வணக்கம் தோழர்களே,
ஆதி வயிரவர் பூசை முறை இரு வகைப்படும்.
வீட்டு வழிபாடு
ஆலய வழிபாடு
இங்கு நான் குறிப்பிட்டுள்ளது ஆதி வயிரவர் வீட்டு பூசை.
ஆதி வயிரவரை வீடுகலிள் காவலாக வைத்திருக்கும் மக்கள் ஆண்டு ஒரு முறை அதற்கான பூசையை பூசாரியை அழைத்து செய்வார்கள், ஆனால் பூசாரி என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அவர் கேட்கும் அனைத்து பூசை பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் அத்துடன் சாராயம் கல்லு கஞ்சா ரொட்டி என பல தேவையற்ற பொருட்களை படைத்து வழிபடுவார்கள். அதிலும் சிலர் கோழிகளை பெலி கோடுப்பர். இது முற்றிலும் தேவையற்ற செயலாகும்.
வயிரவர் கலை சிவனின் அவதார கலைகலிள் ஒன்றாகும். அதாவது 108 வயிரவர் கலைகலிள் 8 கலை பிரதானமாக கூறப்பட்டுள்ளது.
இங்கு நாம் பார்பது இந்த 8 வகை கலையும் சேர்த்து வீட்டில் பூசை செய்யும் முறையாகும்.
வயிரவருக்காக உங்கள் வீட்டில் வைக்கபட்டுள்ள இடத்தில் பசுச்சானம் கொண்டு மெழுகி சுத்தம் பன்னி பின்னர் அதன் மேல் புதிய வென்மையான வஸ்திரம் விரிக்கவும்.
1, இடது புறத்தில் மாகா லட்சுமியை நினைத்து விளக்கு ஏற்றவும், ஊது பத்தி சாம்பிரானி தூபம் போடவும். ஒரு சிரிய மடை வைக்கவும்.
2, தேவையான அளவு புதிய நெல் எடுத்து சீலையின் மேல் பரவவும்.
3, முதலில் வலது புறத்தில் வினாயகரை வணங்கி அட்ஷரம் கீரி அதன் மேல் மடை ஒன்று வைக்கவும், தேங்காய் உடைத்து வைக்கவும்.
வினாயகர் அட்ஷரம்
முக்கோணம் கீரி நடுவில் ஓங்காரம் வலைக்கவும்.
வெத்திலை பாக்கு பழம் 5 வீத கணக்கில் வைக்கவும்.
வினாயகர் மந்திரம்
ஓம் றாங் றீங் கங் கணபதியே நம.
4, வினாயகர் மடைக்கு தீபம் காட்டி வழிபடவும்.
5, இப்போது வயிரவருக்கு நடுவில் கும்பமும் சுற்றி 7 மடைகளும் வைக்க கூடியவாரு இந்த அட்ஷரத்தை கீரவும்.
6, நடுவில் உள்ள ரீங்காரத்தில் பூரண கும்பம் ஒன்று தாயார் செய்து வைக்கவும். அதற்கு ஓர் சிறப்பான பெரிய மடை வைக்கவும் அத்துடன் ஓர் இளநீர் வைக்கவும். தேங்காய் உடைத்து வைக்கவும்.
கும்பம் உரு செய்ய மந்திரம்
ஓம் அரி சிரி வயிரவா வா வா வடுக ஆதி வயிரவா வா வா சிவாகா.
7, அட்ஷரத்தை சுற்றி 7 மடைகள் வைக்கவும். மடையில் கரும்பு அவசியம்.
மடை வக்க மந்திரம்
ஓம் அரி அரி ஸ்ரீயும் கிலியும் ஆதி வயிரவா வா வா ஓம் அரி அரி அட்ட லிங்க வயிரவா வா வா சிவாகா.
8, இப்போது உங்கள் மனதுக்கும் வசதிக்கும் ஏற்றவாறு படையல் வைக்கலாம். ஆனால் சாராயம் கல்லு கஞ்சா ரொட்டி போன்ற தேவையற்ற நீசபொருட்களை வைக்க வேண்டாம்.
எனது விருப்பம்
அவல் கடலை வென்பொங்கள் வடை சில கனி வகைகள்.
9. இப்போது தூப தீபம் காட்டி வழிபடவும். சிவ புராணம் பாடி வழிபட்டால் மிகவும் பலன் தருவார்.
