வணக்கம் தோழர்களே,
மூலிகைகளை இனங்கானுதல் என்பது மிகவும் கடினமான ஒன்றே, காரணம் அவற்றின் பெயர் இடத்துக்கு இடம், மக்களுக்கு மக்கள், வாகடத்துக்கு வாகடம், மொழிக்கு மொழி, குருமாருக்கு குரு, ஆயுர் சித்தம் என வேருபட்டே இருக்கிறது.
இதன் விளைவாக பல அரிய வகை மூலிகைகள் இன்றும் வைத்தியர்களுக்கிடையில் வேருபட்டே இருக்கிறது. இதற்கு காரணம் பரிபாசையே ஆகும், சித்தர்கள் பரிபாஷையாக பெரு மருந்துகளை மறைத்தனர் காரணம் அதன் தன்மை புரியாதவர்கள் செய்தால் மருந்து விஷமாகிவிடும் என்பதற்கா, ஆனால் நம் முன்னோர் மூலிகைகளை மறைத்தார்கள் காரணம் அனைவருக்கும் தெரிந்தால் மருத்துவம் பலியாது போகும் என்று.
இப்படி பல காரணங்களால் மறைக்கப்பட்ட மூலிகைகளை இனங்கண்டு சரியானது இது தான் என்று பதிவிடுவது மிகவும் கடினம். சித்தர்களின் குணபாட வாகடங்களை வைத்தே அடியேன் பல மூலிகைகளை இனங்கான தொடங்கி தற்போதைக்கு சுமார் 1100 மூலிகைக்கு மேல் ஆய்வு செய்யும் பாக்கியம் கிடைத்தது.
நான் ஆய்வு ஆரம்பித்த காலத்தில் இவற்றை பதிவாக்க வேண்டும் என்ற நினைவு இருக்காததால் அவற்றை சேமிக்க வேண்டும் என்ற தேவை இருக்க வில்லை, ஆனால் எனது நண்பர்கள் இதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வேண்டுதல் விடுத்த பின்னரே இத் தளத்தை ஆரம்பித்து பதிவிட்டு வருகிறேன்.
எனது ஆய்வுகளில் நான் பட்ட பாடு எனக்கும் இறைவனுக்கும் தான் தெரியும், பல சித்த வைத்தியரிடம் இருந்து பெற்ற அரிவு ஒரு பக்கம் இருக்க அவர்களிடம் இருந்து உண்மையை கண்டரிவது மிகவும் கடினம். அதிலும் ஒருவருக்கு ஒருவர் மூலிககள் வேருபட்டே இருக்கிறது. ஆயுர் வேதத்தில் ஒரு பெயர் சித்தாவில் ஒரு பெயர் என பல குழப்பங்களுக்கு பின்னரே சரியான மூலிகையை பெற முடிகிறது.
பரிபாசை அகராதியும் பச்சிலை அகராதியும் மலை வாகடமும் இல்லாவிட்டால் மூலிகையை இனங்காம்பது மிகவும் கடினம்.
அப்படி தேடி எடுத்து வந்தால் குரு சொல்வார் அது இது இல்லை என்று. இப்படி பாடு பட்டு பெற்ற அரிவை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்சியாகவே இருக்கிறது.
சித்த வைத்தியமும் சரி மாந்திரீகமும் சரி முறையான அரிவு இல்லாவிட்டால் அது பெரிய ஆபத்தை தான் பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை.
வாசகர்கள் குறிப்பு
இங்கு நான் பதிவிட்டிருக்கும் மருந்துகளையோ மந்திர முறைமையோ செய்ய முட்படும் முன்னர் சரியான மூலிகைதான் இதுவா என ஆய்வு செய்த பின்னரே முயற்சிக்க வேண்டும்.
நன்றி.
ஐயா,
ReplyDeleteஉங்கள் தேடல் வெற்றியடையவும்,சேவை சிறக்கவும் நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களுக்கு நிறைய அருளும் ஆசியும் அளிக்க வேண்டுகிறேன்...
நன்றி
ஐயா,
ReplyDeleteவெள்ளை விஷ்ணுகிராந்தி வசியத்திற்கு பயன்படும் என்று சொன்னீர்கள். அந்த வசிய முறையை விளக்கினால் சிறப்பாகவும், பயனுள்ளதாக இருக்கும்
நன்றி