Tuesday, November 19, 2013

அலகு பாய்ச்ச - மந்திரம்

வணக்கம் தோழர்களே,

பதிவுகள் சற்று தாமதமாவதற்கு மன்னிக்க வேண்டும், வேலை பளு காரணமாக வெளியூர் செல்ல வேண்டி ஏற்படுகின்ற காரணத்தால் பதிவுகள் வர தாமதமாகிறது, இருப்பினும் நேரம் கிடைக்கும் போது பதிவிடுவேன்.

இன்று நாம் படிப்பது, கோயில்களில் நேத்தி வைத்தவர்கள் தங்களது உடலில் அலகு அல்லது காவடி எடுப்பது என்று வைத்த கடன்களை செய்ய உதவுவது பற்றி.

காவடி எடுப்பது அல்லது உடல், நாக்கு, வாய் போன்ற இடங்களில் அலகு பாய்ச்சுவதாக அவரவர் குலதெய்வங்களிடம் நேர்த்தி கடன் செய்திருப்பர் அப்படியானவர்களுக்கு உடலில் அலகு பாய்ச்சும் முறையே இது.


மந்திரம் - அலகு எடுக்க

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வா வா சிவாகா.

அலகு பாய்ச்ச

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் வாக்கு வாகினி வால பரமேஸ்வரி வா வா வந்து இவர் நாவில் குடிகொள்ளம்மா நில்லம்மா நில்லு ஓம் சக்தி சிவ சக்தி வாங்கு ஸ்ரீயும் மிறீயும் வாங்கு சுவகா

அலகு பிடுங்கி விபூதி போட

ஓம் ஆம் அகோர பரமேஸ்வரி தம்பனகாளி வா வா வருத்தப்படாமல் இவர் நாவில் தம்பே தம்பே சுவாகா.

கிரிகை

அலகு என்பது இங்கு உலோகத்தால் செய்த வேல் அல்லது சூலம் எதுவாகவும் இருக்கலாம், அத்துடன் காவடி எடுக்கும் போது பாய்ச்சும் முள்ளுக்கும் இது பொருந்தும்.  

தெய்வத்தின் திருப்பாதங்களில் அலகு வைத்து பூசை செய்து அதை பின்னர் இந்த மந்திரங்களை கொண்டு செய்யின் உடலில் எந்த தாக்கமும் காட்டாது.

நன்றி.




1 comment:

  1. எங்கு சென்றாலும் எதிர்ப்பு,யாம் என்ன செய்ய சுவாமி.மலேசியா வாசகர்.

    ReplyDelete