வணக்கம் தோழர்களே,
சித்தர் இலக்கியத்தில் அடுத்து பேசப்படும் ஓர் கலை வர்ம சூத்திரம், இது ஓர் மருத்துவம் சார்ந்த கலையாகவும், போர்க் கலையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
வர்ம சூத்திரத்தை பற்றி அதிகமாக பாடியிருப்பது அகத்தியரும், போகரும் ஆகும்.
இதர சித்தர்கள் பலர் பாடியிருந்தாலும் இவர்களின் பாடல்கள் மிக தெளிவாக இருப்பது காணக்கூடியதாக இருக்கிறது.
உடலின் நரம்பு மண்டலத்தையும் தச வாயுக்களையும் கட்டுப்படுத்தும் ஓர் சக்தியாக வர்ம சூத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திடீர் என ஏற்படும் அதிர்வு கூட ஒருவரை மரண படுக்கைக்கு கொண்டுசெல்லும் என்பது அனைவரும் தெரிந்த விடயமே அதன் பின்னனியில் இருப்பது தான் இந்த வர்ம சூத்திரம். வேறு எந்த மருத்துவ முறையிலும் வர்ம சூத்திரம் பற்றி பெரிய விளக்கங்கள் கூறப்படவில்லை என்பதும் சித்த மருத்துவத்திற்கே உறியதாக இருப்பது இந்த வர்ம சூத்திரம், மாறாக வேறு மருத்துவ முறையில் பயன்படுத்தப்படும் வர்ம முறைகள் சித்தர்களிடம் இருந்தே சென்றது என்பது தான் உண்மை.
ஒரு சித்த மருத்துவர் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய விடயங்களில் வர்ம சூத்திரமும் ஒன்று. நாடிப்பரீட்சை எப்படி அனாதியானதோ அதே போல் இந்த வர்ம புள்ளிகள் அதன் தன்மைகள் அதன் விளைவுகள் அதற்கான தீர்வுகள் என பல விடயங்கள் தெளிவாக புரிந்தால் தான் சித்த மருத்துவம் முழுமையடையும்.
இன்று மருத்துவத்துறை எந்த அளவுக்கு வளர்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட பிரசினைக்கான தீர்வு அனைவருக்கும் கிடைப்பதில்லை, இதற்கான காரணம் மருத்துவம் பிரிக்கப்பட்ட விதம் தான் என்பது எனது கருத்து.
ஒரு சித்த மருத்துவர் தனியே மூலிகைகளை பற்றி தெரிந்திருந்து எந்த பலனும் முழுமையாக கிடைக்காது, அதே போல் பற்ற்பம் செந்தூரம், களங்கு, குரு மருந்து என தெரிந்தும் பல இடங்களில் அவரின் மருந்துகள் பலன் தராமல் போவதற்கு இது தான்காரணமாகிறது.
உதாரணமாக கூறினால், வர்ம தாக்குதலுக்கு உட்பட்ட ஒரு நோயாளியை வெருமனே மருந்துகளால் மட்டும் காப்பாற்ற முடியாது அதே வேலை குறிப்பிட்ட வர்ம தாக்குதலின் விளைவுகளை வர்ம தட்டுகள் மூலமும் குனப்படுத்த முடியாது, இரண்டு முறைகளும் சரியாக தெரிந்தால் தான் அதில் இருந்து ஒரு பாதிப்பாலரை குணப்படுத்த முடியும்.
தற்போது இவை தனித்துறைகளாக ஆனபின் பாதிப்படைவது நோயாளர்களாகவே இருக்கிறார்கள்.
வர்மங்கள் பற்றியும் அவற்றுக்கான சரியான மருந்துகள் பற்றியும் சரியான் தெளிவு இருப்பின் பலதரப்பட்ட நோயாளர்களை காக்க முடியும்.
தச வாயுக்கள் அவற்றின் இருப்பிடம், நாடிகளின் பரீட்சை முறைகள், நரம்பு மண்டலம் பற்றிய சரியான ஆய்வு செய்தால் அவை நிச்சயம் ஓர் சித்த மருத்துவரை புகழடையச்செய்யும் என்பதில் ஐயம் இல்லை.
நமது முன்னோர்கள் கையாண்ட மருத்துவ முறைகளில் வர்ம ரகசியங்கள் பற்றி ஆய்வு செய்து அவற்றுக்கான பல விடயங்களை கூறியிருக்கிறார்கள்.
அவற்றில் இருந்து சில பதிவுகளை உங்களுக்கு வரும் தினங்களில் சில குறிப்புக்களாக பதிவிட இருக்கிறேன் என்பதில் மகிழ்சியடைகிறேன்.
நன்றி
No comments:
Post a Comment