இன்றைய காய கற்ப மருந்து ஓரிலை தாமரை. இது உடல் சூட்டை தனிப்பதற்கு மிக சிறந்த மருந்து.
பாடல்.
ஏமமாம் ஓரிலைதாமரை சமூலம்
இணைத்துமே சூரணித்து நெய்யிற்கொள்ள
சேகமாய் உடம்பில்நின்ற வேகமெல்லாம்
சிதைந்துமே போய்விடும் சிறுநீர்தானும்
காமமாய் குளிர்ந்துவிடும் கண்புகைச்சல்
காமாலை வறட்சியொடு கடியபித்தம்
வமமாய்ப் போடுவிடு மண்டலந்தான் கொள்ளு
மகத்தான ரோகமெல்லாம் மாறிப்போமே.
முறை
திடமான நல்ல பூக்களுடனும் காய்களுடனும் கூடிய ஓரிலை தாமரை செடிகளை பிடுங்கி வந்து நன்கு நீரில் அலம்பி நிழலில் காய வைத்து சூரணம் செய்து அதை தினமும் 1 தேக்கரண்டி வீதம் சுத்தமான பசு நெய்யிற் குழைத்து உண்ண வேண்டும்.
பலன்கள்
1. உடல் சூட்டை தனித்து நல்ல குளிர்ந்த தேகம் கிடைக்கும்
2. சிறு நீர் எரிச்சல் நீங்கும்
3. கண்களில் இருக்கும் புகைச்சல் தீர்ந்து நல்ல் தெளிவான பார்வை கிடைக்கும்
4. காமாலை நோய் உடலை தாக்காது
5. உடல் வறட்சி நாக்கு வறட்சி போன்றவை நீங்கும்
6. உடலை துன்படுத்தும் பித்தம் சீராகும்
7. இதன் பலனால் நாடி சீராக இயங்கும்
8. இரத்தம் தூய்மையாகி ஆரோக்கிய தேகம் கிடைக்கும்.
9. இது உடல் வலுவுக்கு மிக சிறந்த மருந்து.
மூலிகைகளில் பல குணங்கள் இருக்கும் ஆனால் அவற்றை சேர்மானமாக இருக்கும் சரக்குக்கு ஏற்ப அதன் விளைவு இருக்கும் என்பதை ஞாபகத்தில் இருத்துங்கள்.
நன்றி
No comments:
Post a Comment