வணக்கம் தோழரே,
வென் குன்றி மூலிகையின் படங்களை பதிவிட கேட்ட அன்பர்களுக்காக இந்த பதிவு.
குன்றி மணியில் பல வர்ணங்கள் இருக்கிறதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன் அதன் விளைவாக முன்னொருகாலத்தில் எடுத்த முயற்சியின் பலனாக
சிகப்பு
வெள்ளை
கருமை
மஞ்சல்
இந்த நான்கு வகை மணிகளும் கிட்டியது அதில் சிகப்பும் வெள்ளையும் மட்டுமே கண்றாக உற்பத்தியானவை மற்ற இரண்டும் எத்தனை மணிகளை போட்டும் முளைக்கவே இல்லை.
தற்போது கையிருப்பாக வெள்ளை மணி மட்டுமே இருக்கிறது. அதன் புகைப்படம் உங்களுக்காக இங்கே பகிர்கிறேன்.
சிலர் வெள்ளை குன்றி தான் அதிமதுரம் என்று கூற கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அது தவறான கருத்து. வென் குன்றி இலையும் சரி வேரும் சரி மிகவும் இனிப்பு சுவை உடையவை அதனால் அப்படி நினைத்திருக்கலாம்.
இது கொடியினத்தை சேர்ந்தது அனைத்துவகையும் ஒரே மாதிரியானவையே ஆனால் அவற்றின் பூ மணி மட்டும் வேருபடும்.
நன்றி.
No comments:
Post a Comment