Sunday, November 3, 2013

தொடர்ச்சியான தும்மல் - சளி ரோகங்களுக்கு

வணக்கம் தோழர்களே,

வாசகர் ஒருவர் தனது உறவினர் ஒருவருக்கு தொடர்ச்சியான தும்மல் இருப்பதகவும் அதற்கு தீர்வும் கேட்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நோய்க்கான பொதுப்பிரயோக மருந்துகளையே இங்கு பதிவிடமுடியும் அதற்கு காரணம் அவரின் சரியானா நோய்க்கான காரணத்தை நாடி நடைகளை வைத்தே கண்டரிய முடியும். சில நோய்க்கான பக்க விளைவாகவோ அல்லது ஆரம்ப குண அடையாலமாகவோ எதுவும் இருக்கலாம் அல்லவா ஆகையால் பொதுவான மருந்துகளை மட்டும் எப்போதும் நம்பி இருக்காமல் தகுந்த மருத்துவரை பரிசீலிப்பது சிறந்தது.


நீர்க்கோவை
ஜலதோஷம்
பீனிசம்
தும்மல்

போன்ற சகல சளி ரோகங்களுக்குமான ஓர் சிறந்த குடிணீரக இது இருக்கிறது.

மருந்து

வட்டு வேர்  20 கிராம்
சீந்தல் வேர் பட்டை 20 கிராம்
இஞ்சி 20 கிராம்
பனங்கற்கண்டு 20 கிராம்
சந்தன மர தூள் 5 கிராம்

முறை

இவை எடுத்து எட்டொன்றாய் காய்ச்சி ஐந்து நாள் தினமும் காலையில் குடிக்கவும். 

குறிப்பு
 
தினமும் இது புதிதாக செய்து குடிக்கவேண்டும். 

நன்றி.

 

3 comments:

  1. எட்டொன்றாய்.... 8 பங்கை 1 பங்காக காய்ச வேண்டுமா ?

    ReplyDelete