வணக்கம் தோழர்களே,
பல நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் கேட்ட விடயம் இது. ஆனால் பலரும் எதிர்பாக்கும் விடயமும் இது. ஆண் பெண் என இருவரும் பாதிப்படையும் விடயமும் இது.
”இளமையில் கல்” என்றது மாறி ”இளமையில் கை” என்று ஆகிவிட்டது உலகம் இன்று.
பருவம் வந்ததும் சுரப்பிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியாத அனைவரும் இதில் அடங்கும். ஆண் பெண் என்ற வேறுபாடு இதற்கு கிடையாது, ஆனால் ஆண்கள் தங்களையே குறையாக நினைப்பது தான் கொடுமை. பெண்களுக்கும் இந்த பழக்கம் இருக்கிறது என்பது தான் உண்மை. அது சரி எதைப்பற்றி கூறிக்கொண்டு செல்கிறார் இவர் என்று சிலர் நினைப்பது எனக்கு கேட்கிறது அது “சுய இன்பம்” கான்பவர்களை பற்றித்தான்.
திருமணமான பின்னரே சுய இன்பம் கண்டதன் விளைவு என்ன வென்று ஆண்களுக்கு தெரியும் ஆனால் பெண்களுக்கு அது தெரியாது அதனால் தான் பெண்கள் அதை பற்றி கூருவதில்லை.
சற்று விளக்கமாக பார்த்தால் புரியும். சுய இன்பம் செய்து பழக்கமான பெண்கள் திருமணமான பின்னர் அவர்களின் சுரப்பிகளின் மூலம் இன்பம் கான்பது சற்று தாமதமாகவே இருக்கும். அதற்கு காரணமாவது அவர்களின் நினைவாற்றலாகவே இருக்கும். தாம்பத்தியம் என்பது இரு மனமும் உடலும் ஒன்றாக கலப்பது அல்லவா, அப்படி இருக்க முதலில் வேறு விதமான நினைவில் சுய இன்பம் அடைந்த ஒருவர் அதே நினைவு வருமாயின் விரைவில் இன்பத்தை அடைந்துவிடிகிறார், அதுவே செயல் வேறுபடின் சற்று தாமதமாகே இன்பம் கிடைக்கும். இது ஆண்கள் தங்களது சிறுவயது தவறுகளை மறைப்பதற்காக முற்பட்டு ஏமாந்து போகின்றனர். பெண்களோ இதை காட்டிக்கொள்வதே இல்லை.
நமது நினைவாற்றலை மாற்றி அமைத்தால் அதுவே தாம்பத்திய வெற்றியை தரும் என்பதில் ஐயம் இல்லை. இருப்பினும் சுய இன்பதின் விளைவாக சுரப்பிகள் தங்களது செயல் திறனை மாற்றியிருந்தால் அது கடினமானதாகவே இருக்கும். பெண்களுக்கும் இது பொருந்த்தும். அப்படி ஆண் பெண் இருவரும் குறிப்பிட்ட மருந்துகளை சரியாக பயன்படுத்தினால் தவிர வெற்றி கிடைப்பது கடினமே.
ஆணும் சரி பெண்ணும் சரி சரியான நேரத்தில் இன்பம் அடையாவிட்டால் அது தாம்பத்திய இன்பம் என்று கூற இயலாது. பெண் சீக்கரத்தில் இன்பம் அடைந்துவிட்டால் ஆண் தொடர்ந்து தனது இன்பத்தை அடைய முயற்சித்தாலும் இல்லை என்றால் பெண் முயன்றாலும் அது கசப்பாகவே இருக்கும். ஆகவே இருவரின் இயல்பும் சரியானதாக இருந்தால் அது மிகவும் வெற்றியான வாழ்வைத்தரும்.
தாம்பத்திய வாழ்கை சரியாக இருக்க இருவரும் மனம் திறந்து பேசிப்பழகவேண்டும் முதலில், இது எனக்கு பிடித்திருக்கிறது அது உனக்கு இஷ்டமா போன்று இருவரும் நன்றாக புரிந்து செயல்பட்டால் வாயாக்ராவோ அல்லது சித்த மருந்துகளோ தேவப்படாது என்பதில் ஐயம் இல்லை.
இயற்கையாகவே குறை இருப்பவருக்கு கண்டிப்பாக மருந்துகள் மூலமே குணப்படுத்த வேண்டும். அதை தவிர்த்து உங்கள் ஆண்மைபலத்தை மனைவியிடம் காட்டி பரிசு பெர நினைக்க வேண்டாம். இது போட்டி அல்ல, வாழ்கை என்று நினைத்து செயற்படுங்கள்.
