Sunday, February 9, 2014

மூலிகைகள் பற்றி ஓர் விளக்கம்

வணக்கம் தோழர்களே,

மூலிகைகள் என்ற பெயரில் பலரும் பல வலைதளத்தில் புதிய புதிய தகவள்கலை பதிவிடுகிறார்கள். மூலிகைகளை இனங்கான இன்று இலகுவான ஓர் முறை தாவரவியல் பெயர் என்று பலரும் கருதி அதை வைத்துக்கொண்டு இணையத்தில் தேடி அதை பற்றிய விடயங்களை புத்தகங்களில் இருந்து படித்துவிட்டு பதிவிடுகிறார்கள்.

ஆனால் இதில் இருக்கும் ஓர் சிறிய விடயத்தை யாரும் சிந்திப்பதாக எனக்கு தோனவில்லை. அதாவது தாவரவியல் பெயர் என்பது நமது கண்டுபிடிப்பு அல்ல, அது மேலத்தேய விஞ்ஞானிகளின் விஞ்ஞான ரீதியான பகுப்பாய்விற்கான ஓர் இலகு வழி ஆம் அது நன்மையானது தாவரலியல் கற்கும் மாணவர்களுக்கு மிக அவசியமானது.  

இங்குதான் நாம் தவரான பாதையில் செல்கிறோம். சித்தர்களும் ஞானிகளும் கூறியது இதுதான் என்ற முடிவு யார் எடுத்தது. குறிப்பிட்ட தாவரம் இது என்பதை எவ்வாறு தீர்மானிப்பது. சித்தர் கூறிய குண பாடத்தில் இருந்து எடுப்பதாக இருந்தால் அதை மேலத்தேய விஞ்ஞானிகள் செய்யவில்லை. 

அதிலும் சித்தர்கள் கூறியபடி குறிப்பிட்ட நேரத்தில் குறித்த திசையில் குறித்த இடத்தில் (மண்) இருக்கும் மூலிகையை சாபம் நீக்கி எடுத்தால் தான் அது பலன் தருவதாக கூறியிருக்கிறார்கள், இப்படி இருக்கும் போது வெருமனே ஓர் மூலைகையை எடுத்து அதன் இரசாயன அல்லது வேதியல் அம்சத்தை ஆராய்ந்து கூறுவதன் மூலம் சரியான அல்லது அதன் குறிப்பிட்ட சக்தியை எப்படி நிர்னகிக்க முடியும். 

குறிப்பாக மூலிகைகள் பற்றிய பல அகராதிகள் சித்தர்களால் கூறப்படுள்ளது, அதில் ஒரு மூலிகைக்கு அதிக பட்ஷமாக முப்பத்து ஆறு வித பெயர்கள் இருக்ககூடும் என சொல்லப்படுகிறது. ஆகவே இது சரியான மூலிகைதான் என எவ்வாறு தாவரவியல் பெயரைக்கொண்டும் தீர்மானிக்க முடியும். விஞ்ஞான ரீதியாய் ஆய்வு செய்து அதன் உண்மையை கண்டிருந்தால் இன்று அலோபதி எனும் ஆங்கில மருத்துவம் மட்டுமே இருந்திருக்கும், ஆனால் அவர்களால் இன்றும் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாத எத்தனையோ விடயங்கள் சித்தர் பெருமக்கள் நம்மிடையே விட்டுச்சென்றிருக்கிறார்கள். 


மூலிகைகள் தொடர்பான ஆய்வு என்பது மிக கடினமாது அதிலும் ஓர் குறிப்பிட்ட மூலிகைக்கு மாரான கள்ள மூலிகையும் ஒன்று இருக்கிறது என்பது சித்தர்கள் கூற்று அதையே சக்காளத்தி மூலிகை என்று கூறுவர். ஆகவே இது தான் சரியான மூலிகை என்று அனைத்துவித மூலிகைக்கும் தாவரவியல் பெயரைக்கொண்டு இனங்கான முடியாது. 


மிக எழிதாக பார்த்தால் நத்தைசூரி எனும் மூலிகையை இணையத்தில் தேடினால் பல வித படங்கள் கிடைக்கும், அதிலும் ஆண் என்றும் பெண் என்றும்  இருக்கிறதாகவும் கூறப்படுகிறது.  ”சொன்னதை செய்யும் சூரியாம் நத்தை” என்பது சித்தர் பாடல் (மாந்திரீகத்தில்). அஷ்டகர்ம பிரயோகத்தில் தம்பனம் எனும் வித்தையை செய்வது நத்தைசூரி. குறிப்பிட்ட முறைப்படி செய்து தாயத்தாக அணிந்து சென்றால் எந்த ஆயுதம் கொண்டும் நம்மை அழிக்க முடியாது என்கிறது சித்தர் பாடல். இதை யார் இப்போது செய்து பார்த்தது, அப்படி செய்து பார்த்து விட்டு தான் கூறவேண்டும் இது நத்தைசூரி என்று என்பது எனது கருத்து. 

அப்படியே தான் மருத்துவ ரீதியாகவும் செய்ய வேண்டும், இதற்கிடையில் ஒரே தன்மை கொண்ட பல மூலிகைகள் இருக்கிறது என்பதால் குறிப்பிட்ட மூலிகை தான் இது என்பதும் சரியாக கூறமுடியாத நிலையே நம்மிடம் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் பலராலும் இனங்கண்ட சரியான மூலிகை என கூறப்படும் மூலிகைகளை கூட சிலர் வேறு பெயரைக்கொண்டு அதற்கான மருத்துவ முறைகளையும் பதிவிடுவது மிக தவரானது. 


பதிவு மிக பெரியதாக இருப்பதால் இரண்டாம் பதிவில் படங்களுடன் சில விளக்கங்களை தருகிறேன். 

நன்றி
 

1 comment: