Thursday, February 20, 2014

மருந்துகளில் அவதானம் வேண்டும்

வணக்கம் தோழர்களே,

பலதரப்பட்ட வலைதளங்களில் கானப்படும் (எனது தளம் உட்பட) மூலிகை மருந்துகள் என்ற பெயரில் பதிவாகும் பல மருந்துகள், கற்பங்கள், தைலங்கள் என பெரும்பாலானவை மிக ஆபத்தான மருந்துகள் என்பதை கவனத்தில் வையுங்கள். 

நாட்டு மருந்து பக்க விளைவு அற்றது மூலிகைகளில் என்ன கேடு வரப்போகுது என்று விவாதம் பன்னும் அனைவரும் கவனமாக படியுங்கள்.

நவீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்தாலும் கிடைக்காத பல ஆயிரம் இரகசியங்களை சித்தர் முதல் ஞானிகள் நமக்கு பாடலாக தந்திருக்கிறார்கள். அவற்றில் புதைந்து கிடக்கும் இரகசியங்கள் கோடிக்கணக்கானது. அது போல் மருத்துவத்திலும் பல இரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் இருக்கிறது, உதாரணமாக மக்களுக்கு தீங்கு செய்பவர்கைகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய கற்ப மருந்தின் இரகசியம் தெரிந்துவிட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று நினைத்தே பல இரகசியங்களை பரிபாஷையாகவும் குருகுல முறையிலும் பாரம்பரிய முறையிலும் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

அதேபோல் மருந்துகளின் குணபாடம் கூறியவர்கள் அதன் நச்சுத் தன்மைகளையும் தனியே பாடி இருக்கிறார்கள், அதை மறைபுகமாகவும் பாரம்பரியமாகவும் இரகசியமாக வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இன்று நாம் கானும் வலைதளங்களில் இருக்கிறது. கடைகளில் சித்தர் பாடல் புத்தகம் ஒன்றை வாங்கி அதில் இருக்கும் பாடலை பதிவிட்டால் அவரும் மருத்துவரே என்ற நிலை கானப்படுவது தான். 

இதை இப்படி செய்யுங்கள் அதை அப்படி உண்ணுங்கள் என்று தயக்கம் இன்றி பதிவிடும் தோழர்களே, தயவு செய்து உங்கள் பதிவில் இருப்பது மருந்து மட்டும் தானா அல்லது உயிரை மெதுவாக போக்கும் நஞ்சும் உண்டா என்பதை உணர்ந்து பதிவிடுங்கள். 

பக்க விளைவு என்பது அனைத்திலும் உண்டு, அது இயற்கையில் அதிகம் உண்டு. நாம் தினமும் உண்ணும் காய்கறிகள் முதல் மருந்தாகும் மூலிகைகள் வரை அது அதிகமாகவே இருக்கிறது. 

அதை அதிகம் சாப்பிட்டால் வாதம் வரும், இதை சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும், இதை குடித்தால் கபம் வரும் என்று ஏன் கூறுகிறார்கள். இவை பக்கவிளைவுகள் இல்லையா! 

”அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று நம் முன்னோர்கள் தெளிவாக கூறியிருப்பது ஏன் என்று சிந்திப்பதில்லை நாம். 

தினம் நாம் சாப்பிடும் உணவில் இத்தனை கெடுதி இருப்பதால் தானே நோய்கள் வருகின்றன, அதுவே முறையற்ற மருந்துகளை உண்டால் என்ன விளைவு ஏற்படும் என சிந்திப்பதே இல்லை. 

உடம்பு குறைய அதை உண்ணுங்கள் என்று பதிவில் இருக்கும் ஆனால் அதை உண்டால் இதய நோய் வரும் என்பது தெரியாது, இதை தான் பக்க விளைவு என்பது. 

சரியான ஆலோசனைகள் இல்லாமல் கிடைக்கும் எந்த மருந்தாக இருந்தாலும் அதில் ஆபத்துக்கள் கானப்படும் என்பதை நினைவில் வையுங்கள். 

உதாரணமாக.

திரிகடுகம் அல்லது திரி கடுகு என கூறப்படும் ”சுக்கு, மிளகு, திப்பிலி” இந்த மூன்று சரக்குகளும் சரியான முறையில் சுத்தி செய்யாவிடில் நமது நுரையீரல் மெதுவாக பாதிப்படைந்து அதிக தூரம் நடக்கும் போது சிறு கலைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு ஓர் காரணமான தீய சக்தியாய் மாற்விடும். 

ஆனால் திரிகடுகம் என்பது உயிர் காக்கும் கற்ப மருந்து இதை முறைப்படி சுத்திசெய்து சூரணம் செய்து சூரணத்தை மீண்டும் சுத்தி செய்து நமது உடலின் தகுதிக்கு ஏற்ப குறிப்பிட்ட சேர்கை மருந்துடன் மண்டலம் உட்கொண்டால் பல ஆண்டுகளுக்கு எந்த ஒரு பக்டீரியாவும் நமது உடலை தாக்கது. 

திரிகடுகம் சுத்தி செய்யும் முறையை கவனுயுங்கள், அதன் நச்சுத்தன்மையை நீங்களே உணர முடியும். 

சுக்கு

நன்றாக காய்ந்த சுக்காக தெரிவு செய்து அதன் மேல் தோலை நன்கு சுரண்டி போக்க வேண்டும் பின்னர் சுண்ணாம்பு தெளிவு நீரில் 1 1/2 மணி நேரம் ஊரப்போட்டு எடுத்து மீண்டும் சுத்த நீரில் அலம்பி எடுத்து காயவைக்கவும்.

மிளகு

சிறுதீயாக மண் ஓட்டில் போட்டு வாசனை கிளம்ப வருத்து எடுக்கவும்

திப்பிலி

சித்திரமூல கியாழத்தில் அதாவது கொடிவேலி வேர் பட்டை சாறு அல்லது அதன் கியாழம் செய்து அதில் 4 சாமம் ஊரப்போட்டு எடுத்து (12 மணி) நன்கு சுத்த நீரில் அலம்பி காயவைத்து எடுக்கவும்.

இதில் எவ்வளவு கெடுதியான விடயம் இருந்தால் இப்படி செய்ய வேண்டும் என கூறியிருப்பார்கள்.


ஆகவே சரியான ஓர் முறை தெரியாமல் வெருமனே கண்டதையும் கேட்டதையும் சாப்பிட்டு விட்டு வேறு பாதிப்புக்கள் ஏற்படும் போது என்ன என்று தெரியாமல் அவலப்படுவதை நிருத்துங்கள். 

சரியான பதிவாக இருந்தாலும் சரி அதை ஒருமுறைக்கு இருமுறை சரியானவர்களிடம் கேட்டுவிட்டு முயற்சி செய்யுங்கள். 

“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் 
அப்பொருள் மெய்பொருள் கான்பதரிது”

நன்றி

சிவஸ்ரீ மா. கோ. முதலியார்
சித்த வைத்தியர்.

 

1 comment: