வணக்கம் தோழர்களே,
பகவதி அம்மன் மந்திரம் கோட்ட அன்பர்களுக்கு, நான் அறிந்த சில குறிப்புக்களை பகிர்கிறேன்.
பகவதி என்பது பொதுவாக பெண் தெய்வங்களை அழைக்கும் ஓர் சொல். மந்திர வடிவான வாலை புவணை திரிபுரை என்ற லட்சுமி சரஸ்வதி துர்கை என்ற இந்த மூன்று தெய்வங்களின் மந்திர சக்தியே பகவதி என்பதாகும்.
பகவதி அம்மன் என்று நாம் கூறும் போது அவள் இந்த மூன்று சக்திகளில் ஒன்றாகவோ அல்லது மூன்றுமாகவோ கருதப்படுவாள். அதனால் தான் பெரும்பாலான பெண் தெய்வங்களின் மந்திரங்களின் நடுவே பகவதி என்ற சொல் இனைக்கப்பட்டுள்ளது.
இது தவிர்த்து தனியாக பகவதி எனும் தெய்வத்துக்கு மந்திர பிரயோகம் இருப்பதாக (சித்தர் வழிபாட்டில்) அடியேன் அறியவில்லை. ஆனால் சில மந்திரங்கள் ஆடாத பேய்களை ஆட்டிவிற்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றை இங்கு தருகிறேன்.
மந்திரம்
ஓம் பகவதி ஆம் பகவதி ஆதி பகவதி ஆடாத பேய்களை ஆட்டும் பகவதி ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா
அட்ஷரம்
கிரிகை
நிலத்தில் அட்ஷரம் விபூதியால் எழுதி அதின் மேல் தேவையானவரை நிருத்தி மந்திர உரு செய்ய அவரில் இருக்கும் பேய் ஆடும்.
ஆலயங்களில் பேய்யாடும் போது கட்டுப்பட்டாலும் இந்த முறையில் செய்யலாம்.
குறிப்பு.
மந்திரத்தை அவதானியுங்கள் இதில் மூன்று முறை பகவதி என்று கூறப்பட்டிருக்கும், அது மூன்று சக்திகளின் மந்திர வடிவையே குறிக்கிறது புரியும்.
நன்றி
manthirathai siddhi panna uru ethanai.
ReplyDelete