சித்த மருத்துவத்தில் இதற்கு சரியான மருந்துகள் இருக்கின்றன அவற்றை நோயின் தன்மையை வைத்தே சாப்பிட வேண்டும், அதை விடுத்து பல வலைதளத்திலும் இருக்கிறது மாதிரி செய்து பின்னர் ஏற்படும் பக்க விளைவிற்கு காரணமாகவேண்டாம்.
சித்த மருத்துவத்தில் பக்க விளைவா? இது என்ன புதுக்கதை என்று கேட்கும் வாசகர்களே,
பக்க விளைவு ஒன்று இல்லாத செயற்பாடு இது வரையிலும் இல்லை. அது சித்த மருந்துக்கும் பொதுவானது தான் இதை ஓர் தனி பதிவாகவே தருகிறேன். தற்போது விடயத்துக்கு வருவோம்.
வீரிய விருத்தி என்று ஓர் தனி வாகடத்தொகுதியே இதற்காக எனது முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர் அதில் சித்தர் முறையில் செய்யும் மருந்துகளும் எனது முன்னோர் ஆய்வு செய்து கண்டரிந்த மருந்துகளும் என ஏராளமாகவே இருக்கிறது. அதிலிருந்து சில பொதுப்பிரயோக துணுக்குகளை வரும் பதிவுகளில் தருகிறான் செய்து பாருங்கள்.
கருத்துக்களை தயக்கமின்றி வெளியிடவும்.
நன்றி.
இது குறித்த விளைவுகள் தொடர்பான விழிப்புணர்ச்சியும் சில பொதுவான அதிகம் உண்டாலும் பின் விளைவில்லாத சில மருந்துகளை மட்டும் விளக்கினால் போதுமானது என்று நினைக்கிறேன். ஏனென்றால் முறையற்ற சிற்றின்ப முயற்சிகளுக்கு இந்த மருந்துகள் காரணமாகிவிடக் கூடாது. இன்று சமூகத்தில் கற்பழிப்புகள் அதிகமானதற்கு இது போன்ற மருந்துகளின் விற்பனை விளம்பரங்களும், உபயோகமுமே காரணமாக இருக்கலாம் என்பது எனது கருத்து.
ReplyDeleteவணக்கம்,
Deleteநீங்கள் கூறுவது தான் எனது கருத்தும். அப்படியே செய்யலாம்.
நன்றி
வசந்த் -- பல அன்பர்கள் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் இதற்கு சரியான தீர்வையும்- மருந்துகளையும் தெரிவித்தால் மிகவும் பயனாக இருக்கும்.
ReplyDeleteஐயா,
ReplyDeleteகணிப்பொரி துறையில் உள்ளவர்கள் மனஇறுக்கம். மன அழுத்தம், இரவு பணி, போன்ற காரணங்களால் ஜீரண கோளாறு எற்பட்டு நாளடைவில் ஆண்மை குறைவு மற்றும் உடல் எடை பெருத்தும் அவதிபடுகிறார்கள் அதற்கான தீர்வையும் தாருங்கள்.
நூல் கட்டும் முறையை விளக்கவும் எதிர்பார்கிறோம்...
நன்றி
ஐயா, நான் இலங்கையில் வசிப்பவன்.தங்களிடம் காணாமல் போன பொருட்களை கண்டு பிடிக்கும் முறை பற்றி கேட்டிருந்தேன் தங்களால் எனக்கு உதவ முடியாதா
ReplyDeleteவணக்கம் தோழரே,
Deleteஇது தொடர்பான பதிவு முன்னரே உள்ளது, மை பார்த்தல் என்ற தலைப்புக்களை பார்வையிடவும்,
மற்றும் கோபம் வேண்டாம் உங்களது கேள்வி மட்டுமல்ல பல பேரின் கேள்விகள் எனது மின்னஞ்சலில் குவிந்துள்ளது அனைவருக்கும் பதிலிட வேண்டும் அத்துடன் எனது வேலைகளையும் பார்க்கவேண்டும் தானே.
தாமதமான பதில் கிடைத்தால் மன்னிக்கவும்.
நன்றி
ஐயா தாங்கள் கூறியது போல் முன் பதிவுகளை பார்த்தேன் ஆனால் அதில் எனக்கு தேவையான மை பற்றி முழுமையான தகவல் இல்லை தயவு செய்து விரைவாக உதவவும்
ReplyDelete