Friday, October 4, 2013

சித்த வைத்தியம்

அன்பான வாசகர்களே,

நீங்கள் ஆசைப்பட்டு கேட்கும் மூலிகைகள் தொடர்பான விடயங்களை வெளியிடுவதில் அடியேனுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் சித்த வைத்திய குறிப்புக்கள் சற்று சிந்தித்தபின்ன்ரே பதிவிடமுடியும். அதற்கான காரணம் யாதெனில் அவற்றில் கூரப்பட்டிறுக்கும் சரக்கு வகைகள் பலவும் சுத்தி செய்யப்படவேண்டியவை. அவற்றின் விபரீதங்களை கணக்கிட்டு கூறமுடியாது.

அத்துடன் அவற்றை விரிவாக எழுதுவதற்கும் எனது ஓய்வு நேரம் போதுமானதாக இருக்க வேண்டுமல்லவா. இயன்ற வரையில் சிறு குறிப்புக்களை தறுகின்றேன், உங்களது தனித்துவமான தேவைகளை நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.


பலரும் நினைப்பது ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் ஒன்றே என்று அதற்கு காரணம் இருவரிடமும் மூலிகைகள் இருப்பதனாள் ஆனால் இவை இரண்டும் தனித்துவமானவை.

அடியேன் தொண்டாக செய்துவருவது சித்த வயித்தியமாகும்.

எனது முன்னோர்கள் இரண்டிலும் தேர்ச்சி உள்ளவர்கள். அவர்களின் வாகடத்தொகுதி இரண்டையும் உள்ளடக்கி கானப்படுகிறது. ஆனால் எனக்கு சித்தர் முறையில் தான் நாட்டம் அதிகம்.

மூலிகைகளை மட்டுமின்றி பாஷணங்கள் உப்புவகை என எனது ஆய்வு தொடர்கிறது. இரசமணி இரசவாதம் என பல பிரிவுகளைக்கொண்ட இந்த சித்த வைத்தியத்தை அலவிட முடியாது.

நன்றி



1 comment: