Thursday, November 7, 2013

நூல் கட்டுதல் சிறு விளக்கம்

வணக்கம் தோழர்களே,

நூல் கட்டுதல் என்றால் என்ன என்ற சந்தேகமும் அதற்கான விளக்கமும் இங்கு குறிப்பாக பதிவிடுகிறேன்.

நூல் என்பது கடைகளில் கிடைக்கும் அட்ஷரம் கட்ட பயன்படும் நூல் தான். இதில் பல தனி வர்ணமும், பல வர்ணங்கள் சேர்ந்தாற்போலும் கிடைக்கும். பொதுவாக காவல் விடயமாக நூல் கட்டுவதானால் கருப்பு சிறந்தது. வசிய கர்மமாக இருந்தால் பஞ்சவர்ண நூல் சிறந்தது.

இதில் யாதேனும் விஷேடமாக இந்த நூல் தான் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அதை எடுக்க வேண்டும்.

நூல் மந்திரிக்கும் போது இத்தனை முடிச்சுக்கள் இட வேண்டும் என்று கூறப்பட்டால் அதை தவறாது இடவேண்டும். இல்லை என்றால் 9 பது முடிச்சுகள் இட்டு மந்திரிக்க வேண்டும்.

நூலை நன்றாக பன்னீரில் அலம்பி பின்னர் சந்தனம் குங்குமம் பூசி எடுத்து ஊதுபத்தி புகை படும்படியாக இருந்து மந்திரிக்க வேண்டும்.

இப்படி செய்து நூல் கட்டினால் அது நிச்சயம் பலன் தரும்.

நன்றி.

1 comment:

  1. ஐயா,
    யந்திரத்தை நூலால் கட்டுவது, தேங்காய் நூல் கட்டுவது, எலுமிச்சை யை நூலால் கட்டுவது பற்றி விளக்கவும்.....

    நன்றி.

    ReplyDelete