Wednesday, November 20, 2013

அமுரி - ஓர் ஆய்வு

வணக்கம் தோழர்களே.

தொடர்ச்சியாக மந்திரம் தொடர்பான பதிவுகளை மட்டும் பதிவிட்டும் சில மருந்துகளை பற்றியும் பதிவிட்டு வந்த அடியேன் சில பரிபாசை பற்றி எனது கருத்துக்களையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

அதன் ஆரம்பமாக சித்தர் பாதங்களையும் என் குருமாரின் பாதங்களையும் என்னை ஈன்ற தாய் தந்தையின் பாதங்களையும் வணங்கி இன்று சித்தர் பாடல்களை ஆரம்பிக்கின்றேன்.

இது தொடர்பான உங்கள் கருத்துக்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.

அமுரி

இது தொடர்பாக பல கருத்துக்கள் பல தளங்களில் இருந்தாலும் எது சரி என்ற குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. பல ரசவாத ஆய்வாளர்களின் புத்தகங்களை படித்தாலும் அது சரியான திருப்தியை தருவதாக இல்லை.

அமுரி என்றால் நீர் என்பது தெளிவு ஆனால் எந்த நீர் என்பது தான் குழப்பம். பலரும் சிறு நீர் என்ற கருத்தையே ஒத்து இருப்பது சற்று சிந்திக்கவேண்டியதே. இருப்பினும் சித்த மருத்துவத்தை பொருத்தவரை அமுரி என்பது இடத்துக்கு இடம் வேருபட்டே வருகிறது.

சரக்குவகைகள் சுத்தி செய்வதற்கு அமுரி மிக அவசியமானதாக இருக்கிறது ஆகவே சரியான அமுரி என்பது இதுதான் என்று தெரியாவிடில் சுத்தி அசுத்தியாகிவிடுமல்லவா. இந்த பாடலை கவனியுங்கள்.

சித்தர் பாடல்.

தானேதான் அமுரியென்று மூத்திரத்தைவிட்டு
தாட்டிகமாய் சொன்னார்கள் பெரியோர்தாமும்
தானேதான் பொய்பேசு மாண்பர்தம்மை
கட்டியே அழித்தாக்கால் பாவமில்லை
வானேதான் மூத்திரந்தான் சமுத்திரநீராம்
வகையாக பார்த்தாக்கால் தோனும்தோனும்.

இங்கு மிக இலகுவான தலிழில் சித்தர் பாடியிருப்பதை கவனியுங்கள்.  அமுரி என்பது சமுத்திர நீர் என்பது இங்கு தெளிவாக பதிவாகி இருக்கிறது.

பொதுவாக சிந்திப்போமாகில் சிறு நீர் கூட ஓர் வகை உப்பு நீரே என்பது புரியும். ஆகவே அமுரி என்பது உப்பு வகை நீர் என்பது உறுதி.

குறிப்பிட்ட காலம் சில கட்டுப்பாட்டுடன் இருந்து எடுக்கும் சிறு நீர் தான் அமுரி என்பது தவரான கருத்து.

மனித உடலில் இருத்து வரும் கழிவு சிறு நீர் என்பதும் அது அவரவர் குருதி கலங்களுக்கு ஏற்பவும் உடல்னிலைக்கு ஏற்பவும் வேருபடும் என்பதும் உண்மை ஆகயால் பொதுவான ஒன்று மட்டுமே பொதுவியளில் அமுரியாக இருக்க முடியும்.

சித்தர் பாடல்களில் இதனுடைய அமுரி என்று குறிப்பிட்டு இருந்தாள் மட்டுமே அந்த குறிப்பிட்ட அமுரியை எடுக்க வேண்டும், அல்லாத போது எதை பயன்படுத்த வேண்டும் என்பது குழப்பமே.

சித்தர் பாடல் 

.........................
..............................
செவ்வாழைக் கன்றமுரி தன்னிலேதான்
சீராக வூறினபின்.......
..........

இங்கு குறிபிடப்படும் அமுரி செவ்வாழை கன்றின் கிழங்கை வெட்டி துவைத்து எடுக்கும் தண்ணீர் என்று அர்த்தம். இதுவும் உப்பு சுவை உடையதே.

ஆகவே சரியான அமுரி என்பது ஏதோ ஓர் உப்பு என்பது தெளிவு, அது சமுத்திர நீர் என்பது எனது கருத்து.

கவனிப்பு

கடல் நீர் வேரு சமுத்திர நீர் வேரு என்பது ஞாபகம் இருக்கட்டும். உங்கள் கடற்கரையில் எடுக்கும் நீர் அமுரியாகாது ஆனால் அதுவும் உப்பே. சமுத்திர நீர் என்பது சமுத்திரத்தில் எடுக்கும் நீர்.

நன்றி.





1 comment:

  1. முப்பை முடித்தவர் அரிவார்

    ReplyDelete