வணக்கம் தோழர்களே,
நீண்ட நாளாக மாந்திரீக பதிவுகள் மற்றும் மருத்துவ பதிவுகள் எதுவும் தரவில்லை என்று எமது மாணவர்களும் வாசகர்களும் மின்னஞ்சல் மூலம் கேட்டவாரு இருப்பதால், அவர்களுக்காக இனி சில பதிவுகள் வரும். நமது siththarvaakadam முக நூல் மூலமும் பல தகவல்களை கானலாம்.
சத்துரு மோகனம் எனும் சித்தர் வித்தை ஒன்றை இன்று பார்க்கலாம்.
மோகனம் என்றால் நம்மை சுற்றி இருக்கும் விடயங்களை நம் மீது மோகம் செய்ய வைப்பது என்று அறியவும். இது சத்துரு மோகனம் என்பதால் பொதுவாக நமது எதிரிகள் நம் மீது மோகம் கொள்ளுவர்.
பாடல்
“ சென்னாயுருவி வெண்குன்றி
சீதாதேவி செங்கழுநீர்
சொன்னார்துடரி சிறுபுன்னை
தொகுப்பாயஞ்சு வேர்களையும்
மன்னார்கோடக சாலையிலே
வகைசேர்சாத்தி லரைத்துருட்டி
என்னால்சத்துரு மோகனமாம்
இயபாய்த்திலத முறைதானே”.
விளக்கம்
குறிப்பிட்ட ஐந்து வேர்களையும் முறைப்படி காப்புகட்டி ஆணிவேர் அராமல் எடுத்து மேல் கூறிய சாற்றினால் அறைத்து வில்லைகள் செய்து பதப்படுத்தவும். தேவை ஏற்படும் போது அதை பயன்படுத்தலாம்.
இதில் மேலதிக விளக்க வேண்டும் என்று கேட்பவர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும், முறைப்படி மாந்திரீக பயிற்சிகள் செய்பவர்க்கு மட்டுமே இதன் மந்திர முறைகள் மற்றும் சித்தி செய்யும் முறைகள் பற்றி தெரியும் என்பதால், வெறுமனே இதை மிக்சியில் அறைக்கும் சட்னி என்று முயற்சி செய்ய நினைக்கவேண்டாம்.
இதற்கான மந்திர முறைகள் நமது மானவர்களுக்கு வழங்கப்படும்.
என்றும் அன்புடன்
சிவஸ்ரீ மா கோ முதலியார்.
No comments:
Post a Comment