இலகுவாக பயன்படுத்த கூடிய கற்ப மருந்துகள் பற்றி கேட்ட நண்பர்களுக்காக சில கற்ப முறைகளை பதிவிடலாம் என நினைக்கிறேன். அதன் ஆரம்பமாக விஷ்ணுகரந்த கற்பம் பற்றிய விளக்கம் உங்களுக்காக.
சித்தர் பாடல்களையும் எழுதி அதன் விளக்கத்தயும் தருவதற்கு அதிக நேரம் தேவை என்பதால் இன்று மட்டும் பாடலுடன் பதிவிடுகிறேன். இனி வரும் கற்ப முறைகள் பாடல்கள் இன்றி செய்முறை பதிவிடப்படும்.
பாடல்,
திறந்திட்ட விஷ்ணு கரந்த தனைக்கொணர்ந்து
செப்பமாய் மண்டலந்தான் பாலிலரைத்துண்ணு
மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்
மாசற்ற எழும்புக்குள் சுரம்தான் போகும்
கறந்திட்ட தேகமது கருத்து மின்னும்
கண்ணொளிதான் யோசனை தூரந்தான் காணும்
பிறந்திட்ட சுவாசமெல்லாம் இறுகிஏறும்
ஏற்றமாம் சுழிமுனையும் திறந்துபோமே.
விளக்கம்
நன்கு முதிர்ந்த விஷ்ணுகரந்தைகளை கொண்டுவந்து பாலில் அரைத்து மண்டலக்கணக்காக அருந்தி வந்தால்,
மறந்து போன நினைவுகள் திரும்பும்
எழும்பை பற்றி நிற்கும் சுரங்கள் அகலும்
தேகமானது உருதியாகி கருத்து (பலத்து) மின்னும்
கண் ஒளி பிரகாசமாக தெரியும்
சிந்தனை சிறந்து விளங்கும்
சுவாசம் சீரடையும், (மூச்சு பயிற்சி இலகுவாகும்)
சுழிமுனை திறந்து யோகம் கிட்டும் (வாசி யோகம்)
இது போகரின் பாடல்
விஷ்ணுகரந்தை அல்லது விஷ்ணு கிராந்தி
நன்றி
No comments:
Post a Comment