தீபம் காட்ட மந்திரம்
ஓம் பிராண சிவா ஏறு, பிராணாயா ஏறு.
10. அனைத்தும் முடிந்தபின் அன்று இரவு முழுவதும் மடையையோ அல்லது கும்பத்தையோ எடுக்க வேண்டாம். மறுநாள் காலையில் மீண்டும் தீபம் காட்டி பின்னர் கும்பத்தை உங்கள் வீட்டு கிணற்றில் ஊற்றவும். மடைகளை பிரிக்கவும்.
ஆதிவயிரவர் பூசை இனிதே முடிந்தது.
குறிப்பு.
இதை ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் செய்யலாம். தேவார பதிகங்களை பாடுங்கள். அது போதுமானது.
“ நாயிற் கிடையாய் இருந்த அடியேனுக்கு, தாயினும் சிறந்த தயவான தத்துவனே”
நன்றி
ஐயா,
ReplyDeleteஇப்போது உள்ள சூழ் நிலையில் கிணறு என்பது அரிதாகிவிட்டது.
கிணறு இல்லையென்றால் என்ன செய்யலாம்.
அரிய தகவலுக்கு நன்றி
வணக்கம்,
Deleteகவலை வேண்டாம், துளசிமாடம் பயன்ப்டும் அல்லது யாதேனும் ஓர் மரத்தினடியில் ஊற்றவும்.
நன்றி
மதிப்பிற்குரிய ஐய்யா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் யாம் தங்களது தொகுப்பு மனைகளை கண்டு வியந்தேன் தங்களிடம் ஒரு தாஜ்ல்மயான வேண்டுகோள் நான் ஒரு அக்ர சாதகன் பைரவம் அகோரம் எநொடேய முறைகள் அய்யா , என் குருதேவர் ஆகோரேசுவரர் அகோர சிவத்தின் மந்திரங்கள் , பைராவததின் சில ரகசியமான பஞ்சாகஷார இத்ரயக்ஷார மந்திரங்கள் குறிப்பாக சம்ஹார வைரவம் அகோர வைரவம் உக்ரா வைரவம் ரகசியமான மந்திரங்களை தெரிந்து பெற்றுக்கொண்டு வர குறிப்பை அளித்தார் தங்கள் தொகுபின்னை அறிவுமையம் தொகுபாளர் சிறப்பிட்தஹதை கண்டேன் நன்று அவரிடமும் என் உதவி கூவலை விடுத்ாென் அவர்களும் எமக்கு உதவுவதாக கூறினார் தாங்களும் எமக்கு உதவுவீர்களா ??? நான் சாதகநே தவிர வேறுொந்திரும் இல்லை ஐயா மேலும் இதில் ஆதி வைரவரின் மந்திரங்களை தந்துள்ளீர்கள் அதை வீடு மற்றும் கோய்ல் பூஜையில் மட்டும் தான் ஜபம் செய்ய வேண்டுமா அல்லது சாதாரண சமயங்களிலும் ஜாப்பிக்கலாமா ??? மந்திரத்திற்கு நிஷ்க்ாமிய முறையில் ஜபம் செய்துகொண்டு வரலாமா ? உபாசனை மாதிரி ஒரு வாகியில் போல் ??? மேலும் இதில் மாற்றங்களை செய்தும் ஜாப்பிக்கலாமா ??? பலன் உண்டா ? அணியா யாம் மேல் வினவியவற்றுக்கு தங்கள் பதில் தாறுமாறு பணிவண்புதால் கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteநன்றி
ருத்ரா
உதாரநத்திக்கு
ReplyDeleteஓம் அரி சிரி வயிரவா வா வா வடுக ஆதி வயிரவா வா வா சிவாகா.
என்பதை
ஓம் அரி சிரி வயிரவா வா வா ஆதி வயிரவா வா வா சிவாகா.
இவாறாக ஜாப்பிக்கலாமா ??
மேலும் கீல் கண்ட மந்திரத்தை அவ்வரே ஜாப்பிக்கலாமா? மேலும் மடை வக்க என்றால் என்ன ?
ஓம் அரி அரி ஸ்ரீயும் கிலியும் ஆதி வயிரவா வா வா ஓம் அரி அரி அட்ட லிங்க வயிரவா வா வா சிவாகா.