Tuesday, February 4, 2014

திருவாசி எனும் மகா மந்திரம்

வணக்கம் தோழர்களே,

தோழர்கள் பலரும் மின்னஞ்சல் மூலம் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியவாரு இருக்கிறீர்கள். அத்துடன் புதிய பதிவுகள் இல்லை என்ற கவையும் வேண்டுகோளும் கூட வருகிறது. தவறாக நினைக்க தேவையில்லை அளவுக்கு மீறிய பல செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதால் நேரம் போதாத நிலை இருக்கிறது. அத்தோடு பதிவும் சரியானதாகவும் தேவையானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவதால் குறிப்பிட்ட பதிவை சிந்தித்து பகிர்கிறேன். எதையாவது பதிவிடுவதானால் கவலை இல்லை.

மந்திர வரிசையில் இம் முறை உங்களுக்கு தரப்போவது ஓர் வரம், எனது குருமார் எனக்கு தர பல காலம் எடுத்த விடயம் இது இருப்பினும் தற்போது இதன் விளக்கத்தையும் பன்பையும் மட்டும் விளக்க இருக்கிறேன். 

தேவைப்படும் சந்தர்ப்பத்தில் இதை எவ்வாறு பயன் படுத்தவேண்டும் என்ற தீட்சை நிச்சயம் நம்பிக்கையுள்ள அனைத்து மாணவருக்கும் தரப்படும். 


திருவாசிக்கு எதிர்வாசி இல்லை என்பது நாட்டு பழ மொழி. இதை வைத்தே இதன் சக்தியை கணக்கிட முடியும். 

ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் அவனே சைவத்தின் தலை மகன் அவனே சிவன் என அழைக்கப்படுபவன். அவனுக்கு எதிர் நின்ற சக்தியே பராசக்தி என அழைக்கப்படுகிறாள். அவளே மந்திர வடிவினியாகவும் வாலை புவனை திரிபுரை என சித்தர்களால் போற்றப்படுபவள். அவ்வாரு போற்றப்படும் சக்தி சிவனுக்கு எதிர் நின்று செய்த மந்திர பிரயோகமே திருவாசி மந்திரம் என அழைக்கப்படும். 

இது மலையால மாந்திரீகத்திலும் சரி அதர்வன வேதத்திலும் சரி இடம்பெறாத இரகசிய மந்திர முறையாகும். பாரம்பரிய சித்தர் வம்சத்தில் வந்தவர்களிடம் மட்டுமே இருக்கும் ஓர் சக்தி வாய்ந்த மந்திரம் என்பதில் சந்தேகம் இல்லை. 

இது 16 குத்துக்கள் கொண்டது, அதாவது 16 வகையாக பிரிக்கப்பட்டு அத்தனை மந்திரங்களுக்கும் யந்திரம் தந்திரம் மூலம் என தனி தனி சிறப்புக்கள் இருக்கிறது. 

இதன் தனி சிறப்பு யாதெனில், ஒரே மந்திரத்தை பயன்படுத்தி அஷ்டகர்ம பிரயோகம் செய்ய முடியும். வசியம் முதல் மாரணம் வரை அனைத்து விடயத்தையும் செய்ய முடியும். இதை குரு மூலமாக சித்தி செய்தவர்களும் தீட்சை பெற்றவர்களும் வேறு எந்த மந்திர பிரயோகத்தையும் செய்வது இல்லை.    


அதனால் தான் திருவாசிக்கு எதிர்வாசி இல்லை என்று கூறுகிறார்கள் சான்றோர்கள். 

இங்கு நான் உங்களுக்கு வரிசை கிரமமாக சில மந்திரங்களை தர இருக்கிறேன், ஆனால் அதன் சித்தி செய்முறையும் அதன் பயன்பாடும் உண்மையாக மந்திர கலையை கற்கும் மாணவர்களுக்கு தீட்சையின் பின்னர் உபதேசிக்கப்படும். 

பதிவை பார்க்கும் அன்பர்கள் கேபப்பட தேவையில்லை, இதுவரையிலும் நான் உங்களில் பலரிடம் இருந்து பெற்ற மின்னஞ்சல் மூலம் தெரிந்துகொண்ட விடயம், பலரும் குரு என்ற ஒன்று இல்லாமல் தான் கண்டதையும் கேட்டதையும் கடைகளில் இருக்கும் புத்தகங்களில் உள்ள மந்திரங்களியும் படித்துவிட்டு, அதை எப்படி செய்வது இதை எப்படி உணர்வது என்று அடி தலை தெரியாமல் நேரத்தையும் காலத்தையும் வீனடிக்கிறீர்கள். 

