வணக்கம் தோழர்களே,
காவல் மந்திர வரிசையில் இதுவும் ஓர் இரகசிய முறையே. எப்பேர்பட்ட மருந்தீடு செய்யப்பட்டாலும் அல்லது உணவு முறை மூலம் சூனியம் செய்யப்பட்டாலும் இந்த மந்திரத்தை சித்தி செய்து வைத்திருந்தால் கவலை இல்லை.
மந்திரம்
ஓம் அவ்வும் சவ்வும் சிவ பரம சிவயோகிக்கு ஸ்ரீகண்ட பரமேஸ்வரர் திருவிலம் பற்றி கொடுத்த வசிகர உச்சாடன வச்சிர பஞ்சாட்சர கவசம் இவர் / என் வாய் சர் வாங்கிசமாகவே சிவாகா.
கிரிகை
முறைப்படி சித்தி செய்து பின்னர் தண்ணீர் ஓதும் முறைப்படி ஓதிக் கொடுக்க மருந்தீடுகள் முறியும் அத்துடன் வயிற்றில் இருக்கும் கட்டிகள் நீங்கும்.
மந்திரங்களை சித்தி செய்வது என்றால், குறிப்பிட்ட மந்திரத்தை தனிமையான ஓர் சுத்தமான இடத்தில் இருந்து ஓர் வெற்றிலையை வலது கையில் வைத்து மந்திரத்தை 108 முதல் 1008 வரை உரு செய்து குறிப்பிட்ட மந்திரம் மனதில் உருதியாக பதிந்த்ததை உணர்ந்த பின் அந்த வெற்றிலையை மென்று தின்ன வேண்டியது தான் பின் சற்று குளிர்ந்த நீர் அருந்தலாம்.
இப்படி செய்வதனால் குறிப்பிட்ட மந்திரம் நமது முதுகெழும்பில் பதியப்பட்டு குண்டலினி சக்தியாக இருக்கும், தேவைப்படும் போது சுழிமுனையில் இருந்து உருச்செய்ய சித்தி கிடைக்கும்.
மந்திரங்களை கற்பவர்கள் சரியான குருவுடன் உபதேசங்களை பெற்று அவர் ஆலோசனையின் கீழ் செயல்பட்டால் தான் பலன் சரியானதாக இருக்கும். அதன் காரணத்தால் தான் இங்கு குறிப்பிட்ட சில மந்திரங்களை மட்டும் பதிவிடுகிறேன்.
இங்கு இருக்கும் மந்திரங்களை உபயோகம் செய்பவர்கள் சிவனை குருவாக மனதில் நினைத்து செயல் பட வேண்டும்.
நன்றி.
ஐயா,
ReplyDeleteதகுந்த விளக்கத்துடன் விளக்கியதற்கு மிகுந்த நன்றி.........................
இதற்கும் சித்தி மற்றும் பிரணவ மந்திரங்கள் சொல்லி தானே சித்தி செய்ய வேண்டும் ???
நன்றி
வணக்கம் தம்பி,
Deleteஆம்.
நன்றி