அதனால் தான் மறைப்புகள் வைக்கப்படுகிறது. பொதுவான ஓர் தகவளாக அனைவரும் தெரிந்திருப்பதில் தவறில்லை.
நன்றி
சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்
ஐயா,
ReplyDeleteஇந்த பதிவின் மூலம் அனைவரையும் மோகித்துள்ளீர்கள்
நன்றி