Thursday, October 17, 2013

மந்திர சித்தி தொடர்பான விளக்கம் மீண்டும்.

வணக்கம் தோழர்.

----   சித்தி மந்திரம்
ஓம் அய்யும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் அய்யும் நம சக்தி நடன சக்தி வீர வீரேஸ்வரியே அகோர சங்ஙார தேவி வா வா வாலை பரமேஸ்பரியே நம.

கிரிகை
வெத்திலையால் தண்ணீர் ஓதி குடித்தபின் மந்திரப்பிரயோகம் செய்யவும்
உரு முதல் தடவை 108 ம், பின்னர் 21 முரையும் செய்ய நன்று.-----


இப்பதிவின் விளக்கம் சரியாக புரியவில்லை என்று கேட்கும் நபர்களுக்காக மேலதிக விளக்கம்.

மந்திர தந்திர பதிவுகளை எதிர்பாக்கும் நண்பர்கள் உங்களுடை அனுபங்களை இங்கு விளக்கமாக கூறினால்தான் எனது பதிவுகளை சரியான முறையில் எழுதமுடியும்.

இருப்பினும் பொதுவாகவே விடயங்களை இங்கு பதிவிடுகிறேன்.

மந்திர சித்தி என்பது நீங்கள் யாதேனும் ஓர் மந்திர பிரயோகம் செய்யமுன் உங்க‌ளுடைய‌ சக்தியையும் நீங்கள் வாலாயம் செய்த தெய்வத்தின் சக்தியையும் அதிகரித்து மந்திரப்பிரயோகம் செய்யும் போது தடைகள் வாராமல் காத்து அப்படி தடை ஏற்படின் அவற்றை நீக்கி சித்தியடைய செய்யவே இந்த முறை பயன்படுகிறது.

பொதுவாக தண்ணீர் ஓதும் போது சலம் அரட்டல், பிரணவம், சித்தி என அனைத்து விடயங்களும் முறையாக செய்ய வேண்டும். சுத்த நீரில் பன்னீர் விபூதி சந்தனம் மஞ்சல் குங்குமம் என பூசைப்பொருட்கள் சேர்கவேண்டும்.

அட்ஷரங்கள் ஏதும் இருப்பின் அதை தண்ணீரில் குச்சியால் கீரி பின்னர் உரிய மந்திரத்தை உருவேற்ற வேண்டும். வேப்பம் இலையால்  உருச்செய்வது பொதுவாகவும் அதை விட்டு குறிப்பிட்ட பிரயோகம் இருப்பின் அதை பயன்படுத்தவும். உதாரணமாக பூக்களால் அல்லது வெத்திலையால் அல்லது தர்ப்பைபுல் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.

இவ்வாரு முறைப்படி செய்யின் பலன் கிட்டும்.

சந்தேகம் இருப்பின் தயங்காமல் எழுதவும்.


நன்றி.

4 comments:

  1. interesting information. Thanks for sharing.

    ReplyDelete
  2. ஐயா,
    உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. வெத்திலை தண்ணீர் ஓதி என்பது தண்ணீர் ஓதுதல் மந்திரம் எது ???????


    சிரமபடுத்தியதிற்கு மன்னிக்கவும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      சித்தி மந்திரம். பதிவை கவனமாக படியுங்கள்.

      நன்றி

      Delete
    2. ஐயா,

      மேற்கூறிய சித்தி மந்திரம் ஓதி(சொல்லி) தண்ணீர் குடித்தப்பின் தேவைபடும் மந்திரதை சொல்ல வேண்டும்..

      சரியான புரிந்துனர்வா??????????

      நன்றி

      Delete