வணக்கம் தோழர்களே,
திக்கு வாய் என்பது ஓர் நோய் அல்ல மாறாக இது ஓர் உடல் குறைபாடு. இருப்பினும் இது பரம்பரை முறையாகவே அதிகமாக வருகிறது. இதற்கு என்று சரியான ஓர் முறை இல்லை இருப்பினும் சில மூலிகைகள் இதனை தீர்த்து பலன் தந்த அனுபவம் உண்டு. ஆனால் அனைவரும் பலன் பெறவில்லை அதற்கான காரணம் எனக்கு சரியாக தெரியாது. ஒரு வேலை அவர்கள் அதை சரியாக செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா.
நம்பிக்கை இல்லாத எந்த விடயமும் வெற்றி தராது என்பது எனது கருத்து. விருப்பம் இருப்பின் இந்த முறைகளை முறையாக செய்து பாருங்கள்.
மருந்து.
நாவில் ஏற்படும் அனேக ரோகங்களுக்கு வசம்பு ஓர் சரியான மருந்து. பேசமுடியாது பறவைகளே பேசுகிறது தானே. நீங்கள் ஏன் பேச முடியாது.
வசம்பு வெந்தாமரை பூ இது இரண்டையும் சூரணம் செய்து தினம் இரு வேலை நாவில் தடவியும் திரிகடி பிரமானம் தேனுடன் கலந்து சாப்பிட்டு பாருங்கள்.
நாவிற்கு அதிபதி கலைவாணி குடியிருக்கும் வென் தாமரையும் உங்களுக்கு உதவி செய்யும்.
நன்றி.
No comments:
Post a Comment