வணக்கம் தோழர்களே
அஷ்டகர்ம பிரயோகம் பற்றி கேட்ட சிலருக்கு சித்தர் பாடல் மூலம் தம்பன கர்மம் ஒன்றை செய்வதற்கான பாடல் இது. முடிந்தால் உங்கள் குருவின் ஆசியோடு செய்து பாருங்கள்.
மிக சக்திவாய்ந்த தம்பன கர்மம் இது. அனுபவ உண்மை.
பாடல்
...........................................
..........................................
வாதிடமுன் வந்தபடை மாறியோட
மாமிலத்தி லரசரெல்லாம் வசியமாக
சாதிடமுன் சாத்தியன் கைபாணமாறச்
சதிராம்பீ ரங்கிவெடி குண்டுமாறச்
சூதிடமா யின்னமொரு சூட்சஞ்சொல்வேன்
சுருக்கடா செம்பரத்தை வடக்குவேரே
செம்பருத்தை ஞாயிருக்குக் காப்புகட்டி
திறமாகா நவசாபம் நிவர்த்திசெய்து
உம்பருக்கும் அறியாத கனேசன்மூலம்
ஊமெனவும் ஆமெனவும் உருலெட்சம்தான்
நம்பருத்த பலியாடு கோழிபன்றி
ரத்தபெலி யூட்டிமறு கிழமையன்று
வம்பருக்கும் சொல்லாதே பொங்கல்தூபம்
மாட்டியே தியானத்தால் வேருவாங்கே
வாங்கியந்த வேரதனை பஞ்சலோக
மகிமையாம் தகடதிலே பொதிந்துகொண்டு
தாங்கியந்த குளிசமதை கரத்திலேந்தி
தம்பனந்தான் நூற்றிருபத் தெட்டுமோது
ஓங்கியந்த குளிசமதை சிரசில்கட்ட
ஓகோமுன் சொன்னதெல்லா முன்னையாகும்
......................................................
.....................................................
விளக்கம்
செம்பரத்தைக்கு ஞாயிரு கிழமை காப்பு கட்டி குறிப்பிட்ட பலிகளை கொடுத்து குறிப்பிட்ட மந்திரங்களை உருச்செய்து வடக்கு வேரை எடுத்து பஞ்சலோக கூட்டில் அடைத்து சிரசில் கட்டினால் நாடாலும் அரசர் முதல் படைகள் ஆயுதங்கள் என அனைத்து விடயங்களையும் உங்கள் முன் அடிபனிய வைக்கலாம் என்பது பொருள்.
இதில் இருக்கும் சூட்சும மந்திரங்களை உங்கள் குரு நாதர்களிடம் கேட்டு தெரிந்து அதன் பின் முயற்சி செய்யுங்கள்.
சூட்சும மந்திரங்கள் குரு உபதேசம் மூலம் கிடைக்கவேண்டும் என்பதால் அதை பதிவிட வில்லை.
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த வைத்தியர்
No comments:
Post a Comment