வணக்கம் தோழர்களே,
அட்ஷரம் அல்லது இயந்திரம் வரையும் முறையை பற்றி பலரும் என்னிடல் கேட்கிறார்கள். அவர்களின் ஐயத்தை நீக்கவே இந்த பதிவு.
முதலில் குருமூலமாக மாந்திரீக முறைகளை கற்க வேண்டும் என்ற நியதி இதனால் தான் ஏற்பட்டது, சில இரகசியங்களை பலரும் அறியும் வகையில் கூறினால் அதன் விளைவு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றே சித்தர்கள் முதல் ஞானிகள் அனைவரும் இந்த கலையை பரிபாஷையாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கிறார்கள்.
அஷ்ட கர்ம பிரயோகங்களில் யாதேனும் ஓர் தேவைக்காக இயந்திரம் ஒன்றை கீர வேண்டி ஏற்படின் அவற்றுக்குறிய முறையை சரியாக பயன்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டல் அதன் பலன் கண்டிப்பாக கிடைக்காது.
சில குறிப்பிட்ட மந்திரப்பிரயோகத்துக்கான இயந்திரங்கள் இன்றும் இரகசியமாகவே இருக்கிறது அது சரியான குருமூலம் அன்பான பன்பான மாணவனுக்கு மட்டும் குருவின் சமாதி காலங்களில் கிடைக்கும்.
பெரும்பாலான இயந்திரங்கள் வரைவதற்கான சரியான முறைகள் குறிப்பிட்ட மந்திரப்பாடலில் விளக்கமாகவே இருக்கும். அப்படி இல்லாவிட்டால் என்ன செய்வது என்பதுதான் கேள்வி அல்லவா.
இயந்திரங்கள் வரைவதற்கான சில பொது விதிமுறைகள் இருக்கிறது அவற்றை பார்க்களாம்.
அட்ஷரம் கீரும் முறை - பொது முறை
1. செம்புத்தகடாக இருக்க வேண்டும்
2. குறைந்த பட்ச்சம் 5” x 5” அங்குலமாக இருக்கவேண்டும்.
3. இருப்பு ஆனியினால் கீர வேண்டும்
4. தகட்டில் காயம் ஏதும் வரக்கூடாது
5. கீரும் போது சிறு தவறு ஏற்பட்டாலும் திருத்தம் செய்யக்கூடாது. மீண்டும் புதிய தகட்டில் கீரவும்.
6. கோடுகள் தெளிவாக இருக்கவேண்டும்
7. எழுத்துக்கள் அல்லது இலக்கங்கள் சற்று அழுத்தமாக இருக்க வேண்டும்.
8. சமச்சீர் சரியாக இருக்க வேண்டும்
9. கோணங்கள் சரியாக இருக்க வேண்டும்
10. வாசல் மற்றும் மூலை நேராக வர வேண்டும்
11. விந்து என்னும் வட்டம் மையத்தில் அமைய வேண்டும்
12. ஓங்காரம் சுற்றும் போது சரியாகா அட்ஷரம் அதனுல் அமையவேண்டும்.
இந்த விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் அட்ஷரங்கள் சரியானா பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
தகடுக்கு பதிலாக மரப்பலகையோ அல்லது வேறு எதுவாயினும் குறிப்பிடப்படலாம் அவற்றை குறிப்பிடப்படும் அளவு மாறாமல் இந்த விதிமுறைக்கு ஏற்ப செய்யின் பலன் கிடைக்கும்.
வேரு சந்தேகம் எதுவாயினும் பதிவில் இருப்பின் தயக்கமின்றி கேட்கவும்.
நன்றி.
ஐயா,
ReplyDeleteயந்திரம் செப்பு ஆணியை பயன்ப்டுத்தலாமா ?? தாயத்து போடும்போது 5*5 தகடை மடித்து வைக்கலாமா ????
வணக்கம் தம்பி,
Deleteதாயத்துக்கு 3*3 உத்தமம், இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது பூசை செய்வதற்கான அளவு.
இரும்பு சிறந்தது, செப்பு உபயோகிகலாம்.
நன்றி