வணக்கம் தோழர்களே,
நீங்கள் மின்னஞ்சல் மூலம் கேட்கும் அனைத்து வகையான மந்திர விடயங்களையும் பதிவிடமுடியாது, அத்துடன் பெண் வசியம் சூனியம் போன்ற விடயங்களை கேட்கவும் வேண்டாம்.
சில புல்லுறுவிகள் எமது தளத்தில் கருத்து வெளியிடுவதற்கு பதிலாக அவர்கள் கேட்ட விடயங்கள் கிடைக்கவில்லை என்ற கோபத்தால் பலவிதமான தவரான மற்றும் சகிக்க முடியாத கருத்துக்களை பதிவிடுகின்றனர். இதன் காரணமாக இன்று முதல் கருத்துக்கள் அனைத்தும் எனது மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே வரும் என்பதுடன் அது தேவையான கருத்தாக இருந்தால் அது வெளியிடப்படும்.
நீங்கள் உண்மையான கருத்துக்களை பதிவிடுவதாக இருந்தாள் உங்களது உரிய உண்மையான அடையாளத்துடன் பதிவுகளை அனுப்புங்கள், எதற்காக மறைந்திருந்து பதிவிடுகிறீர்கள்.
தவறு செய்வது நான் என்றால் உங்களுக்கு ஏன் பயம்.
உண்மையை தேடும் நல்ல நெஞ்சங்களுக்காக ஆரம்பிக்கபட்ட தளம் இது, யார் என்ன கூறினாலும் இது தொடர்ந்து செல்லும் என்பதை மறக்க வேண்டாம்.
விரைவில் தனியான தளத்தில் சந்திப்பேன்.
நன்றி.
No comments:
Post a Comment