வணக்கம் தோழர்களே,
சித்தர் இலக்கியத்தில் இருக்கும் ஓர் பெரிய இரகசியம் முப்பூ.
அடியேன் இதுவரையில் முப்பூ தொடர்பாக எந்த ஆய்வும் செய்யவில்லை இருப்பினும் முப்பூ தொடர்பான எனது தெடலின் பலனாக அரிய பல சித்தர் இரகசியங்களில் தெளிவு கிடைத்தது. அதன் அடிப்படையில் சில மருந்துகளை முயற்சி செய்து பார்த்து வெற்றியும் கிட்டியது. இதுவே தற்போதைக்கு போதும் என்ற முடிவில் முப்பூவின் பக்கம் செல்வதை நிறுத்திக்கொண்டேன்.
உண்மையான முப்பூ ஆய்வாலர் யாரேனும் இலங்கையில் இருப்பின் தொடர்பு கொண்டால் முயற்சிக்கலாம் என்று விட்டு விட்டேன்.
இங்கு நான் படித்த பாடல் ஒன்றை தருகிறேன்
சித்தர் பாடல்
எளிதாக முப்பூவின் கருவைக்கேளு
இன்பமாய் கல்லுப்பு முப்புவாகும்
தளிதாகச் சூதமொடு முப்புவாச்சு
தடையற்ற விரும்பதுவு முப்புமாச்சு
நளிதாக விம்மூன்றும் சேர்ந்ததாலே
நலமாக முப்பூவெனப் பேருமாச்சு
கடிதாக வழலையென் றிதற்குப்பேராம்
கண்டபடி சொன்னதிந்த கருத்துதானே.
இந்த பாடல் மூலம் எளிதாக விளக்கியிருக்கிறார் சித்தர்.
முப்பூ பற்றி நான் தேடிய பாடல்களில் எனக்கு மிகவும் உதவியாக இருந்த பாடல் இதுதான்.
கல்லுப்பு, சூதம் (இரசம்), இரும்பு (கருப்பு அல்லது அயம் - பரிபாசை) இந்த மூன்றும் முறையாக சேர்ந்தால் அது முப்பூ எனவும் வழலை எனவும் பெயர் பெரும். இதை எப்படி சேர்ப்பது என்பது தான் இரகசியமாக இருக்கிறது. அடியேனின் மூன்று வருட தேடலின் பலனாக இதை சேர்க்கும் விதமும் சித்தர் ஆசியும் கிடைத்தது.
சரியான நேரம் வரும்போது அதை கண்டிப்பாக பதிவிடுவேன்.
முப்பூ என்பது பஞ்சபூதங்கள் கட்டுப்பட்டு இருக்கும் நிலை ஆகவே பஞ்சபூதங்களை கட்டிவிட்டல் அட்டமாசித்தும் கைகூடும். அதனால் தான் அஷ்டகர்ம பிரயோக மருந்துகளில் முப்பூ முதலிடம் வகிக்கிறது.
பஞ்சபூதங்களை கட்டிவிட்டால் நாம்மால் என்ன எல்லாம் சேய்ய முடியும் என்பதை சிந்தியுங்கள், அதனால் தான் இதை இவ்வளவு இரகசியமாக வைத்திருக்கிறார்கள் சித்தர்கள்.
சத்தியும் சிவமும் சேர்ந்தால் அது பஞ்சபூதங்களையும் கட்டிவிடும். இங்கு கூறப்பட்டிருக்கும் மூன்றின் குணங்களையும் ஆய்வு செய்து பார்தீர்களானல் இது உங்களுக்கு புலப்படும்.
நன்றி
No comments:
Post a Comment