சரியான தேடல் இருந்தால் எதையும் சாத்திக்க முடியும் என்பதில் முழுமையான நம்பிக்ககை கொண்டவன் நான், ஆகவே அவர் சரி இல்லை இவர் சரி இல்லை என்ற குற்றச்சாட்டை விடுங்கள் முதலில், நீங்கள் சரியானவரா என்று பாருங்கள். 

குருவருள் என்பது அனைவருக்கும் கிடைப்பது அல்ல என்ற என்னம் தவரானது, முயன்றால் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்குங்கள். நீங்கள் தேடுவது உண்மையானதாக இருந்தால் கிடைப்பதும் உண்மையானதாக இருக்கும். 

உங்களில் பலர் மந்திரம் கற்பதன் காரணம் என்ன என்று உங்களுக்கே தெரியாது. குடும்ப கஷ்டம் நீங்க சிலர், பணம் வர சிலர், பெண்களை எடுக்க சிலர், மற்றவரை ஏமாற்ற சிலர், திருமணமாக சிலர் என ஏதோ காரணங்களுக்காக மந்திர உபாசனை செய்கிறீர்கள். எத்தனை பேர் ஞானத்தை அடையவும் முக்தி கிடைக்கவும் என உபாசனை செய்கிறீர்கள். 

இத்தனை கவலை உங்களுக்கு ஏன் என்று நீங்கள் கேட்கலாம், நான் பாரம்பரிய சித்த மருத்துவ மற்றும் மாந்திரீக வம்சத்தில் பிறந்தவன் என்பது உங்களுக்கு தெரியும் இருப்பினும் அடியேனும் ஏதோ தேவையற்ற காரணங்களுக்காகவே மந்திர வித்தைகளை கற்க முயன்றவன் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம், ஆனால் அதன் விளைவுகளை கடுமையாக அனுபவித்தவன் சோதிக்க நினைத்து சோதிக்கப்பட்டவன், வருத்த நினைத்து வருத்தப்பட்டவன், சித்தர்களை பிச்சைகாரன் என்று கேலிபன்னி நானும் பிச்சை எடுத்து உண்டவன், நிர்வானமானவரை கேலி செய்து நிர்வானமாக இருந்தவன் என பல வேடங்களை தாண்டிய பின்னரே பராசக்தியின் சிறிப்பை கண்டவன் அவள் மடியில் இருந்து பேசும் பாக்கியம் பெற்றவன், என் பெருமானை சுடலையில் தரிசனம் கண்டு பயந்து நடுங்கியவன், வாலை புவனை திரிபுரை என மூன்று சக்திகலுக்கும் அர்ச்சனை செய்பவன், வராகி எனும் சப்த கன்னிக்கு அடிமையானவன், கால வயிரவர் எனும் அஷ்ட வைரவர்களை பூசிப்பவன், சித்தர்களை சிவனாகவே வணங்குபவன், அனைத்துக்கும் மேலாக என்னை ஈன்ர தாயை ஆலயமாக கொண்டவன், தந்தையை மதிப்பவன், ஆக எனது வாழகை துனையோடும் குழந்தைகளோடும் இப்போது ஞானத்தையும் முக்தியையும் பெற முயற்சி செய்பவன் நான். 

”நாயினும் கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயினும் சிறந்த தயவான தத்துவனே”

ஆகவே நான் பட்ட துண்பங்களை நீங்களும் பட தேவை இல்லை என்பதற்காகவே இந்த விளக்கம், சிரியான பாதை கிடைத்தாள் அனவரும் சித்தர்களே. ஆகவே ஏன் கற்கிறோம் என்ற கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேளுங்கள். 

சரி பதிவு எங்கோ தொடங்கி எங்கோ செல்கிறது போல் இருக்கிறது, விடயத்துக்கு வருவோம். 

திருவாசி மகா மந்திரம் 1ம் மந்திரம்

ஓம் ஓங்ஙார சக்தி ஒளியாகி நின்ற ஈசுபரனுக்கெதிரே திருவலங்கார திருவாசியாய் நின்று அறுத்தவளே அடியார்க்கு விட்ட மருந்து மந்திர வசிய தம்பன் மோகன கக்கிஷ வித்தைகளை எல்லாம் திருவலங்கார திருவாசியாய் நின்று அறுத்தருள் செய்குவாய் சுந்தரி கௌரி சிவாய நம. 

மூலம்

ஓம் அங் உங் ஸ்ரீங்ங ஸ்ரீங்ங ஐயும் கிலியும் சுவாகா

தந்திரம்

தீட்சையின் பின்னர்

அட்ஷரம்
















கிரிகை

தற்போதைக்கு மனனம் செய்யுங்கள் பின்னர் விளக்கம் தருகிறேன்.

என்றும் அன்புடன்

சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்
muthaly@gmail.com


1 comment: