Tuesday, October 8, 2013

அஷ்டகர்ம பிரயோகமும் நன்மை தீமைகளும்

வணக்கம் தோழர்களே,

அஷ்டகர்ம பிரயோகம் பன்னும் போது அதில் நல்லது கெட்டது என்று தனித்தனியே பிரிக்க இயலாது. ஒருவருக்கு நன்மை பயக்கும் விடயம் மற்றவருக்கு தீமையை உண்டாக்களாம் அல்லவா, ஆகயால் இது சரி, அது சரி என்ற விவாதத்தையும் என்னத்தையும் நீக்கி பொதுவான முடிவுகளைதான் எடுக்க வேண்டும்.

இது எனது கருத்து.

இருப்பினும் மாந்திரீக பிரயோகங்கள் எதுவாகினும் அது அஷ்டகர்மத்துக்குள் வந்து விடும். உதாரணமாக வாலாயம் செய்தல் ஆக்ருஷணம் அதாவது அழைத்தல் எனப்படும், மிருகங்களை கட்டுதல் தம்பனம் ஆகும், நோய்களை அகற்றுதல் வித்துவேஷணம் ஆக நீங்கள் ஏதயினும் ஓர் மந்திரத்தை பிரயோகிக்கும் போது அது யாதேனும் ஓர் அஷ்டகர்மத்திள் அடங்கிவிடும்.

இப்போது உங்களது கேள்விக்கு வருவோம், அஷ்டகர்மத்தின் விளைவு உங்களை அணுகாமல் காத்துக் கொள்ள என்ன வழி.

நியூட்டனின் 3வது விதி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிரானதும் அதற்கு பதிலானதுமான  மருதாக்கம் உண்டு. 


இது மாந்திரீகத்துக்கும் பொருந்தும். 

ஒரு காரியத்தில் இருந்து உங்களை நீங்கள் காத்துக்கொண்டாலும் மற்ற ஓர் கர்மம் உங்களை தாக்கும் அது எதுவாகவும் இருக்கும்.

உதாரணமாக சித்தர்களின் காய கற்பம். இதை உண்டால் நீண்ட காலம் வாழ முடியும் ஆனால் குடும்பம் குழந்தைகள் எதுவும் இல்லை, சுருக்கமாகச் சொன்னாள் பெண்ணாசை தவிர்.  

இந்த உலகம் அகார உகார மாகாரங்களின் சேர்க்கை அதில் இரண்டு விடயம் எப்போதும் சேர்ந்தேதான் இருக்கும். நல்லது - கெட்டது, இன்பம் - துன்பம், இறப்பு - பிறப்பு இப்படி பல விடயம். தனியாக இருப்பது மாயை அதுதான் மகாரம் அதாவது இந்த இரண்டையும் சேர்ப்பது.

அ + உ + ம் = ஓம்

இங்கு இந்த (ம்) மகாரம் இல்லையேல் சிவன் சக்தி என்பது கூட இல்லை.

இதன் அடிப்படையில் தான் பகவத் கீதையிலும் பின்வருமாறு  கண்ணன் உபதேசித்ததாக “ கடமையை செய் பலனை எதிர் பாராதே” என்று பெரியோர் எழுதினர்.

ஆகவே அஷ்டகர்மத்தின் ஆரம்பமும் முடிவும் உங்கள் கைகளில்.

இதை விடவும் விளக்கமாக எழுத எனக்கு தெரியாது.

 













திருந்திய கொன்றை தும்பை திங்கலோடரவு தானும்
பொருந்தவே தலையில் வைத்த புனிதனே நின்பொற் பாதம்
பரிந்து நான் செய்த தோஷம் பலவினைகள் தொலைவதெப்போ
அருள்தரும் உமையாள் பங்கா அரகர நமசிவாயம்.

அன்பே சிவம்.


நன்றி



3 comments:

  1. ஆமையான விளக்கம், நன்றி.... எவ்விளைவுக்கும் மறுதாக்கம் இன்றி அவ விளைவு சமப்படாது, நான் அறிந்தவற்றின் படி, கர்ம வினை என்பது ஒன்று மட்டுமே, அதில் நல்லது அல்லது கெட்டது இல்லை.

    யாருக்காவது நன்மை செய்ய வேண்டின், அது இன்னொருவருக்கு அல்லது ஒரு உயிருக்கு/பொருளுக்கு தீமையாகவே முடியும், அகவே நன்மை தீமை என்று இதை கருதுவதில் அர்த்தமில்லை. இதனால் தான் என்னவோ ஞானிகள் இப் உலக வாழ்கையை விட்டு நன்மையும், தீமையும் செய்யாமல் இருந்திருக்கலாம். இந்த விசித்திரமான பாடலைப் பாருங்கள், குதம்பை சித்தரினுடயது...

    "மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞானிக்கு
    கற்பங்கள் ஏதுக்கடி -குதம்பாய்"

    எப்படி ஒன்றும் இல்லாத ஒன்று சிவன் என்று ஆகியதோ, அது தனக்குள் மாயை தோன்ற இடமளித்தது, இதை அருமையாக "you cannot fill the cup, which is already full" என்று zen தத்துவத்தில் கூறுவார்கள்.

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி.

      ஞானிகளுகும் சித்தர்களுக்கும் இடையில் உள்ள வேருபாடு பற்றி ஓர் கட்டுரை விரைவில் தருகிறேன்.

      நன்றி

      Delete
  2. ஐயா.
    உங்கள் விளக்கதிற்கும் பாடலுக்கும் மிக்க நன்றி. பாடலோடு உரைநடையுடன் விளக்கினால் பலரும் பயன் பெறுவர்.
    உங்கள் நோக்கமும் வெற்றியடையும். (பாடலின் பொருள் சரியான புரிதலுக்காக)


    நன்றி

    ReplyDelete